குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி மனதை அமைதியாக வைத்துக் கொள்ள சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்தால் போதும். மனம் தெளிந்த நீரோடை போல மாறி விடும்.

இந்த பூமியில் நமது வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை என்ற போதும் நாம் எதையாவது தேடி ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம். பணத்தைத் தேடி, பதவியைத் தேடி, பொருளைத் தேடி என நமது தேடல் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த ஓட்டத்தில் நாம் அமைதியை தொலைத்துவிடுகிறோம்.எத்தனை குழப்பங்கள் மனதில் சஞ்சலங்கள். இதன் காரணமாக நிம்மதியை இழந்து விடுகிறோம். அதையும் தேடிக் கொண்டே இருக்கறோம். ஆனால் நிம்மதி எங்கிருந்தோ வருவது இல்லை. அது வெளியில் இருந்தும் வருவது இல்லை. இது பிறரால் நமக்கு அளிக்கக் கூடியதும் அல்ல. நாமாக நமக்குள் தேடிக் கொள்ள வேண்டிய உன்னதமான அமைதி. இந்த அமைதி நமது மனதுள் குடி கொள்ள வேண்டும் எனில் தெய்வீக, ஆன்மீக சூழலை நம்மைச் சுற்றி நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆன்மீக சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன் அமைதி தானாக வந்து விடும்.
மனக் குழப்பங்கள் அதிகம் இருந்தால் மன சஞ்சலங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு எத்தனயோ காரணங்கள் இருக்கலாம். மனக்குழப்பங்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், தூக்கமின்மை, எந்த வேலையையும் செய்ய நாட்டம் இல்லாமல் இருப்பது, வேலையில் கவனம் இல்லாமல் இருப்பது ஞாபகமறதி, தாழ்வு மனப்பான்மை, தனிமை உணர்வு என எதிர்மறை தாக்கங்களில் நாம் உழல வேண்டி இருக்கும். எனவே நமது அன்றாட பணிகளுக்கு இடையே நாம் நம்மை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் மன அமைதியைப் பெறலாம்.
காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து சுத்தமாக உடை அணிந்து இதனை செய்ய வேண்டும். இயலாதவர்கள் மாலையில் செய்யலாம். இரண்டு தொன்னைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது நெல்மணிகளை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது அகல் விளக்கு வைக்கவும். தொன்னை மற்றும் அகல் விளக்கை கும்குமம் மற்றும் மஞ்சள் கொண்டு அலங்கரிக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கினை ஏற்றவும். பிறகு “ஓம் நமசிவாய” மந்திரத்தை 108 முறை கூறவும்.
மனக்குழப்பம் தீர வழிபாடு இந்த பூஜையை நாம் அனுதினமும் செய்யலாம் அல்லது பிரதி திங்கட்கிழமை செய்யலாம் அல்லது பிரதோஷ நாட்களில் அல்லது அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் செய்யலாம்.
இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற் கொண்டு வர வீட்டில் இருக்கக் கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். தடைகள் அகலும். காரிய சித்தி ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமோடு வாழலாம்.
