உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீடான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும், 5-ஆம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும் நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும். இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு என்ன பலன் தரும் என்று பார்க்கலாமா?
பொதுப்பலன்
உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எல்லா இடத்திலும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் உங்கள் திறமையை விரிவுபடுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு கிட்டும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்கவும் உதவும். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது இந்த காலகட்டத்தை திறம்பட வழிநடத்த உதவும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாலும் உங்கள் திறமைகள் மற்றும் தகவமைப்புத் திறனை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
உத்தியோகம்
இந்த பெயர்ச்சி உங்கள் உத்தியோகத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டும். தொழில் செய்பவர்கள் சந்தை நிலைக்கு தக்கவாறு தங்கள் திட்டங்களை மறுபரிசலனை செய்து அமைத்துக் கொள்வது நல்லது.
காதல் / குடும்ப வாழ்க்கை
காதலர்கள் ஈகோவைப் பொறுத்தவரை கவனமாக இருக்க வேண்டும். உறவில் சில கருத்து வேறுபாடுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் கூடும். மூத்த உடன் பிறப்புடன் கவனமாகத் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். அவர்கள் உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு உதவலாம்.கணவன் மனைவி உறவு சிறக்கும்.
நிதிநிலை
குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் இருக்கலாம்.பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். வருமானத்தில் சற்று தாமதம் இருக்கலாம்.
மாணவர்கள்
மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்து விளங்க கடினமாக உழைக்க வேண்டும். கூடுதல் முயற்சி வெற்றியை பெற்றுத் தரும். வெளிநாடு சார்ந்த முயற்சிகளில் தாமதத்தை எதிர் கொள்ள நேரும். மனம் தளராதீர்கள். ஆசிரியர் அல்லது அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும்.
ஆரோக்கியம்
இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உண்ணும் உணவில் கவனமாக இருங்கள்.
பரிகாரங்கள்:-
1. விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கையையும் (ராகுவின் அதிபதி) தினமும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
2. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் கணேஷ் பஞ்சரத்னம் மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.
3. சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும், அனாதை இல்லங்களுக்கு நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகளை வழங்கவும்.
4. மாதம் ஒருமுறை அருகிலுள்ள கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்யுங்கள்.
5. 'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ" என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.

Leave a Reply