AstroVed Menu
AstroVed
search
search

சூரிய நமஸ்கார மந்திரம் | Surya Namaskar Mantra in Tamil

dateMay 17, 2023

நவகிரகங்களின் நாயகனாக விளங்குவது சூரியன். சூரியன் இல்லாவிடில் இந்த உலகமே இயங்காது எனலாம். உலக உயிரினங்கள் அனைத்திற்கும் வெப்பத்தையும், ஆற்றலையும் வழங்குவது சூரியனே. ஒளி இல்லாமல் உலகில் எந்த உயினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் சூரியன் பித்ருகாரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறது.

Surya namaskar mantra in Tamil

சூரியன் மூலம் கிடைக்கும் சத்துக்கள்:

விஞ்ஞான ரீதியாக சூரியன் நமது எலும்பை வலுப்படுத்தும் சக்தியை வழங்குகிறது. வைட்டமின் D சூரிய ஒளியில் இருந்து தான் கிடைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் டி முக்கியமானது. இது நம் உடலின் கால்சியம், பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு தாதுக்களும் ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகின்றன. நமக்குத் தேவைப்படும் வைட்டமின் டி- சத்தின் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து வருகிறது.

சூரியனும் அதன் காரகமும்:

ஜோதிட ரீதியாக சூரியன் எலும்பு, இதயம் மற்றும் கண்ணிற்கு காரகமாக விளங்குகிறது. சூரியன் ஜாதகரின் தந்தையைக் குறிக்கிறது. வேதங்களில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் வளமையை பெறுவதற்கு சூரியனை வழிபடும் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இதில் தினசரி செய்யும் வழக்கமான நித்ய கர்மாக்களில் சூரிய நமஸ்காரமும் ஒன்றென கூறப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரம் என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இதில் ஆசனம், பிரணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவை அடங்கும். சூரியனுக்கு உடல்சார் வணக்கமானது கடவுளிடம் முழுமையாக சரணடைவதைக் காட்டுகிறது. இதனை மந்திரத்துடன் கூறும் போது அதன் சக்தி இன்னும் அதிகமாகிறது.

சூரிய நமஸ்காரத்தின் சிறப்பு

கிழக்கு - சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசையில் “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும். பன்னிரண்டு யோகாசனங்கள் அடங்கிய ஒரு தொகுதியான , சூரிய நமஸ்காரம் இதயத்திற்கு நல்ல பயிற்சியை அளிக்கும்

சூரிய நமஸ்கார மந்திரம்

ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ

ஓம் ஹ்ரீம் ரவியே நமஹ

ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ

ஓம் ஹ்ரைம் பானவே நமஹ

ஓம் ஹ்ரௌம் கசாய நமஹ

ஓம் ஹ்ரஹ பூஷ்ண நமஹ

ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய

நமஹ ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ

ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ

ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ

ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ

ஓம் ஹரஹ பாஸ்கராய நமஹ

சூரிய நமஸ்கார மந்திர பலன்கள் :

நவீன யுகத்தில் நாம் பெரும்பாலான நேரங்களில் ஏர் கண்டிஷன் உள்ள அறைகளிலேயே வசிக்கிறோம். சூரிய ஒளியே நம் மீது பட விடுவதில்லை. எனவே சூரியனின் மிகுந்த நன்மையான ஆற்றல் வெளிப்படும் விடியற் காலை நேரத்தில் இம்மந்திரத்தை கூறி வழிபடுவது பல நன்மைகளை கொடுக்கும். இந்த மந்திரம் மனதையும் அமைதிப் படுத்தி, நலமுடன் வைக்கின்றது. அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. உடல் நலம் பெற, இந்த எளிய, ஆயினும் பயனுள்ள, சூரிய வணக்கத்தை மந்திர ஜெபத்துடன் மேற்கொள்வது சிறப்பு.


banner

Leave a Reply