துளசி செடியாக இருந்த போதிலும் அதனை தெய்வமாக கருதி வலம் வந்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. திருமாலுக்கு மிகவும் பிரியமானவள் துளசி. அவள் சதா சர்வ காலமும் திருமாலை துதிப்பவள். எனவே தான் விஷ்ணு கோவில்களில் திருமாலுக்கு துளசி மாலை சாற்றி வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. துளசியில் மகா லட்சுமி வாசம் செய்வதாக ஓரு ஐதீகம். துளசியைப் பூஜை செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும். துளசிக்கு விருந்தாவணி என்ற பெயரும் உண்டு.
மேலும் துளசி மருத்துவ குணம் மிக்கது. துளசியில் பல வகைகள் உள்ளன. எனவே துளசியை பூஜித்தும் வலம் வந்து வணங்கும் போதும் அதனைப் பிரசாதமாக ஏற்கும் போதும் அதன் மருத்துவ குணங்கள் நம்மை காக்கின்றன. துளசி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
எனவே தான் துளசி ஆன்மீக மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. துளசி தியான ஸ்லோகம் மற்றும் துளசி காயத்ரி மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
த்யானம்
யந்மூலே சர்வதீர்த்தாநி யன்மத்யே சர்வதேவதா:
யதக்ரே சர்வவேதாஸ்ச துளஸீம் தம் நமாம்யஹம்
துளசி காயத்ரி மந்திரம்
ஓம் துளசியை வித்மஹி
விஷ்ணு ப்ரியை தீமஹி
தன்னோ விருந்தா ப்ரசோதயாத்
ஓம் துளசீயாயை வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்

Leave a Reply