Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Dhanusu 2019 – 2020

February 16, 2019 | Total Views : 2,442
Zoom In Zoom Out Print

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

கல்வியும், ஞானமும், தான் கொண்ட கொள்கையில் வரட்டு பிடிவாதமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். பொருளாதார நிலையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், வீண் செலவுகளை தவிர்த்து எதிலும் சிக்கனமாக செயல்படுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விழிப்புணர்வுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இந்த வருடம் முழுவதும் குருபகவான் அடுத்தடுத்து 12 மற்றும் 1 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும்,குருபகவான் உங்கள் ராசி அதிபதி ஆவதால், படிப்பினைகளை தருவாரேயன்றி, தீமைகளை ஏற்படுத்த மாட்டார். இந்தவருடம் முழுவதும் 1.2 இல் சனிபகவான் ஏழரை சனியாக சஞ்சரிப்பதால் மிதமான பலன்கள் ஏற்படும். ராகு, கேது 7,1 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும் குருவின் பார்வையால் தீமைகள் குறைந்து நன்மை அதிகரிக்கும். இந்த வருடம் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால்பொருளாதார நிலையில் தட்டுப்பாடு ஏற்படும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டிற்கு தேவையான சுப செலவுகளை மேற்கொள்வது நல்லது. அயலாரிடம் பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீடு, மனை சேரும் யோகம் உண்டு. மறைமுக எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் பழைய பிரச்சினைகளையும், நிகழ்வுகளையும் நினைத்து கவலைப் படுவீர்கள். மனகுழப்பமும், மனஅழுத்தமும் அதிகரிக்கும். தியானம், கடவுள் வழிபாடு மனஅமைதி தரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எந்த முடிவெடுப்பதற்கும் பல முறை சிந்திப்பது நல்லது. கோபத்தை தவிர்த்து எதிலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடியுங்கள்.குடும்பத்தில் உங்களுக்கு நம்பகமானவரிடம் மனம் விட்டு பேசுவது மன அழுத்தத்தை குறைக்கும்.

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 7,1 இல் இருப்பதால்,கணவன் மனைவிக்குள் சிறு, சிறு பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். குடும்ப விஷயங்களில் வெளியாட்கள் தலையீட்டை தவிர்க்கவும். சந்தேக மனப்பான்மை விடுத்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதும் நன்மை தரும். மனதில் தேவையற்ற குழப்பம், பயம் ஏற்படுமென்பதால் தியானம் போன்ற மனவள பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதும், பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது. கடந்த கால விஷயங்களை நினைத்து வருந்துவதோ, கவலை மற்றும் விரக்தி அடைவதை தவிருங்கள். எப்போதும் உற்சாகமாக இருங்கள். நேர்மறை எண்ணங்களையும் வளர்த்து கொள்ளுங்கள்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ரசியிலே ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் மந்தநிலை ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். எந்த விஷயத்திலும் பொறுமையாக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். யாரையும் முழுமையாக நம்பி செயலில் இறங்காதீர்கள். முயற்சிகளில் தடை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு அவசியம்.

சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் மந்த தன்மை உண்டாகும். வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.மற்றவர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரிகளே:

வியாபாரத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் அவர்களை கண்காணிப்பில் வைத்து வழி நடத்தி செல்வது நல்லது. எதிர் நிறுவனங்களின் கை ஓங்கும். பொறுமை தேவை.

உத்தியோகஸ்தர்களே:

உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திப்பீர்கள். உயரதிகாரிகள்,சக ஊழியர்களிடம் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். அலுவலக ஆவண விஷயங்களில் கவனம் தேவை.

மாணவ மாணவியர்களே:

படிப்பில் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியம், உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்துகொள்ளுங்கள். காதல் போன்ற வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். தேவையற்ற நட்பை விலக்கவும். ஆசிரியர்களுடன் நட்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். விடா முயற்சியும், கடின உழைப்பும் கல்வியில் வெற்றி தரும்.

அரசியல்வாதிகளே:

தலைமையிடம்கருத்து வேறுபாடுகளும், மன கசப்புகளும் ஏற்படும். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம்.மக்கள் ஆதரவு குறைய வாய்ப்புள்ளதால், மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுங்கள்.

கலைத்துறையினரே:

தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புக்கள் தாமதமாகலாம். பிரபலங்களை பகைத்து கொள்ள வேண்டாம். எதிலும் தடுமாற்றம் வருகிறதே என கவலைப்பட வேண்டாம். பொறுமையும், விடா முயற்சியும் வெற்றி தரும்.

பரிகாரம்:

  • திருச்செந்தூர் முருகன் மற்றும் குருபகவனை பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • குழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். மகான் மற்றும் குருவின் ஆசி பெறுதல். கோவிலுக்கு ஆன்மீக பணி செய்தல். ஊனமுற்றோர்க்கு உதவுதல். பாம்பு புற்றுக்கு பால் வார்த்தல்.
     

Leave a Reply

Submit Comment