Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

September 27, 2019 | Total Views : 934
Zoom In Zoom Out Print

புரட்டாசி என்றாலே புண்ணிய மாதம் ஆகும். அறிவியல் ரீதியாக இந்த மாதம் அதிக வெயிலுமின்றி மழையுமின்றி ஒரு விதமான மிதமான சீதோஷ்ண நிலை காணப்படும். இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நாம் உணவு உட்கொள்வதன் மூலம் நமது ஜீரண சக்தி மேம்படும். உடலுறுப்புகள் சீராக இயங்கும். எனவே தான் இந்த மாதம் அசைவ உணவை தவிர்ப்பது வலியுறுத்தப்படுகின்றது.  மேலும் இந்த தருணத்தில் இறை வழிபாட்டில் நம் மனதை செலுத்துவதன் மூலம் நமது மனதில் ஒரு கட்டுப்பாடு உணர்வு வளர்கின்றது. இது நமது வளமான வாழ்விற்கு வித்திடுகின்றது.

மேலும் புரட்டாசி மாதம் பகவான் விஷ்ணுவிற்கு உரிய மாதம் என்பது ஆன்மீக ரீதியாக ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆகும்.  புரட்டாசி முழுவதும் நாம் விஷ்ணுவை வழிபடுவதற்கு ஏற்ற தருணம் என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு பல சிறப்பான பலன்களை நமக்கு வழங்குகின்றது.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடு மூலம் சனி பகவானால் ஏற்படும் தோஷத்தின் வீரியம்  குறைகின்றது. சனி பகவான் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைககேற்ப நமக்கு வாழ்வில் பலன்களை அளிக்கும் நடுநிலை நாயகனாய் விளங்குகின்றார்.  எனவே சனிக்கிழமை பகவான் விஷ்ணுவிற்கும் உரிய மாதம் என்பதால் புரட்டாசி மாதம் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் புண்ணியம் பலவும் வாழ்வினில் வந்து சேரும்.

புரட்டாசி மாதம்  வரும் சனிக்கிழமையில்  விரதம்  இருந்து பெருமாளை நாம் வழிபடுவதன் மூலம் வருடம் முழுவதும் உள்ள  சனிக்கிழமைகளில்  நாம் பெருமாளை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமைகள் நாம் நமது மனதையும் இல்லத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு வீட்டினில் விளக்கு ஏற்றி பகவானுக்கு உரிய பொருட்களை நிவேதனம் செய்து விரதம் இருந்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் சுபிட்சம் பெருகும். அருகில் உள்ள விஷ்ணு கோவில் சென்று வழிபடுவது சிறப்பு. மேலும் நவகிரகங்களில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு ஆகும். 

 

banner

Leave a Reply

Submit Comment