Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கன்னி ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Kanni 2018 - 2019 )

March 28, 2018 | Total Views : 5,210
Zoom In Zoom Out Print

(உத்திரம் 2,3,4 ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்) எந்த சூழ்நிலையையும், தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கன்னி ராசி அனபர்களே, உங்கள் ராசி நாதன் புதன் 7 ல் வக்கிரம் பெற்று ராசியை பார்ப்பதால் உங்கள் தனித்திறன் அதிகரிக்கும். எதிலும் உங்கள் தனித்திறமையை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் அதீத நம்பிக்கை மற்றும் அதீத செயல்பாட்டை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையால் நன்மைகள் உண்டாகும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணவரவு உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இனிய பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றி ஆகும். 11/10/2018 க்கு பிறகு எதிர்காலம் பற்றிய பயம், கவலை ஏற்பட வாய்ப்புள்ளதால் நேர்மறை எண்ணத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பது நல்லது. விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம். ராகு, கேது முறையே 6/3/2019 வரை உங்கள் ராசிக்கு 11,5 ல் சஞ்சரிப்பதால் பல வகையில் பணவரவும், அனுகூலங்களும் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும், நண்பர்களால் ஆதாயங்கள் உண்டாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பங்களை தவிர்த்து சிந்தித்து செயல் படுங்கள். 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 10,4 ல் வருவதால் உங்கள் தனித்திறன் வெளிப்படும். கால, நேரம் பார்க்காமல் ஓடி, ஓடி உழைப்பீர்கள். அந்தஸ்து, செல்வாக்கு, அதிகாரம் அதிகரிக்கும். உங்கள் துறையில் புகழ் பெறுவீர்கள். தாய் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். குல தெய்வ வழிபாடு மிகவும் அவசியம். வீடு, வாகனம் சம்பந்தமான ஆவணங்களை கவனமுடன் கையாளுங்கள். tamil-puthandu-rasi-palangal-kanni-2018-2019 சனிபகவான் வருடம் முழுவதும் 4 ல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள், நீண்டதூர பயணங்களை தவிர்ப்பதால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம். தாய் உடல் நிலை பாதிப்பு உண்டாகும். தாய் மற்றும் உறவினர்களுடன் சிறு கருத்து மோதல் வந்து நீங்கும். வீடு, நில, வாகன ஆவணங்களில் கவனமுடன் கையாள்வது நல்லது. வியாபாரிகளே: 11/10/2018 வரை உங்கள் வியாபாரம் பல மடங்கு பெருகும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். இனிமையாக பேசி அனைத்து வாடிக்கையாளர்களையும் கவருவீர்கள். 11/10/2018 க்கு பிறகு புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வியாபார முன்னேற்றத்தில் மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாவர்கள். புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். 11/10/2018 க்கு பிறகு எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். உயரதிகாரிகள், சக ஊழியர்களிடம் கவனம் தேவை. மாணவமாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். 11/10/2018 க்கு பிறகு தேவையற்ற வீண் விஷயங்களில் தலையிட வேண்டாம். தைரியமும், விடாமுயற்சியும் வெற்றி தரும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமையின் பாராட்டினை பெறுவீர்கள். சகாக்களால் ஆதாயம் உண்டு. மக்களிடம் பிரபலமாவீர்கள். 11/10/2018 தலைமையிடம் கவனம் தேவை. தேவையற்ற வீண் வதந்திகள் பரவ வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கலைத்துறையினரே: 11/10/2018 தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். 11/10/2018 புதிய வாய்ப்புகள் தாமதமாகும். விடாமுயற்சி மற்றும் விவேகத்துடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம். பரிகாரம்:
  • ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ உதவி, பண உதவி செய்தல்.
  • ஸ்ரீ சனிபகவான் மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • Leave a Reply

    Submit Comment