இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடுவார்கள்.

வாழ்க்கை என்பது இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி கொண்டது தான். என்றாலும் அதன் தாக்கம் நபருக்கு நபர் வேறுபடும். ஒரு சிலர் எளிதில் வெற்றி காண்பார்கள்.ஒரு சிலர் வாழ்வில் இன்பத்தை விட துன்பம் அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு இன்பம் அதிகம் இருக்கும். ஒரு சில ராசியினர் இவற்றை எல்லாம் தாண்டி முன்னேற்றப் படியில் சென்று கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி நடை போடும் ஐந்து ராசியினர் பற்றி இங்கு காண்போம். அவற்றுள் உங்கள் ராசி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம்: பன்னிரண்டு ராசிகளுள் மேஷம் முதல் ராசி ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் வெற்றியை நோக்கியே ஓடிக் கொண்டிருப்பார்கள். நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இவர்களின் கூர்ந்த நுண்ணறிவால் அனைத்திலும் முதலிடத்தில் இருப்பார்கள். பணியிடம் மற்றும் தொழிலில் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள். இவர்கள் எத்தகைய தடைகளையும் தன்னுடைய நுண்ணறிவால் தகர்த்து எறிந்து வெற்றி அடைவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவர்களுக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
சிம்மம்: சிம்மம் என்ற பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பது போல இவர்கள் கம்பீரம் மிக்கவர்கள்.இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருப்பதால் இவர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள். மேலும் இவர்களின் ராசி அதிபதி சூரியன் என்பதால், சகல சுகங்களுடன் ராஜபோகத்துடன் இருக்கவே விரும்புவார்கள். பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் வரை காத்திருந்து அதில் சேர்வார்கள். இவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். மற்றவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்பதால் தைரியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். வெற்றி வாய்ப்புகளை சாமர்த்தியமாக தன் கைக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்பவர்கள்.
துலாம்: தராசு போல நியாயம் காக்கும் இவர்கள் எப்பொழுதும் செல்வாக்குடன் இருப்பார்கள். நல்ல ஐஸ்வரியம் மற்றும் தன தானியங்களுடன் இருப்பர்கள். வீடு வண்டி வாகனங்களைக் கொண்டவர்களாக வாழ்வின் வெற்றிப் பாதையில் நடை போடுவார்கள். எதையாவது கற்றுக் கொண்டே இருக்கக் கூடிய விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். எதற்கும் சளைக்காமல் பாடுபடுபவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு எளிதில் துவண்டு விட மாட்டார்கள். மற்றவர்கள் முன்னிலையில் தனித்துவம் வகிக்க நினைக்கும் இவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான்.
மகரம்: எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சோர்வு அடையமாட்டார்கள். எந்த பிரச்சனைகளையும் நிதானமாக கையாளுவதால் இவர்களுக்கு தோல்வி என்பது அவ்வளவு சீக்கிரம் வருவது கிடையாது. வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பார்கள். மனதை அலைபாய விடாமல் செய்ய நினைத்ததை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பதால் இவர்களுக்கு வெற்றிகள் பல வழிகளில் வந்து சேரும்.
கும்பம்: தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை அனுபவித்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு தேவையான வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொள்வார்கள்.தனித்துவம் மிக்கவர்களாக விளங்குவார்கள். தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அவ்வப்பொழுது தோல்விகள் வந்தாலும் அதை மனம் தளராமல் எதிர்கொண்டு எப்படியாவது வெற்றியாக மாற்றிக் கொள்வார்கள்
