AstroVed Menu
AstroVed
search
search

அனுமனை இவ்வாறு வணங்கினால் 11 நாட்களில் உங்கள் வேண்டுதல்கள் பலிக்கும்

dateJuly 11, 2023

நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருநதாலும் எதோ ஒரு குறை அல்லது தடை நமது மனதை அரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலருக்கு தொழிலில் பிரச்சினை. சிலருக்கு வேலையில் பிரச்சினை. ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற அவா. ஒரு சிலருக்கு கிடைத்த வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற ஆசை. திருமணம் ஆக வேண்டும். திருமணம்  முடிந்த பின் குழந்தை பாக்கியம் வேண்டும். இப்படி நமது விருப்பங்களும் தேவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு தேடி நமது மனம் அலைகிறது.

உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அனுமனை வணங்குவதன் மூலம் 11 நாட்களில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். உங்கள் மனதில் நம்பிக்கையும் இறைவன் மீது பக்தியும் அவசியம். இவை இரண்டும் உங்கள் மனதில் நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். உங்கள் தேவைக்கேற்ப உங்கள் செயல்பாடுகளும் மாறும். அதன் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

வேண்டுதல் நிறைவேறுவதற்கான தாந்திரீக பரிகாரம் என்ன என்பதை இங்கு காண்போம்.

இந்த பரிகாரத்தை செவ்வாய் அன்று ஆரம்பித்து 11 நாட்கள் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு வேண்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைவேற 11 நாட்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள்.

வீடு, பூஜை அறை, உடல் மனம் என அனைத்தும் சுத்தமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயர் படம் முன்பு கோலம் போட்டு அகல் விளக்கை ஏற்றுங்கள். அனுமன் சாலீஸாவை ஒலிக்க விடுங்கள். ஸ்ரீ ராம் அன்று மூன்று முறை கூறுங்கள. காம்பும் நுனியும் சீராக உள்ள ஒரு வெற்றிலையில் உங்கள் வேண்டுதலை சுருக்கமாக எழுதுங்கள். அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சிறிது சிந்தூரத்தை எடுத்துக் குழைத்து நாணயத்தின் மீது வைத்துக் கொள்ளுங்கள். நாணயத்துடன் கூடிய வெற்றிலையை இடது கையில் வைத்து வலது கையால் மூடிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வேண்டுதலை அனுமனிடத்தில் சமர்ப்பியுங்கள். உங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்க பத்து பதினைந்து நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள். 

பிறகு நாணயத்தை ஒரு டப்பாவில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை சேகரியுங்கள். பன்னிரண்டாம் நாள் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று அங்கு இந்த நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விடுங்கள். வெற்றிலையை செடிகளுக்கு உரமாக போட்டு விடுங்கள்.  இவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.


banner

Leave a Reply