Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Simmam 2019 – 2020 )

February 16, 2019 | Total Views : 4,320
Zoom In Zoom Out Print

(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)

ஆளுமை பண்பும், அதிகாரம் செய்யும் திறனும், வல்லமையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரியன் 9 இல் உச்சம் பெற்று இருப்பதால், எதிலும் விவேகமும்,வெற்றி பெறும் சூழ்நிலையும் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பெயர். புகழ் அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கோபம், பேராசை மற்றும் முரட்டு செயல்பாடுகளை தவிர்க்கவும்.


குருபகவான் 5/11/2019 வரை 4 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 5 இல் சஞ்சரிப்பது நன்மை. சனிபகவான் 24/1/2020 வரை 5 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 6 இல் சஞ்சரிப்பது நன்மை. தற்போதைய ராகு, கேது 11,5 இல் சஞ்சரிப்பதும் நன்மையான பலன்களையே தரும். இந்த வருடம் நீங்கள் 75 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள். 

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 4 இல் சஞ்சரிப்பதால், சிறு சிறு தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வீண் பிரச்சினைகள் உருவாகும் என்பதால் கவனம் தேவை. சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர பயணங்கள், நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாய் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் சுமூகமான அணுகுமுறை தேவை. 

5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால் குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்போருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். மனம் தெளிவடையும்.தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். 

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 11,5 இல் சஞ்சரிப்பதால் உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதி, வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.குழந்தைகளால் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினை வந்து நீங்கும்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து பிரச்சினை ஏற்படும். மன குழப்பம், மன உளைச்சலால் முக்கிய முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். குழந்தைகளால் பிரச்சினைகளும்,மனக்கசப்புகளும் ஏற்படுமென்பதால் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்தி செல்வது நல்லது. மனதை கட்டுப்பாடுடனும், திடமாகவும் வைத்து செயலாற்றினால் எளிதில் தடைகளை கடந்து சாதனை படைக்கலாம். 

சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 6 இல் சஞ்சரிப்பதால் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றி ஏற்படும். சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகும். எதிரிகள் விலகி செல்வார்கள். உடல் நலத்தில் ஆரோக்கியம் உண்டாகும்.பிரிந்து சென்ற உறவுகள் தேடி வந்து உறவாடும். முயற்சிகள் வெற்றி அடையும்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை வியாபாரத்தில் நிலையற்ற தன்மையும்,பிரச்சினைகளும் உருவாகும். பணப்புழக்கம் குறையும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் பிரச்சினை உருவாகும் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 5/11/2019 க்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019, வரை உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினைகள் உருவாகும். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சிறு, சிறு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 5/11/2019 க்கு பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019, வரை உடல் ஆரோக்கிய குறைவால் படிப்பில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்து கொள்ளவும். காதல் போன்ற விசயங்களால் வீண் பிரச்சினையில் சிக்க வேண்டாம். நண்பர்கள், ஆசிரியர்களிடம் நல்ல உறவை வளர்த்து கொள்ளுங்கள். விடாமுயற்சி வெற்றி தரும். 5/11/2019 க்கு பிறகு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை தலைமையுடன் மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். சகாக்களால் மறைமுக பிரச்சினைகள் உருவாகும். பகைமையை தவிர்க்கவும்.மக்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். தேவை இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தவறான செயல்பாடுகள் மற்றவர்களால் கவனிக்கப்படும் என்பதால் கவனம் தேவை. 5/11/2019 க்கு பிறகு சுமூகமான நிலை உருவாகும்.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்பு கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம். பிரபலங்களை பகைத்து கொள்ள வேண்டாம். உங்கள் தனித்திறனை வெளிப்படுத்த இயலாமல் போகலாம். பொறுமையும், கவனமும் அவசியம். 5/11/2019 க்கு பிறகு நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்:

  • சிவபெருமானுக்கு  பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழி படுவதும் நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • குழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். மகான் மற்றும் குருவின் ஆசி பெறுதல். கோவிலுக்கு ஆன்மீக பணி செய்தல்.
     

Leave a Reply

Submit Comment