கடகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Kadagam 2019 – 2020 )

Invoke Guru Dattatreya To Remove Suffering and Gain Happiness JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

கடகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Kadagam 2019 – 2020 )

February 16, 2019 | Total Views : 5,183
Zoom In Zoom Out Print

(புணர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அரசியலில் அதிக ஆர்வமும், அனைவரையும் அன்பால் அரவனைத்து செல்லும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திரன், உங்கள் ராசியிலே பலம் பெற்று இருப்பதால், உங்கள் தனித்திறன் வெளிப்படும். ஆளுமை பண்பும், மற்றவரை அதிகாரம் செய்யும் நிலையும் ஏற்படும். உங்கள் விவேகமும், விடாமுயற்சியும் வெற்றியைத் தரும். பெயர், புகழ். அந்தஸ்து, மரியாதை அதிகரிக்கும்.

குருபகவான் 5/11/2019 வரை 5 இல் சஞ்சரிப்பது நன்மை என்றாலும்,5/11/2019 க்கு பிறகு 6 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. சனிபகவான் தற்போது 6 இல் சஞ்சரிப்பது நன்மை. 24/1/2020 க்கு பிறகு 7 இல் கண்டகச்சனியாக சஞ்சரிப்பது நன்மை இல்லை. தற்போதைய ராகு, கேது பெயர்ச்சி 12,6 மிகுந்த சாதகமான நிலை. இந்த வருடத்தில் நீங்கள் 70 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால்,உங்கள் வாழ்வில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். உடல் நிலை ஆரோக்கியம் பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வந்து சேரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனம் தெளிவாகும். சிந்தனை திறன் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். 

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 6 இல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். நட்பு மற்றும் உறவுகளில் பகைமை உண்டாகும் என்பதால் கவனம் தேவை. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கடன் வாங்கும் சூழல் ஏற்படும். 

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 12, 6 இல் சஞ்சரிப்பதால் தங்கள் செயல்பாடுகளில் தடை, மன உளைச்சல் உண்டாகும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வீண்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மறைமுக எதிரிகளை கண்டு கொள்வீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். பலவகையில் பணம் வந்து சேரும். உங்கள் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பீர்கள்.    வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாழ்வின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் அமையும். உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 6 இல் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறும் காலம். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் உற்சாகம்,தைரியம் அதிகரிக்கும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். உங்கள் செயல்பாடுகளில் நேர்த்தியும், வெற்றியும் உண்டாகும். சொத்து பிரச்சினை மற்றும் வழக்குகள் சாதகமாகும். வாழ்க்கை தரம் மேம்படும். எதிலும் முன்னேற்றம் ஏற்படும்.

சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் எதிலும் தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும்.மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகும். மற்றவர்களால் அவமானமும், ஏமாறும் சூழ்நிலையும் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை எதிலும் நல்ல மாற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். இருப்பினும் கட்டுப்பாடுடன் செயல்படுவது நல்லது. வருமானமும், பணபுழக்கமும் அதிகரிக்கும். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். புகழ், மரியாதை அதிகரிக்கும். 5/11/2019 க்கு பிறகு எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை உங்கள் முயற்சியால் படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். உங்கள் அறிவு திறன் வெளிப்படும். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 5/11/2019 க்குப் பிறகு உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை தலைமையிட நெருக்கம் அதிகரிக்கும். சகாக்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் சமூக செயல்பாடுகளால் மக்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். புகழ், மரியாதை அதிகரிக்கும். ஆதரவு பெருகும். பதவிகள் தேடி வரும்.5/11/2019 எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, உங்கள் தனித்திறனை வெளிப்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். வி‌ஐ‌பிக்கள் அறிமுகம் ஆவார்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டும் நிலை உருவாகும். 5/11/2019 எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

பரிகாரம்:

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos