உள்ளங்கையில் வாசம் செய்யும் அஷ்ட லட்சுமியை வணங்கினால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
இன்றைய உலகில் பணம் ஒன்று தான் நமது வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க இயலாது எனலாம். பணம் இருந்தால் தான் உறவுகள் கூட நம்மை மதிக்கும் காலமாக இந்தக் காலம் உள்ளது. எனவே தான் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதிலும் அதனை சேர்ப்பதிலும் குறியாக உள்ளார்கள். ஆனால் எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஒரு சிலரிடம் அவசர தேவைக்குக் கூட பணம் இல்லாத நிலை இருக்கிறது. தேவையான பொருள் வாங்கக் கூட காசில்லாத நிலையில் பல பேர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தேவைக்கு காசு இருக்கும். ஆனால் அவர்கள் ஆடம்பர செலவு செய்ய பணம் வேண்டும் என்று விரும்புவார்கள். தாங்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க பணம் இல்லையே என்று வருத்தப்படுவார்கள். ஒரு சிலர் பணத்தை சம்பாதிப்பார்கள். அதற்கேற்ப செலவுகளும் அவர்களுக்கு இருக்கும். அவர்களால் பணத்தை சேமிக்க இயலாத நிலை இருக்கும். அவர்கள் பணத்தை சேமிக்க விரும்புவார்கள். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பணத் தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது
இனி பணத்தடை என்ற வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் இருக்க சில எளிய தாந்த்ரீக முறைகள் உள்ளது. அது குறித்தான விளக்கங்களை குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பண வரவு ஏற்படவும், பணம் தங்கவும் நீங்கள் உங்களது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பொருடகளை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். தினமும் வீடு துடைக்கும் போது ஒரு கைப்பிடி கல் உப்பு, சிறிது மஞ்சள் தூள், சிறிது பச்சை கற்பூரம் போட்டு வீட்டை துடைத்து விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை சேர்க்கும்.
லட்சுமி என்றால் செல்வத்தைக் குறிப்ப்வள். செல்வம் என்பது வெறும் பணத்தை மட்டும் குறிப்பது அல்ல. பதினாறு பேறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். அவ்வாறு குறிக்கும் செல்வத்தைப் பெற அஷ்ட லட்சுமியின் ஆசிகள் நமக்கு முக்கியம். அஷ்ட லட்சுமியை ஈர்க்கும் எளிய பரிகாரத்தைப் பற்றி காண்போம்.
அஷ்ட லட்சுமிகள்:
தன லட்சுமி, தான்ய லட்சுமி, சௌபாக்கிய லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் மகா லட்சுமி
அஷ்ட லட்சுமியை ஈர்க்கும் இந்தப் பரிகாரம் மிக மிக எளிதானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பணத்தை சம்பாதிப்பர்கள். ஒரு சிலர் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பர்கள். ஒரு சிலர் தொழில் செய்து பணத்தை சம்பாதிப்பார்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க, அல்லது உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வெளியே கிளம்பும் போது கிளம்பும் முன் உங்கள் உள்ளங் கையில் அஷ்ட லட்சுமியை ஆவாஹனம் செய்து கொள்ளுங்கள். ஆவாஹனம் என்றால் உள்ளங் கையில் லட்சுமியை அழைப்பது ஆகும். அவ்வாறு ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமியை வணங்கி உங்கள் காரியம் எதுவானாலும் அதனை செய்யத் தொடங்குங்கள். இவ்வாறு தினமும் நீங்கள் செய்து வர உங்கள் வருமானம் படிப்படியாக உயரக் காண்பீர்கள். உங்கள் செல்வ நிலை உயரக் காண்பீர்கள். சுப செலவுகளே நடக்கும். உங்களால் சம்பாத்தித்த பணத்தை சேமிக்க இயலும்.











