Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search

ஸ்ரீ துர்கா சப்தசதி

March 6, 2023 | Total Views : 3,023
Zoom In Zoom Out Print

துர்கை வழிபாடு நவராத்திரியின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் அனைத்து நேரங்களிலும் அன்னை துர்கையை வழிபடலாம். வழிபாடுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் துர்கா சப்தசதி ஸ்லோகத்தை பாராயணம் செய்வதன் மூலம் அன்னை துர்கையின் ஆசிர்வாதங்களையும் அவள் அருளையும் நாம் பெறலாம் என்று தேவி பாகவத புராணம் வாயிலாக நாம் அறியலாம்.  சப்தசதி ஸ்லோகம் மார்கண்டேய புராணத்தில் உள்ளது. இது பல சமயங்களில் சண்டி ஹோமத்திலும் பாராயணம் செய்யப்படுகிறது. ஸ்ரீ துர்கா சப்தசதியை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இகபர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகீ  எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீ தேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இணையாகக் கருதப்படுகின்றது.

துர்கா சப்தசதி  ஸ்லோகங்கள்

சிவ உவாச-

தேவீத்வம் பக்தசுலபே ஸர்வகார்யவிதாயினி|

கலௌ ஹி கார்யஸித்த்யர்தமுபாயம் ப்ரூஹி யத்னத: ||

தேவி உவாச-

ஸ்ருணு தேவ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாதனம்|

மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பாஸ்துதி: ப்ரகாஸ்யதே||

ஓம் அஸ்ய ஶ்ரீ துர்கா ஸப்தலோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி: அனுப்டுப் சந்த:

ஶ்ரீமஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தேவதா: ஶ்ரீதுர்கா ப்ரீத்யர்தம் ஸப்தஸ்லோகீ துர்கேபாடே விநியோக:|

ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா|

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி|| (1)

பொருள்: ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஞானிகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹிக்கும்படி செய்கின்றாள்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன வசியம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி|

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதன்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா|| (2)

பொருள்: ஓ ஜகதம்பா, உமக்கு நமஸ்காரம்! ஏ துர்கே! உன்னை பக்தியுடன் நினைப்பவர்கள் மனதில் ஏற்படும் பயத்தை நீ அழிக்கிறாய். ஆபத்தை விலக்குகிறாய். உன்னை பக்தியுடன் த்யானிப்பவர்க்ளுக்கு நீ எண்ணிலடங்கா மங்களங்களை அருள்கிறாய்.  அன்னையே! உன்னைத் தவிர யாரால் தான் எங்களின் வறுமை, துக்கம், பயம்  எல்லாம் அகற்ற இயலும். நீ அன்பும் கருணையும் நிறைந்தவள். பக்தர்களை காப்பவள். எல்லா விதத்திலும் பக்தர்களுக்கு உதவி செய்பவள்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே|

சரண்யே த்ர்யம்பகே கௌரீ(தேவி) நாராயணீ நமோ(அ)ஸ்து தே|| (3)

பொருள்: ஓ ஜகதம்பா, உமக்கு நமஸ்காரம்! எல்லா மங்களகரமான பொருள்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளிப்பவள் நீயே! நீயே மங்கள ஸ்வரூபிணியாக எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவள்.  சூரியன் சந்திரன் நெருப்பு என்ற மூன்று கண்களைக் கொண்டு பக்தர்களின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உணர்த்துபவள் நீயே ! அப்படிப்பட்ட தேவியே! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

பல ஸ்ருதி:  எல்லா மங்களங்களும் உண்டாகும்.

சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே|

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே|| (4)

பொருள்: உனது திருவடியே சரணாகதி என்று உன்னை சரண் அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் நீக்குபவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

பலஸ்ருதி:  சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.

ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்துதே|| (5)

பொருள்: ஓ ஜகதம்பா, உமக்கு நமஸ்காரம்! நீ அனைத்து கடவுள்களின் அனைத்து வடிவங்களிலும் இருப்பவள்.   மேலும் நீ அனைத்து சக்திகளையும் படைத்தவள். ஏ ஜகன்மாதா உனக்கு எமது நமஸ்காரங்கள்! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

ரோகான-சேஷான-பஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமான் ஸகலான பீஷ்டான்|

த்வாமாஸ்ரிதானாம் ந விபன்ன

ராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி|| (6)

பொருள்: ஓ ஜகதம்பா, உமக்கு நமஸ்காரம்! எங்களின் பக்தியில் நீ திருப்தியடைந்தால், எங்களுடைய (உலக) நோய்கள் அனைத்தையும் அழித்து விடுகிறாய்; ஆனால் நீ எங்களிடம் அதிருப்தி அடைந்தால் (எந்த காரணத்திற்காகவும்), எங்கள் எல்லா அபிலாஷைகளையும் விருப்பங்களையும் அழித்து விடுகிறாய் (அதாவது அவை எப்போதும் நிறைவேறாமல் இருக்கும்)உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

ஸர்வா-பாதா-ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி|

ஏவ மேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்|| (7)

இதி ஶ்ரீ துர்காஸப்தஸ்லோகீ சம்பூர்ணம்||

பொருள்: ஓ ஜகதம்பா, உமக்கு நமஸ்காரம் ஓ அகிலேஷ்வரி -மூன்று உலகங்களுக்கும் தேவியே!, தயவு செய்து எங்களின் அனைத்து துன்பங்களையும் (உன் அருளால்) தணிக்கவும்.

பலஸ்ருதி: இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைவார்கள் இந்த மஹாத்மியத்தை கேட்ட பெண்கள் சுமங்கலித் தன்மையைப் பெறுவார்கள். மனிதன் லௌகீக மற்றும் ஆன்மீக இன்பங்கள் அனைத்தையும் (இகபர சுகங்கள்) அடைவான் என்று கூறப்பட்டுள்ளது.

banner

Leave a Reply

Submit Comment