Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

ஜோதிடம் - கோள்களின் தன்மைகள்

June 2, 2023 | Total Views : 2,059
Zoom In Zoom Out Print

விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களில் ஒவ்வொரு கோளும் தனித்துவமான விட்டம், இயல்பு, ஆற்றலைக் கொண்டவை என்பதை தற்கால அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழும் சூழல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரம் ஆகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பொருள். ஒளிரும் முதன்மைக் கோளான சூரியனிடமிருதும், நட்சத்திரங்களிடமிருந்தும் வெளிப்படும் ஒளி அலைகள் பிற கோள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் போது அந்த கோள்களின் தன்மைகளையும் கலந்து பிரதிபலிக்கினறன. இந்த ஒளி அலைகள், பூமியில் வசிக்கும் உயிரினங்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஜோதிடம் நமக்கு உதவுகின்றது.

இந்த ஜோதிட சாஸ்திரமனது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும் அவை முறையே கணிதஸ்கந்தம், ஜாதகஸ்கந்தம், மற்றும் சம்ஹிதாஸ்கந்தம் ஆகும்.

ஜோதிடம் வேதத்தின் கண் எனப் போற்றப்படுகிறது. நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

அவை சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகும்.

ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதே ஒரு தனிப்பட்ட நபரின் சாதகமாக குறித்து வைத்து பின்னர் அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும், இந்த கோள்களின் நகர்வுகளுக்கும் தொடர்பு படுத்தும் அமைப்பு தான் ஜோதிடம் ஆகும்.

ஜோதிட வகைகள்

ஜோதிட சாத்திரம்: மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளில் இடம் பெற்றுள்ள நடசத்திர மண்டலங்கள் வழியாக, சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள் சஞ்சாரம் செய்வதால் ஏற்படுத்தும் சுகம் மற்றும் துக்கங்களை அறிய உதவும் கணித சாஸ்திரமே ஜோதிட சாஸ்திரம் ஆகும்.

ஆரூடம்: நாம் மேற்கொள்ளும் காரியம், அல்லது குறிப்பிட்ட செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கும் முறை.

பிரசன்னம்: பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல் வான்மண்டலத்தில் அப்பொழுது உள்ள அதாவது வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்திற்கு உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே பிரசன்னம் ஆகும். இதை ஆங்கிலத்தில் Horary என்று கூறுவார்கள்..

பஞ்ச பட்சி சாத்திரம்: வல்லூறு, ஆந்தை, கோழி, காகம், மயில் ஆகிய ஐந்து வகையான பறவை இனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆகும்.

வாஸ்து சாஸ்திரம்: வீடு, கட்டடங்கள், விவசாய நிலங்களின் தன்மைகளையும் அவற்றை தக்க வகையில் அமைத்துப் பயன்படுத்தும் முறைகளை கணிக்கும் முறை.

விருட்ச சாஸ்திரம்: குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம் வளர்ப்பவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், மரத்தின் தன்மைகளையும் கொண்டு கணிக்கும் முறை.

சாமுத்ரிகா சாஸ்திரம்: மனிதனின் உடலில் உள்ள அவயங்களின் அமைப்பு, அளவுகள், தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

மச்ச சாஸ்திரம் : உடலில் உள்ள மச்சங்களைக் கொண்டு ஒருவரின் குண நலன்களைக் கணிக்கும் முறை

ஜோதிடத்தில் ஒன்பது கோள்கள் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுகின்றன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகும்.


கோள்களின் தன்மைகள்

சூரியன்:

தேவதை

சிவன்

அதிதேவதை

நெருப்பு

பிரத்யதி தேவதை

ருத்திரன்

காரகம்

பிதா

க்ஷேத்திரம்

ஆடுதுறை

தானியம்

கோதுமை

புஷ்பம்

செந்தாமரை

உலோகம்

தாமிரம்

இரத்தினம்

மாணிக்கம்

நிறம்

சிவப்பு

வஸ்திரம்

சிவப்பு

குணம்

சாத்வீகம்

சுபாவம்

குரூரர்

சுவை

காரம்

சமித்து

எருக்கு

வாகனம்

மயில், தேர்

வடிவம்

சமன்

திக்கு

நடு

அங்கம்

மார்பு

தாது

எலும்பு

நோய்

பித்தம்

பாலினம்

ஆண்

பஞ்சபூதம்

நெருப்பு

ஆசனம்

வட்டம்

ஆட்சி வீடு

சிம்மம்

உச்ச வீடு

மேஷம்

மூலத்திரிகோண வீடு

சிம்மம்

நட்பு வீடு

கடகம், விருச்சிகம், தனுசு,  மீனம்

சம வீடு

மிதுனம், கன்னி

பகை வீடு

ரிஷபம், மகரம், கும்பம்

நீச வீடு

துலாம்

நட்பு கோள்கள்

சந்திரன், செவ்வாய், குரு

சம கோள்கள்

புதன்

பகை கோள்கள்

சுக்கிரன், சனி, இராகு, கேது

உபகிரகம்

காலன்

நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

தசா ஆண்டுகள்

6

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒரு மாதம்

தேசம்

கலிங்கம்

பார்வை

7

பிற பெயர்கள்

பானு,ஆதித்தன்,ரவி, பரிதி, ஞாயிறு, மார்த்தாண்டன், கதிரவன், தினகரன்

 

சிவன், தபசு தந்தை, தந்தை வழி உறவினர்கள், தலைவர்கள், அரச குலத்தை சேர்ந்தவர்கள், யாத்திரை செய்பவர்கள், நெருப்பு, மாணிக்கம் கோதுமை, தேன், தங்க நகைகள் செம்பு, அரசாங்க வேலை, யானை,. விதை, மரம், ஞாயிற்றுக் கிழமை, பகற்பொழுது, காடு, மலை, ஒளி, ரத்தினம், ரசவாதம் காரம், சிவப்பு நிறம், தைரியம், துணிவு, அதிகாரம், ஆத்ம சக்தி, வெற்றி, வலது கண், தலை எலும்பு, இதயம், மார்பு, ஒரு தலை நோய்,  உஷ்ண நோய்கள் பித்தம் ஆகியவற்றுக்கு சூரியன் காரகம் வகிக்கிறார்.

தியான சுலோகம்

ஜபாகுஸும ஸங்காஸம்

காஸ்யபேயம் மஹாத்யுதிம்|

தமோரிம் ஸர்வ பாபக்நம்

ப்ரணதோஸ்மி திவாகரம்||

 

சூர்ய காயத்திரி மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே; பாசஹஸ்தாய தீமஹி

தன்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்||

 

ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி

தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம் (தமிழ்)

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சுந்தரா போற்றி

வீரியா போற்றி வினைகள்

களைவாய் போற்றி போற்றி


சந்திரன் :

தேவதை

பார்வதி

அதிதேவதை

நீர்

பிரத்யதி தேவதை

கெளரி

காரகம்

மாதா

க்ஷேத்திரம்

திருப்பதி

தானியம்

பச்சரிசி, நெல்

புஷ்பம்

வெள்ளை அல்லி

உலோகம்

ஈயம்

இரத்தினம்

முத்து

நிறம்

வெண்மை

வஸ்திரம்

வெள்ளை

குணம்

சாத்வீகம்

சுபாவம்

சௌமியர்

சுவை

இனிப்பு

சமித்து

முருக்கு

வாகனம்

முத்து விமானம்

வடிவம்

குறியர்

திக்கு

தென்கிழக்கு

அங்கம்

தோள்

தாது

இரத்தம்

நோய்

சிலேத்துமம்

பாலினம்

பெண்

பஞ்சபூதம்

நீர்

ஆசனம்

சதுரம்

ஆட்சி வீடு

கடகம்

உச்ச வீடு

ரிஷபம்

மூலத்திரிகோண வீடு

ரிஷபம்

நட்பு வீடு

மிதுனம், சிம்மம், கன்னி

சம வீடு

மேஷம், துலாம், தனுசு, மகரம். கும்பம், மீனம்

பகை வீடு

இல்லை

நீச வீடு

விருச்சிகம்

நட்பு கோள்கள்

சூரியன், புதன்

சம கோள்கள்

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி

பகை கோள்கள்

இராகு, கேது

உபகிரகம்

பரிவேடன், கலைஞானபாதன்

நட்சத்திரங்கள்

ரோகினி, அஸ்தம், திருவோணம்

தசா ஆண்டுகள்

10

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

இரண்டேகால் நாட்கள்

தேசம்

யமுனா தேசம்

பார்வை

7

பிற பெயர்கள்

திங்கள், இந்து, மதி, சோமன், சசி, உடுபதி

 

தாய், தாய் வழி உறவினர்கள், பராசக்தி கணபதி, பெண்கள், வெண்மை நிறம், கடற்கரை, நீர்நிலைகள், வாசனைப் பொருட்கள். மூலிகைகள், வெள்ளி, வெண்ணெய், அரிசி,பால் பொருட்கள், பட்டு துணி, புகழ், முத்து முத்தாபரணம், தாவரங்கள் இலைகள், உழவன், வண்ணார்,உப்பளம், குதிரை,, குடை, புருவம், மனம், புத்தி, சிந்தனை, ஞாபகம், ஞாபகமறதி, சீதள நோய்கள், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சந்திரன் காரகம் வகிக்கிறார்.

தியான சுலோகம்

ததிஸங்க துஷாராபம்

க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|

நமாமி ஸஸிநம் ஸோமம்

ஸம்போர் மகுட பூஷணம்||

 

சந்திர காயத்திரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

தியான சுலோகம் (தமிழ்)

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி திருவருள் தருவாய்

சந்திரா போற்றி சத்குரு போற்றி

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி


செவ்வாய்:

தேவதை

சுப்பிரமணியர்

அதிதேவதை

பூ தேவி

பிரத்யதி தேவதை

க்ஷேத்ராதிபதி

காரகம்

சகோதரம்

க்ஷேத்திரம்

வைத்தீஸ்வரன் கோவில்

தானியம்

துவரை

புஷ்பம்

செண்பகம்

உலோகம்

செம்பு

இரத்தினம்

பவழம்

நிறம்

சிகப்பு

வஸ்திரம்

சிகப்பு

குணம்

சாத்வீகம்

சுபாவம்

குரூரர்

சுவை

துவர்ப்பு

சமித்து

கருங்காலி

வாகனம்

அன்னம்

வடிவம்

குறியர்

திக்கு

தெற்கு

அங்கம்

தலை

தாது

மஜ்ஜை

நோய்

பித்தம்

பாலினம்

ஆண்

பஞ்சபூதம்

நெருப்பு

ஆசனம்

முக்கோணம்

ஆட்சி வீடு

மேஷம், விருச்சிகம்

உச்ச வீடு

மகரம்

மூலத்திரிகோண வீடு

மேஷம்

நட்பு வீடு

சிம்மம். தனுசு மீனம்

சம வீடு

ரிஷபம், துலாம், கும்பம்

பகை வீடு

மிதுனம், கன்னி

நீச வீடு

கடகம்

நட்பு கோள்கள்

சூரியன், சந்திரன், குரு

சம கோள்கள்

சுக்கிரன், சனி

பகை கோள்கள்

புதன், இராகு, கேது

உபகிரகம்

தூமன், சுரேசன்

நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

தசா ஆண்டுகள்

7

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒன்றரை மாதம்

தேசம்

அவந்திநாடு

பார்வை

4,7,8

பிற பெயர்கள்

குசன், அங்காரகன்.மங்களன், சேய், நிலமகன், உதிரன், ஆரல்

 

சகோதர சகோதரிகள், சகோதர வழி உறவினர்கள். அரசர்கள், சேவகர்கள், எதிரிகள், திருடர்கள். கெட்டவர்கள், தளபதி, பவளம், துவரை, அக்னி பயம், துவேஷம், கடன்,  விதவைகள், சூடான பொருள், கசப்பு சுவை, செம்பு, பூமி, வீடு, ஆயுதங்கள் அசையா சொத்துக்கள், போர், கலக்கம், தைரியம் பொய், வன்முறை ரண நோய், அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு செவ்வாய் காரகம் வகிக்கிறார்.

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

தரணி கர்ப்ப ஸம்பூதம்

வித்யுத் காந்தி ஸமப்ரபம்|

குமாரம் ஸக்திஹஸ்தம் ச

மங்களம் ப்ரணமாம்யகம்||

 

செவ்வாய் காயத்திரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பௌம: ப்ரசோதயாத்||

தியான சுலோகம் (தமிழ்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே

குறைவிலாத ருள்வாய் குணமுடன் வாழ

மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்குவாய் போற்றி போற்றி

 


புதன்:

தேவதை

விஷ்ணு

அதிதேவதை

விஷ்ணு

பிரத்யதி தேவதை

நாராயணன்

காரகம்

மாமன்

க்ஷேத்திரம்

மதுரை சொக்கநாதர்

தானியம்

பச்சை பயறு

புஷ்பம்

வெண்காந்தள்

உலோகம்

பித்தளை

இரத்தினம்

மரகதம்

நிறம்

பச்சை

வஸ்திரம்

பச்சைப்பட்டு

குணம்

ராஜசம்

சுபாவம்

சௌமியர்

சுவை

உவர்ப்பு

சமித்து

நாயுருவி

வாகனம்

குதிரை

வடிவம்

நெடியர்

திக்கு

வடகிழக்கு

அங்கம்

கழுத்து

தாது

தோல்

நோய்

வாதம்

பாலினம்

அலி

பஞ்சபூதம்

நிலம்

ஆசனம்

அம்புவடிவம்

ஆட்சி வீடு

மிதுனம், கன்னி

உச்ச வீடு

கன்னி

மூலத்திரிகோண வீடு

கன்னி

நட்பு வீடு

ரிஷபம், சிம்மம், துலாம்

சம வீடு

மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்

பகை வீடு

கடகம்

நீச வீடு

மீனம்

நட்பு கோள்கள்

சூரியன், சுக்கிரன்

சம கோள்கள்

செவ்வாய், குரு, சனி, இராகு, கேது

பகை கோள்கள்

சந்திரன்

உபகிரகம்

அர்த்தப்பிரகரணன்

நட்சத்திரங்கள்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

தசா ஆண்டுகள்

17

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒரு மாத காலம்

தேசம்

மகத தேசம்

பார்வை

7

பிற பெயர்கள்

பண்டிதன், மாலவன், கணக்கன், அருணன், மால் கொம்பன், பாகன்  

தாய்மாமன், தத்து புத்திரர்கள், நண்பர்கள், வியாபாரிகள், கணக்கு பிள்ளை, சங்கீத வித்வான், ஓவியர்கள் மந்திரவாதி, விதூஷகர், பச்சை நிறம், எழுத்து, அச்சு எழுத்து, புத்தகம், நூலகம், சிறுவர்கள், கடைவீதிகள், வாக்குத்திறமை, ஜோதிடத்திறமை, விரல், தோல் நோய்கள், பாசிப்பயறு, வெந்தயம், நிலையான பேச்சு, காவியம், ஞானம், தூதுவன், தேர்ப்பாகன் ஆகியவற்றுக்கு புதன் காரகம் வகிக்கிறார்.

தியான சுலோகம்

பிரியங்கு கலிகா ஸ்யாமம்

ரூபேணாப்ரதிமம் புதம்|

ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்

தம் புதம் ப்ரணமாம்யகம்||

 

புதன் காயத்திரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புத: ப்ரசோதயாத்||

தியான சுலோகம் (தமிழ்)

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புத பகவானே பொன்னடி போற்றி

புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே

உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி


குரு:

 

தேவதை

பிரம்மன்

அதிதேவதை

இந்திரன்

பிரத்யதி தேவதை

பிரம்மன்

காரகம்

புத்திரம்

க்ஷேத்திரம்

ஆலங்குடி, திருச்செந்தூர்

தானியம்

கடலை

புஷ்பம்

முல்லை

உலோகம்

பொன்

இரத்தினம்

புஷப்ராகம்

நிறம்

மஞ்சள்

வஸ்திரம்

மஞ்சள்

குணம்

சாத்வீகம்

சுபாவம்

சௌமியர்

சுவை

இனிப்பு

சமித்து

அரசு

வாகனம்

யானை

வடிவம்

நெடியார்

திக்கு

வடக்கு

அங்கம்

வயிறு

தாது

மூளை

நோய்

வாதம்

பாலினம்

ஆண்

பஞ்சபூதம்

ஆகாயம்

ஆசனம்

செவ்வகம்

ஆட்சி வீடு

தனுசு, மீனம்

உச்ச வீடு

கடகம்

மூலத்திரிகோண வீடு

தனுசு

நட்பு வீடு

மேஷம், சிம்மம், விருச்சிகம்

சம வீடு

கும்பம்

பகை வீடு

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்

நீச வீடு

மகரம்

நட்பு கோள்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய்

சம கோள்கள்

சனி, இராகு, கேது

பகை கோள்கள்

புதன், சுக்கிரன்

உபகிரகம்

எமகண்டன்

நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தசா ஆண்டுகள்

16

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒரு வருடம்

தேசம்

சிந்துதேசம்

பார்வை

5,7,9

பிற பெயர்கள்

பிருகஸ்பதி, அரசகுரு, அந்தணன், அரசன், ஆசான், மறையோன்

பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அஷ்டமாசித்திகள், உபதேசம், அரச சேவை, தனம், ஒழுக்கம், சாந்தம், ரிஷிகள், ஆண்டிவர்க்கம், புத்திரன், புத்திரி, வியாழக்கிழமை, வித்வான், பொன் வெள்ளி நகைகள், மந்திரி, இனிப்பு, ஆசான் வக்கீல், சாஸ்த்திரிகள், வேதாந்தி, குருகுலம், பள்ளி, ஆலயங்கள், வழிபாட்டு இடங்கள், மடங்கள், மாடாதிபதிகள். தர்மம், தீர்க்க ஆலோசனை, மந்திர ஆலோசனை, ஜெபம், உடல் பருமன், மஞ்சள் காமாலை, தேன் ,கடலை, சீரகம் ஆகியவற்றுக்கு குரு காரகம் வகிக்கிறார்.

 

வியாழன் காயத்திரி மந்திரம்

ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம் (தமிழ்)

குணமிகு வியாழக் குரு பகவானே

மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்

ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா

க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி

தியான சுலோகம்

தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச

குரும் காஞ்சன ஸநிபம்|

பக்தி பூதம் த்ரிலோகேஸம்

தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||


சுக்கிரன்:

தேவதை

லக்ஷ்மி

அதிதேவதை

இந்திராணி

பிரத்யதி தேவதை

இந்திரன்

காரகம்

களத்திரம்

க்ஷேத்திரம்

ஸ்ரீரங்கம்

தானியம்

மொச்சை

புஷ்பம்

வெண்தாமரை

உலோகம்

வெள்ளி

இரத்தினம்

வைரம்

நிறம்

வெண்மை

வஸ்திரம்

வெண்பட்டு

குணம்

ராஜசம்

சுபாவம்

சௌமியர்

சுவை

தித்திப்பு

சமித்து

அத்தி

வாகனம்

கருடன்

வடிவம்

சமன்

திக்கு

கிழக்கு

அங்கம்

முகம்

தாது

இந்திரியம்

நோய்

சிலேத்துமம்

பாலினம்

பெண்

பஞ்சபூதம்

நீர்

ஆசனம்

ஐந்கோணம்

ஆட்சி வீடு

ரிஷபம், துலாம்

உச்ச வீடு

மீனம்

மூலத்திரிகோண வீடு

துலாம்

நட்பு வீடு

மிதுனம், மகரம், கும்பம்

சம வீடு

மேஷம், விருச்சிகம், தனுசு

பகை வீடு

கடகம், சிம்மம்

நீச வீடு

கன்னி

நட்பு கோள்கள்

புதன், சனி, ராகு. கேது

சம கோள்கள்

செவ்வாய், குரு

பகை கோள்கள்

சூரியன், சந்திரன்

உபகிரகம்

இந்திர தனுசு

நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம்

தசா ஆண்டுகள்

20

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒரு மாதம்

தேசம்

காம்போஜ தேசம்

பார்வை

7

பிற பெயர்கள்

பிருகு, சல்லியன், வெள்ளி, கவி, அசுரமந்திரி, பார்க்கவன்,சுங்கன்

களத்ரம் என்று சொல்லப்படும் கணவன் அல்லது மனைவி, இவர்களது உறவினர்கள், பிராமணர்கள், கலைஞர்கள்,, சங்கீதம், பிரியம், கந்த புஷ்பம், கஸ்தூரி, போன்ற வாசனாதி திரவியங்கள், கட்டில், மெத்தை, வெண்சாமரம், அழகு, புகழ், காதல், தாம்பத்ய சுகம், இளமை, சம்பத்து, வாகனம், மாலை, கொடி ரத்னம், வெள்ளி, கப்பல் வியாபாரம், ஸ்ரீ தேவதை உபாசனை, இலட்சுமி கடாட்சம், வாலிபர்,மங்கை, மணமக்கள், வெண்மை, சாம்பல் நிராம், பெண்கள், செல்வ வளம்,படுக்கை அறை, வழிபாட்டு இடங்கள், சந்தன மரம், தேர், வாக்குவாதம்,தீராத நோய்கள், பெண்கள் வழி லாபம் யோகம்,மொச்சை, புளி, ஈயம், ஆகியவற்றுக்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார்.

 

சுக்கிரன் காயத்திரி மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம்

ஹிமகுந்த ம்ருணாலாபம்

தத்யாநாம் பரமம் குரும்|

ஸர்வஷாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்கவம் ப்ரணமாம்யகம்||

 

தியான சுலோகம்

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே போற்றி


சனி:

தேவதை

எமன்

அதிதேவதை

பிரஜாபதி

பிரத்யதி தேவதை

எமன்

காரகம்

ஆயுள்

க்ஷேத்திரம்

திருநள்ளாறு

தானியம்

எள்

புஷ்பம்

கருங்குவளை

உலோகம்

இரும்பு

இரத்தினம்

நீலம்

நிறம்

கருப்பு

வஸ்திரம்

கருப்பு பட்டு

குணம்

தாமசம்

சுபாவம்

குரூரர்

சுவை

கசப்பு

சமித்து

வன்னி

வாகனம்

காக்கை

வடிவம்

குறியர்

திக்கு

மேற்கு

அங்கம்

தொடை

தாது

நரம்பு

நோய்

வாதம்

பாலினம்

அலி

பஞ்சபூதம்

காற்று

ஆசனம்

வில்வடிவம்

ஆட்சி வீடு

மகரம், கும்பம்

உச்ச வீடு

துலாம்

மூலத்திரிகோண வீடு

கும்பம்

நட்பு வீடு

ரிஷபம், மிதுனம், கன்னி

சம வீடு

தனுசு, மீனம்

பகை வீடு

கடகம், சிம்மம், விருச்சிகம்

நீச வீடு

மேஷம்

நட்பு கோள்கள்

புதன், சுக்கிரன், இராகு, கேது

சம கோள்கள்

குரு

பகை கோள்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய்

உபகிரகம்

குளிகன்

நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

தசா ஆண்டுகள்

19

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

இரண்டரை ஆண்டுகள்

தேசம்

சௌராஷ்டிரம்

பார்வை

3,7,10

பிற பெயர்கள்

கரியவன், மந்தன், அந்தகன், காரி, நீலன், செளரி முடவன்

வேலையாட்கள், சூது, மாமிசம், கூலி, அடிமைத்தொழில், பழி, பாவம், துக்கம், மேக நோய், வஞ்சனை, தரித்திரம், சிறை, அவமானம், முடவன், பயிர்கள், கட்டிடம், எந்திரம், வாதம், பித்தம், மலடு, வீண் வார்த்தை, சிறை, துன்பம், விபத்தால் மரணம், கருப்பு நிறம், கந்தல் துணி, சனிக்கிழமை, மேற்கு திசை, கணினி, கடன்கள், இரும்பு, துவர்ப்பு, ஏழை, முதியவர், விதவை, எண்ணெய், இரும்பு, கழுதை, எருமை, ஒட்டகம் கடுகு, உளுந்து, எள்ளு ஆக்கியவற்றுக்கு சனி காரகம் வகிக்கிறார்.

 

சனி காயத்திரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம் (தமிழ்)

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி

 

தியான சுலோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்|

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸநைச்சரம்||


இராகு:

தேவதை

பத்திரகாளி

அதிதேவதை

சர்ப்பம்

பிரத்யதி தேவதை

நிருருதி

காரகம்

பிதாமகன்

க்ஷேத்திரம்

காளஹஸ்தி

தானியம்

உளுந்து

புஷ்பம்

மந்தாரை

உலோகம்

கருங்கல்

இரத்தினம்

கோமேதகம்

நிறம்

கருப்பு

வஸ்திரம்

கருப்பு

குணம்

தாமசம்

சுபாவம்

குரூரர்

சுவை

புளிப்பு

சமித்து

அறுகு

வாகனம்

ஆடு

வடிவம்

நெடியர்

திக்கு

தென்மேற்கு

அங்கம்

முழங்கால்

தாது

--

நோய்

பித்தம்

பாலினம்

பெண்

பஞ்சபூதம்

ஆகாயம்

ஆசனம்

கொடி வடிவம்

ஆட்சி வீடு

இல்லை

உச்ச வீடு

விருச்சிகம்

மூலத்திரிகோண வீடு

இல்லை

நட்பு வீடு

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

சம வீடு

இல்லை

பகை வீடு

மேஷம், கடகம், சிம்மம்

நீச வீடு

ரிஷபம்

நட்பு கோள்கள்

சுக்கிரன், சனி

சம கோள்கள்

புதன், குரு

பகை கோள்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய்

உபகிரகம்

வியதிபாதன்

நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம்

தசா ஆண்டுகள்

18

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒன்றரை ஆண்டுகள்

தேசம்

பர்பர தேசம்

பார்வை

3, 7, 11

பிற பெயர்கள்

பாம்பு, கரும்பாம்பு, நஞ்சு, மதிப்பகை

தந்தை வழி பாட்டன், பாட்டி, செப்பிடு வித்தை, களவு, சேவகத் தொழில், வெளிநாடு, அன்னியர்கள், புதியவர்கள், மாமிசம் உண்பவர்கள், மலைவாசி, திருடர்கள், கோமேதகம், உளுந்து, கருப்பு நிறம், கருங்கல், ரேடியோ, பாம்பு, விஷம், நவீனப்பொருட்கள், விஷ நோய்கள், ஒய்வு, குடல், உடல் ஊனம், வேடிக்கை வினோத செயல்கள், மயக்கம், வாயு, குடல் நோய், பித்தம், வெட்டுக்காயம், பிளவை ஆகியவற்றுக்கு ராகு காரகம் வகிக்கிறார்.

 

தியான சுலோகம்

அர்த்தகாயம் மஹாவீர்யம்

சாந்த்ராதித்ய விமர்தநம்|

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||

 

இராகு காயத்திரி மந்திரம்

 

ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம் (தமிழ்)

அரவெனும் ராகு அய்யனே போற்றி

கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி

ராகுக்கனியே ரம்மியா போற்றி போற்றி

 


கேது:

 

தேவதை

இந்திரன்

அதிதேவதை

பிரம்மன்

பிரத்யதி தேவதை

சித்திரகுப்தன்

காரகம்

மாதாமகன்

க்ஷேத்திரம்

காளஹஸ்தி

தானியம்

கொள்ளு

புஷ்பம்

செவ்வல்லி

உலோகம்

துருக்கல்

இரத்தினம்

வைடூரியம்

நிறம்

சிகப்பு

வஸ்திரம்

பலவர்ணம்

குணம்

தாமசம்

சுபாவம்

குரூரர்

சுவை

புளிப்பு

சமித்து

தர்ப்பை

வாகனம்

சிங்கம்

வடிவம்

நெடியர்

திக்கு

வடமேற்கு

அங்கம்

உள்ளங்கால்

தாது

---

நோய்

பித்தம்

பாலினம்

அலி

பஞ்சபூதம்

நீர்

ஆசனம்

சிறு முறம்

ஆட்சி வீடு

இல்லை

உச்ச வீடு

விருச்சிகம்

மூலத்திரிகோண வீடு

இல்லை

நட்பு வீடு

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

சம வீடு

இல்லை

பகை வீடு

மேஷம், கடகம், சிம்மம்

நீச வீடு

ரிஷபம்

நட்பு கோள்கள்

சுக்கிரன், சனி

சம கோள்கள்

புதன், குரு

பகை கோள்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய்

உபகிரகம்

தூமகேது

நட்சத்திரங்கள்

அசுவினி, மகம், மூலம்

தசா ஆண்டுகள்

7

இராசியில் சஞ்சரிக்கும் காலம்

ஒன்றரையாண்டுகள்

தேசம்

அந்தர்வேதி

பார்வை

3,7,11

பிற பெயர்கள்

பாம்பு, செம்பாம்பு, கதிர்பகை, சிகி, ஞானி

 

தாய் வழி பாட்டன், பாட்டி, அன்னியர்கள், சிகப்பு, கருஞ்சிகப்பு, துரு, வடமேற்கு திசை, இழிவான தொழில், சொறி, சிரங்கு, உஷ்ணம், கீர்த்தி, விபச்சாரம், ஞானம், மோட்சம், ஆணவம், தந்திரம், வெளிநாட்டு ஜீவனம், வயிற்று வலி ரண சிகிச்சை, காயம் ஆகியவற்றுக்கு கேது கார்ரகம் வகிக்கிறார்.

 

 

தியான சுலோகம்

பலாஷ புஷ்ப ஸங்காஷம்

தாரகா க்ரஹ மஸ்தகம்|

ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்

தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

 

கேது காயத்திரி மந்திரம்

 

அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது: ப்ரசோதயாத்||

 

தியான சுலோகம் (தமிழ்)

கேதுத் தேவே கீர்த்தித் திருவே

பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்

வாதம் வம்பு வழக்குகளின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி

 

banner

Leave a Reply

Submit Comment