குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கும் ஒரு எளிய பரிகாரம்

ஒரு நல்ல குடும்பம் ஆலயத்திற்கு சமமாகும். வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்து இருக்க வேண்டும். வீடு பெரிதாக இருக்கட்டும் அல்லது சிறியதாக இருக்கட்டும். வீட்டில் தெய்வீக சக்தி இருந்தால் அதனை நாம் நிச்சயமாக உணர முடியும். ஒவ்வவொரு வீட்டிற்கும் ஓரு அதிர்வலை இருக்கும். நம்முடைய வீட்டில் தெய்வீக ஆற்றலை அதிகப்படுத்த மந்திர ஓசைகள் ஒலிக்க வைக்க வேண்டும். தெய்வீக பாடல்களை சத்தமாக வைக்க வேண்டும். உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்தர் சஷ்டி கவசம் போன்ற பாடல்களை ஒலிக்க வைக்க வேண்டும்.
நமது வீட்டில் குல தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். குல தெய்வம் வீட்டில் இருந்தால் அங்கு வாழும் பெண்கள் பக்தியுடன் இருப்பார்கள். வீட்டில் நல்ல நிகழ்வுகள் இருக்கும். கனவில் குல தெய்வம் வரும். வீட்டில் நல்ல நறுமணம் இருக்கும். வீட்டில் யார் மேலாவது சாமி வரும். அல்லது வீட்டில் இருப்பவர்கள் அருள் வாக்கு கூறுவார்கள். இந்த நிகழ்வுகளை எல்லாம் வைத்து வீட்டில் குல தெய்வம் இருப்பதை உணரலாம்.
மேலும் குலதெய்வம் மட்டுமல்ல எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத இல்லங்களில் எந்த உயிரினங்களும் வசிப்பது கிடையாது. குறிப்பாக பல்லி போன்ற சிறு உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வ சக்தி இருப்பதை நீங்கள் அறியலாம். கௌலி கத்தும் சத்தம் அடிக்கடி வீட்டில் கேட்டால் குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இருப்பதாக நீங்கள் உணர முடியும்.
குல தெய்வம் நம் வீட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் மற்றுமொரு எளிய வழி உள்ளது. ஒரு அமாவாசை அன்று கருப்பு புள்ளிகள் இல்லாத நல்ல மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சை பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பூஜைகளை முடித்து சாமி அறையில் வைக்க வேண்டும். அடுத்த அமாவாசை வரை அதனை வைக்க வேண்டும். அந்த எலுமிச்சைப் பழம் கெடாமல், பூஞ்சை படராமல் காய்ந்து மட்டும் போனால் குல தெய்வ நடமாட்டம் உள்ளது என்பதை அறியலாம்.
குல தெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் நமது உடலையும் மனதையும் நாம் வாழும் இல்லத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நேர்மறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தெய்வம், கொண்டாடும் இடத்தில் தான் இருக்கும். தெய்வம் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு மற்றும் நல்ல செயல்கள் தான்.
குலதெய்வம் நம்மை காத்து நிற்கிறதா? நமது வீட்டில் இருக்கிறதா? என்னும் ஐயம் சிலருக்கு வரலாம். இல்லாதது போல இருந்தால் குல தெய்வத்தை வரவழைக்க ஓரு எளிய பரிகாரம்.
அதற்கு முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து வைக்க வேண்டும். உங்கள் குல தெய்வத்திற்கு உரிய நாளில் இந்த பூஜையை செய்ய வேண்டும். நல்ல மனையில் கோலம் இட்டு வாழை இலை பரப்பி அதில் அரிசி வைக்க வேண்டும். பிறகு கலசம் வைக்க ஒரு சொம்பில் நீர் நிரப்பி அதில் மஞ்சள் குங்குமம், ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் போட்டு மாவிலையை வைத்து அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும். அல்லது தேங்காய் வைக்காமலும் செய்யலாம். கலசம் வைத்து முடித்த பிறகு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு மண் அகல் விளக்கு ஏற்றி. உங்கள் குல தெய்வ மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்கள் குல தெய்வத்தை மனமார வேண்டி வழிபடவேண்டும்.
உங்கள் பூஜைக்கு மனமிரங்கி குல தெய்வம் வரும். இதனை நீங்கள் அறிந்து கொள்ள இயலும். நீங்கள் எதுவம் செய்யாமலேயே கலசத்தில் உள்ள நீர் அசையும் இதை வைத்து நீங்கள் குல தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்ததை உணர முடியும். உண்மையான பக்தி அவசியம்.
