(அஸ்வினி, பரணி, கார்த்திகை -1 ம் பாதம்)
எதிலும் உத்வேகத்துடன், விடாமுயற்சியுடன் செயல் பட்டு வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டில் இருப்பதால் பொருளாதார நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீண் விவாதங்களால் பிரச்சினை உண்டாகும் என்பதால் கவனம் தேவை. கோபத்தை தவிர்த்தால் நன்மை விளையும்.
இந்த வருடம் 5/11/2019 வரை குருபகவான் 8 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும் 5/11/2019 க்கு பிறகு 9 இல் சஞ்சரிப்பது மிகுந்த சாதகமான அமைப்பு ஆகும். சனிபகவான் 24/1/2020 வரை 9 இல் சஞ்சரிப்பதும், 24/1/2020 க்கு பிறகு 10 இல் சஞ்சரிப்பதும் சாதகமான பலன்களை தரும். ராகு பகவான் வருடம் முழுவதும் 3 இல் சஞ்சரிப்பதும் சாதகமாக இருந்தாலும், கேது பகவான் 9 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. இந்த வருடத்தில் நீங்கள் 70 சதவீதம் நற்பலன்களை பெறுவீர்கள்.
குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 8 இல் சஞ்சரிப்பதால், எந்த காரியத்திலும் கவனமாக செயல்படுங்கள். கவனக்குறைவு, ஞாபக மறதியால் பிரச்சினை ஏற்படும் என்பதால் எதிலும் கவனமுடன் இருங்கள். எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுங்கள். சிறு சிறு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீண் பிரச்சினை, விரோதங்களை தவிர்க்கவும்.
குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 9 இல் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தெளிவாகும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். தடைகள் விலகி வெற்றி நடை போட தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிக்கு மற்றவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். மனதில் உற்சாகம் பெருகும். பெயர்,புகழ் பெறுவீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.
ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 3,9 இல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். உடல், மனம் ஆரோக்கியம் பெருகும். எதிலும் விவேகமுடன் செயல்பட்டு வெற்றியை உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பிதுர் வழி சொத்து பிரச்சினை ஏற்படும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆன்மீக பயணங்களால் இறையருளை பெறுவீர்கள். பொறுமையும், விடா முயற்சியும் வெற்றி தரும்.
சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 9 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும். தந்தையுடன் கருத்து மோதல், பிதுர்வழி சொத்து பிரச்சினை வந்து நீங்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் கை கூடும். மற்றவர்களின் தவறான வழிகாட்டுதலால் பிரச்சினைகள் உருவாகும் என்பதால் எதிலும் சுயமாக சிந்தித்து செயல் படுங்கள்.
24/1/2020 க்குபிறகு சனிபகவான் உங்கள் ராசிக்கு 10 இல் இருப்பதால் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். அந்தஸ்து, புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். முயற்சியும், கடின உழைப்பும் பலன் தரும்.
வியாபாரிகளே:
5/11/2019 வரை புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். 5/11/2019 பிறகுவியாபாரம் உயரும். பல வகையில் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே:
5/11/2019 வரை உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்சினைகளும், தடைகளும் உண்டாகும். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரச்சினை உருவாகும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. எதிலும் பொறுமை அவசியம். 5/11/2019 க்கு பிறகு தடைகள் நீங்கும். எதிலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.
மாணவ மாணவியர்களே:
5/11/2019 வரை படிப்பில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். 5/11/2019 க்கு பிறகு கல்வியில் உயர்வு பெறுவீர்கள். நல்ல மதிப்பெண் பெற்று சாதனை படைப்பீர்கள்.
அரசியல்வாதிகளே:
5/11/2019 வரை பல்வேறு தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். தலமையிடமும், சகாக்களிடமும் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற நடவடிக்கைகளை தவிர்க்கவும். 5/11/2019 க்கு பிறகு நல்ல மாற்றம் ஏற்படும்.
கலைத்துறையினரே:
5/11/2019 வரை தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். மற்றவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். 5/11/2019 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.
பரிகாரம்:
- ஸ்ரீ முருகபெருமானுக்கு பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- ஸ்ரீ குருபகவான், சனி பகவான், கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு அர்ச்சனை மற்றும் கொண்டைக்கடலை சுண்டல் தானம் செய்வது. தாய், தந்தை, பெரியோர்களிடம் ஆசி பெற்று பணிவிடை செய்தல்.
Leave a Reply