(அஸ்விணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்)
எதிலும் வேகத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருட பிறப்பு படி, உங்கள் ராசி நாதன் செவ்வாய், பாதகாதிபதி சனியுடன் ராசிக்கு ஒன்பதில் இருப்பதால் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிந்தித்து செயல் படுவது நல்லது. தந்தை உடல் நலனில் கவனம் தேவை.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 7ல் இருப்பதால் உங்கள் முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். எதிலும் விழிப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமண முயற்சிகள் கை கூடும். பண வரவு அதிகரிக்கும். புகழ் பெறுவீர்கள். 11/10/2018 க்கு பிறகு குரு 8 ல் சஞ்சரிப்பதால், எதிர்பாராத பிரச்சினைகள் உருவாகும். நீண்டதூர இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம், கொடுக்கல் வாங்கலில் ஜாமீன் நிற்க வேண்டாம். வீண் வம்பு வழக்குகளை சந்திக்காமல் இருக்க பொறுமையும், நிதானமும் அவசியம்.
ராகு, கேது முறையே 6/3/2019 வரை 4,10 ஆக சஞ்சரிப்பதால், தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வீடு, வாகனம், நில ஆவணங்களை கவனமுடன் கையாள்வது நல்லது. உத்தியோகம், தொழில் பாதிப்படையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள், சக ஊழியர்களால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். பொறுமையும், விழிப்புணர்வும் வெற்றிக்கு வழி.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 3,9 க்கு வருவதால் மனதில், தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் நன்மை ஏற்படும். தடைகளை உடைத்து வெற்றி நடை போடுவீர்கள். சவால்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள். தந்தை உடல்நிலை பாதிப்பும், தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான வழிகாட்டுதலால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சுயமாக சிந்தித்து செயல் படுவது நல்லது.
சனிபகவான் வருடம் முழுவதும் 9 ல் சஞ்சரிப்பதால் புதிய தொழில், உத்தியோக வாய்ப்பு உண்டாகும். தொழில் மாற்றம், இட மாற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வாய்ப்புகள் கை கூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் பொறுமையும் கவனமும் தேவை. தந்தை உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். பிதுர் வழி சொத்து பிரச்சினை அதிகரிக்கும்.
வியாபாரிகளே:
11/10/2018 வரை வியாபாரம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் நன்மையையும், லாபமும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 11/10/2018 க்கு பிறகு புதிய முயற்சிகள், புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தனது வியாபார நிறுவன பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களே:
11/10/2018 வரை உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 11/10/2018 க்கு பிறகு உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் வெளிப்படையாக இருப்பதை தவிர்க்கவும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும்.
மாணவ மாணவியர்களே:
11/10/2018 வரை கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைக்கும் காலம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். 11/10/2018 க்கு பிறகு படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. நண்பர்களிடம் விரோதம் செய்து கொள்ளாமல் இருப்பதும், தீய செயல்களில் விலகி இருப்பதும் நல்லது.
அரசியல்வாதிகளே:
11/10/2018 வரை தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். சகாக்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். மக்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் கவனம் தேவை. சகாக்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் விஷயங்களில் பெருந்தன்மையாக நடந்து கொள்வது நல்லது.
கலைத்துறையினரே:
11/10/2018 வரை புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புகழ் பெறுவீர்கள். 11/10/2018 க்கு பிறகு வாய்ப்புகள் தாமதமாகும். யாரிடமும் தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். பிரபலங்களிடம் அனுசரித்து செல்லுங்கள்.
பரிகாரம்:
நோயால் துன்பப்படும் ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
Tags: Puthandu Rasi Palan 2018 Puthandu Rasi Palan Mesham 2018 Tamil New Year Rasi Palan 2018 Mesham Tamil Puthandu Palan Mesham 2018 to 2019 Tamil Puthandu Palan Mesham 2018 to 2019 Puthandu Rasi Palan Mesham 2018 Tamil New Year Rasi Palan 2018 Mesham Puthandu Rasi Palan 2018 Mesha rasi tamil Varusha Pirappu palangal 2018 Tamil puthandu palangal 2018 to 2019 Mesha rasi Tamil Puthandu palangal 2018 Tamil Varusha Pirappu 2018
Leave a Reply