(கார்த்திகை 2,3,4 ம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்)
எதிலும் நிதானமும், கலையுணர்வும் மிக்க ரிஷப ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் சுகாதிபதி சூரியனுடன் 12 ல் இருப்பதால் வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனமுடன் இருப்பது நல்லது. நன்மை, தீமைகளை பகுத்தறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். தற்பெருமைக்காக செயல்பட்டால் இழப்பு உண்டாகும் என்பதால் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
குரு பகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 6 ல் இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பொருளாதார தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். மனதை கட்டுப்பாடுடன் வைத்து நேர்மறை எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள். யாருடனும் பகைமை பாராட்டாமல் சூழ்நிலைகளை நாசுக்காக கையாள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு 7 ல் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள், தடைகள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியம் பெரும். பகை விலகும். பண வரவு அதிகரிக்கும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
ராகு, கேது முறையே 6/3/2019 வரை 3,9 ஆக சஞ்சரிப்பதால் மனதில், தைரியம், உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். தடைகளை உடைத்து வெற்றி நடை போடுவீர்கள். தந்தை உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுமென்பதால் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பிதுர் வழி சொத்து பிரச்சினை உண்டாகும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான வழிகாட்டுதலால் பிரச்சினை ஏற்படுமென்பதால் எச்சரிக்கையுடன் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 2,8 க்கு வருவதால் குடும்ப விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் ஏற்படும் என்பதால் சிக்கனம் தேவை. குடும்பத்திலும், அலுவலகத்திலும் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. எந்த பிரச்சினைகளிலும் அவசரப்படாமல், பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது.
சனிபகவான் வருடம் முழுவதும் 8 ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். யாருக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் ஜாமீன் நிற்க வேண்டாம். உங்கள் பணியில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவது நல்லது. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் கவனமாகவும் அனுசரித்தும் செல்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்கள், இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.
வியாபாரிகளே:
11/10/2018 வரை வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடியுங்கள். 11/10/2018 உங்கள் வியாபாரம் பெருகும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் நன்மை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே:
11/10/2018 வரை உத்தியோகத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்கள், உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் சாதகமாவர்கள். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
மாணவ மாணவியர்களே:
11/10/2018 வரை உடல் ஆரோக்கியம் உங்கள் படிப்பை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டாம். ஆசிரியர்களிடம் பணிந்து செல்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
அரசியல்வாதிகளே:
11/10/2018 வரை தலைமையிடம் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம். மக்கள் விஷயங்களை கவனமாக கையாளுங்கள். 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகமாகும். மக்களிடம் புகழ் அதிகரிக்கும். சகாக்கள் சதகமாவர்கள்.
கலைத்துறையினரே:
11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புக்கள் தாமதமாகும். பிரபலங்கள், முக்கியஸ்தர்களை அனுசரித்து செல்லுங்கள். 11/10/2018 க்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புகழ் பெறுவீர்கள்.
பரிகாரம்:

Leave a Reply