உங்கள் வாழ்வில் அகத்தில் மற்றும் புறத்தில் இருக்கும் எதிரிகள் விலகவும் ஏவல், பில்லி, சூனியம், உங்களை அணுகாமல் இருக்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வில் அகத்தில் மற்றும் புறத்தில் இருக்கும் எதிரிகள் விலகவும் ஏவல், பில்லி, சூனியம், உங்களை அணுகாமல் இருக்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்குபவள் வாராஷி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுக்கும் தாயாகத் திகழ்கிறாள் வாராஹி. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல் , நல்ல எண்ணங்களுடன் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி அம்மனை வழிபடுபவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும் .
எதிரிகளை விரட்ட, நம் மீது விழும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க, ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வாராஹி அன்னையின் மூல மந்திரம் சொல்லி எளிய வழிபாட்டை மேற்கொண்டாலே போதும்.
வராஹி அம்மன் மூல மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வராஹி வராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நமஹ
ருந்தே ருந்தினி நமஹ
ஜம்பே ஜம்பினி நமஹ
மோஹே மோஹினி நமஹ
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட்
எதிரிகள் வெளியில் தான் இருப்பார்கள் என்பதில்லை. நமது மனதில் வரும் காம, குரோத, மோக, லோபம் கூட நமக்கு எதிரிகள் தான். நம் மனதில் எழும் பேராசை, பொறாமை போன்றவையும் நமது எதிரிகள் தான். எதிரிகள் நமது அகத்தில் இருந்தாலும், புறத்தில் இருந்தாலும் அவர்களிடம் இருந்து நம்மை காக்கும் தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை தாக்கங்களில் இருந்து நம்மைக் காப்பவள் வாராஹி அன்னை.
தினமும் காலையில் எழுந்து வாராஹி அன்னையை மனதில் எண்ணி பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறைக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். குறிப்பாக பஞ்சமி அன்று இந்த மந்திரத்தைக் கூறி அன்னையை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் பிரச்சனை வராது. சில பேருக்கு கண் திருஷ்டியின் மூலமாக வாழ்க்கையில் சில பின்னடைவுகள் இருக்கும். அதில் இருந்து மீளவும் இந்த மந்திரம் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும்.
