மகரம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Makaram 2019 – 2020

Get Rid of Snake Curses and Doshas - Avail Naga Chaturthi and Garuda Panchami Packages Join Now
x
x
x
cart-added The item has been added to your cart.

மகரம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Makaram 2019 – 2020

February 15, 2019 | Total Views : 2,388
Zoom In Zoom Out Print

(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

அனைவரிடமும் அன்புடன் பழகும் குணமும், எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும் மகர ராசி அன்பர்களே,உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால்உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாற வாய்ப்புள்ளதால் எதிலும் கவனம் தேவை. வீண் செலவுகளும், மருத்துவ செலவுகளும் வர வாய்ப்புள்ளதால் சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் அனைத்தையும் எளிதில் கடந்து விடுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை 11 இல் சஞ்சரிப்பது சாதகமான நிலை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 12 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. தற்போது சனிபகவான் 24/1/2020 வரை 12 லும், 24/1/2020 க்கு பிறகு 1 லும் ஏழரை சனியாக சஞ்சரிப்பது சாதகமில்லை. இருப்பினும் ராகு, கேது 6, 12 இல் சஞ்சரிப்பது நன்மை தரும். இந்த வருடம் 60 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுற்றத்தார் மற்றும் நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புகழ், பதவி, மரியாதை அதிகரிக்கும். பலவகையில் தனம் சேரும். உங்கள் தனித்திறன் வெளிப்படும்.எதிலும் திறம்பட செயல்பட்டு அனைவரையும் கவருவீர்கள். உங்கள் வாழ்வில் இந்த காலம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்.

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற மருத்துவ செலவீனங்கள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகும். அடிக்கடி ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். பழைய பிரச்சினைகளையும்,தவறுகளையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை விடுத்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள்.

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 6,12 இல் சஞ்சரிப்பதால், இதுவரை இருந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். மனம் தெளிவாகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகள் சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி நடை போடுவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகள், மனப்போராட்டங்கள் குறையும். வாழ்க்கைப் பாதையில் தெளிவு ஏற்படும். ஆன்மீக பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும்.தங்களுக்கு உரித்தான ஆன்மீக குருவை சந்திப்பீர்கள். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடும்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால் எதிலும் சிறு சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திப்பீர்கள். பொருளாதார தட்டுப்பாடு, வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் சிக்கனமுடன் இருப்பது நல்லது. வெளி ஆட்கள் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆட்பட நேரும் என்பதால் எதிலும் பொறுமையும், விழிப்புணர்வும் தேவை. குல தெய்வ வழிபாடு அவசியம்.

சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசியில் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் சிறு, சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் சனிபகவான் உங்கள் ராசி நாதன் என்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிலும் மந்த நிலை உருவாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். சாதாரணமாக முடிக்க வேண்டிய காரியத்தை ஒன்றுக்கு, இரண்டு முறை முயற்சித்து முடிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில இடர்பாடுகளை சந்திப்பீர்கள்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். வாடிக்கையாளர்கள் அதிகமாவர்கள். இருப்பினும் கூட்டாளிகள், பணியாளர்களால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் அவர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 5/11/2019 க்கு பிறகு வீண் விரையம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை  உத்தியோகத்தில் பல உயர்வுகள் ஏற்படும். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். உயரதிகாரிகள் சாதகமாவர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பெருகும். விளையாட்டு துறையில் வெற்றி பெற்று சாதனை படைப்பீர்கள். 5/11/2019 க்கு பிறகு காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி நேரத்தை வீண் விரையம் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை அரசியலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் நற்செயல்களால் தலைமையின் பாராட்டினை பெறுவீர்கள். தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். மக்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட செயல்கள் மற்றவரின் பாராட்டினைப் பெறுவீர்கள். 5/11/2019 க்கு பிறகு தலைமையிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி வெற்றி கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவர்கள். அவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உங்கள் திறமையால் நீங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். புகழ், பெருமை அதிகரிக்கும். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனமும், நிதானமும் தேவை. 

பரிகாரம்:

  • ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவது நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஏழை, எளியோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் மற்றும் தேவையான உதவி செய்தல். காகத்திற்கு, எறும்புக்கு உணவு அளித்தல். 
     

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos