AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Rishabam 2019 – 2020 )

dateFebruary 16, 2019

(கார்த்திகை - 2,3,4 ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்)

எப்போதும் பொறுமையும், தக்க தருணத்தில் தனது வீரத்தையும் வெளிப்படுத்தும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன்  10 இல் சஞ்சரிப்பதால் உங்கள் அனைத்து செயல்பாடுகளிலும் தனித்திறனை வெளிப்படுத்துவீர்கள். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் தனது சுய முயற்சியால் தடைகளை வென்று சாதனை படைப்பீர்கள். எதிலும் பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
குருபகவான் 5/11/2019 வரை 7 இல் சஞ்சரிப்பது சாதகமான நிலை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 8 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. இருப்பினும் 24/1/2020 வரை அஷ்டமச்சனி தொடர்வது குருவின் சேர்க்கையால் பாதிப்புகள் குறையும். மேலும் ராகு, கேது 2,8 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், கேதுவுடன் குரு சேர்க்கை மற்றும் ராகுவை குரு பார்ப்பதும், தீய பலன்களை குறைத்து நன்மையை அதிகரிக்கும். இந்த வருடத்தில் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால்,எதிலும் சுமூகமான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் உண்டாகும். தடைகள் நீங்கி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். மற்றவரின் ஒதுழைப்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 8 இல் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வீண் விவாதங்களை தவிருங்கள். பிறரை நம்பி ஏமாற வேண்டாம்.

ராகு கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 2,8 இல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் மனக் கசப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையில் தேக்கம் ஏற்படுமென்பதால் வீண்செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. இல்லையெனில் வீண் வாக்கு வாதங்களால் சிறு பிரச்சினைகள் ஊதி பெரிதாக்கப்படும். முயற்சிகளில் தடை ஏற்படும். சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல், அறிவுபூர்வமாக சிந்தித்து செயல் பட்டால் ஏமாற்றத்தையும், தோல்வியையும் தவிர்க்கலாம்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 8 இல் இருப்பதால் எதிலும்  தடைகளை சந்திப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால் உங்கள் முன்னேற்றத்திற்கான இடர்பாடுகளை தவிர்த்து வெற்றி பெறலாம். உங்கள் நோக்கத்தில் கவன சிதறல்களை தவிர்க்கவும். 

24/1/2020 க்கு பிறகு சனிபகவான் உங்கள் ராசிக்கு 9 இல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். எதிர்த்தவர்கள் விலகி செல்வார்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உண்டாகும். தந்தை உடல் நிலை பாதிப்பு அடையும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். 

வியாபாரிகளே:

வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் ஓரளவு சீரான முன்னேற்றம் உண்டு. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பதும் தொடர்ந்து கன்காணிப்பில் வைத்து கொள்வதும் நல்லது. 5/11/2019 முதல் எதிலும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களே:

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமுடன் இருங்கள். வெளிப்படையாக பேசுவதைதவிர்க்கவும். மற்றவர்களை அனுசரித்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலக ஆவண விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

மாணவ மாணவியர்களே:

படிப்பில் மிகுந்த கவனம் தேவை. தேவையற்ற வீண் விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலம் உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் ஆசிரியருடன் நல்ல நட்பை வளர்த்து கொள்ளுங்கள். தவறான நட்பை தவிர்க்கவும். காதல் விஷயங்களை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளே:

தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். சகாக்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். மக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையும், கவனமும் தேவை. தேவை இல்லாத விஷயங்களிலும், தவறான செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.

கலைத்துறையினரே:

தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தள்ளி போகலாம். உங்கள் தனித்திறனை வெளிப்படுத்த இயலாமல் போகலாம். பொறுமை அவசியம். முக்கிய நபர்களை பகைத்து கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்:

  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழி படுவதும் நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • இயலாதவர் மற்றும் முதியோருக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை தரும். எறும்பு, காகம் மற்றும் நாய்க்கு உணவளியுங்கள். தாய், தந்தை பெரியோர்களிடம் ஆசி பெற்று பணிவிடை செய்தல்.
     

banner

Leave a Reply