தினமும் இந்த திலகத்தை வைத்தால் போதும் சுக்கிர யோகம் பெற்று ஆனந்தமான,அழகான வாழ்க்கை அமைவதோடு நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்க உயரத்தை தொடலாம்.
செய்யும் காரியங்களில் வெற்றியை அளிக்கும் அரகஜாவை பயன்படுத்தி திலகத்தை தயாரித்து அதனை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் யோகம் கூடும். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
முதலில் அரகாஜாவின் சிறப்பைப் பற்றிக் காணலாம். தெய்வங்களுக்கு கண் திறக்கப் பயன்படுவது மற்றும் மிகவும் நறுமணம் வாய்ந்தது இந்த அரகஜா. இந்த அரகஜாவைப் பயன்படுத்தி குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம். சிவ பெருமானின் அபிஷேகங்களில் இந்த அரகஜா பயன்படுத்தப்படும். அதே போல கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு கால வேலைகளில் அரகஜா பயன்படுத்தப்படுகிறது. ஒன்பது வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் கால பைரவருக்கு பூஜை பொருட்களுடன் அரகஜாவை வாங்கிக் கொடுத்து வந்தால் வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் சிறப்பாக நடக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மகா லட்சுமி படத்திற்கு அரகஜாவை வைத்து குங்குமம் வைப்பதன் மூலம் செல்வம் சேரும்.

காரியத்தடை, மனக் குழப்பங்கள் போன்றவற்றை நீக்கும். வசியத்தை ஏற்படுத்தித் தரும். சொல்வாக்கு, செல்வாக்கு சேரும். தோல்வியையே சந்திப்பவர்கள் இதனை நெற்றியில் தரிப்பதன் மூலம் வெற்றி காணலாம். இது மகாலட்சுமிக்கு உகந்தது என்பதால் யோகம் மற்றும் செல்வத்தை அளிக்கக் கூடியது. சுக்கிரனின் தன்மை வாய்ந்தது. இது தீய சக்திகளை அழிக்கக் கூடியது நேர்மறை ஆற்றலை அளிக்க வல்லது.
பொதுவாகவே நெற்றியில் திலகம் வைப்பதன் மூலம் நமது குண்டலினி சக்தி காக்கப்படுகிறது. இந்த அரகஜாவைப் பயன்படுத்தி நெற்றியில் கும்குமம் வைப்பதன் மூலம் வசிய சக்தி கூடும். ஒரு வகை ஈர்ப்புத்தன்மை இருக்கும். காந்தம் போன்ற கவர்ச்சி கூடும்.
வாழ்வில் நாம் யோகம் காண முயற்சி தேவை என்றாலும் கிரக நிலைகளும் மகா லட்சுமியின் அருளும் முக்கியம். அவ்வாறு யோகம் தரும் மையைப் பற்றித் தான் நாம் இந்தப் பதிவில் காண்கிறோம். இந்த இந்த மையை ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் தயாரிக்கலாம்.
இந்த மையை தயாரிப்பதற்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன. அவை அரகஜா, குங்குமப்பூ ஏலக்காய் மற்றும் செம்பருத்தி பூ. அரகஜா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இது மிகவும் குறைவாகவே இருக்கும். ஆகையால் உங்கள் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் குங்குமப் பூவை சேர்த்துக் கொள்ளுங்கள். டப்பா சிறியதாக இருந்தால் அரகஜாவை வேறு டப்பாவில் போட்டு அதனுடன் குங்குமப் பூவை சேர்த்து மூன்று நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். இரும்பு டப்பாவை பயன்படுத்தாதீர்கள். அது சனியின் காரகத்துவம் கொண்டது. எனவே வேறு உலோக டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்..
மூன்று நாட்கள் கழித்து மூன்று ஏலக்காய் எடுத்து அதனுள் இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு செம்பருத்தி பூவை எடுத்து, அதில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இரண்டு பொருட்களையும் உரசும் கல்லில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். குங்குமப் பூ சேர்த்த அரகஜாவுடன் இதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மையை தினமும் குளித்து முடித்து விட்டு அன்றாட வழிபாட்டை முடித்த பிறகு புருவ மத்தியில் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் தெய்வீக ஆற்றல் கூடும் நேர்மறை சிந்தனை ஏற்படும். சுக்கிர பகவானின் அருள் கிட்டும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் யோகமும் கூடும்.






