பகவான் கிருஷ்ணர் தனது அற்புத அருளை பக்தர்களுக்கு அள்ளி வழங்கும் ஆவணி மாதத் திருநாள்

Rahu-Saturn Affliction Removal Program- Manifest Dreams & Fulfill Material Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கிருஷ்ண ஜெயந்தி - பகவான் கிருஷ்ணர் தனது அற்புத அருளை பக்தர்களுக்கு அள்ளி வழங்கும் ஆவணி மாதத் திருநாள்

August 27, 2018 | Total Views : 1,207
Zoom In Zoom Out Print

“யதா யதா ஹி தர்மtஸ்ய க்ளானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய  ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்” எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன் என்று கூறும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சிறப்பு வாய்ந்த அவதாரங்களுள் ஒன்றானதும் ஒன்பதாவது அவதாரமுமாக விளங்குவதும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகும். தான் கடவுள் என்ற நினைவை தன்னுள் வைத்திருந்தும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தின் மூலம் அறிவுறுத்தியும் வாழ்ந்த காரணத்தால் இதுவே பரிபூரண அவதாரமாக கருதப்படுகின்றது. Janmashtami தேவகி வசுதேவரின் எட்டாவது குழந்தையாக மதுராவில் சிறைச்சாலையில் பிறந்து நந்தகோபன் யசோதையின் குழந்தையாய் கோகுலத்தில் வளர்ந்த கண்ணன் நடத்திய லீலைகள் அற்புதமானவை. பிரமிப்பினை அளிக்கக் கூடியவை. வெண்ணெய் பானையை உடைத்து, மண்ணை வாயுள் அடைத்து, காளிங்க நாகத்தின் மீது நர்த்தனம் புரிந்து, குடையென மலை தனை பி’டித்து, என குழந்தையாக பால கிருஷ்ணனாக அவன் புரிந்த அற்புதங்கள் ஏராளம். மாடுகள் பலவும் மேய்த்து, புல்லாங்குழல் தனை இசைத்து, கோபியருடன் கேளிக்கை என அவன் புரிந்த லீலைகள் தாராளம். கம்சனை வதம் புரிந்து அவன் கொடுமையை அழித்து சாகசம் புரிந்த தர்ம வீரன். தனது செயல்கள் மற்றும் லீலைகள் மூலம் வாழ்க்கையின் யுக்திகளை நமக்கு உணர்த்திக் காட்டிய அவதாரம் கிருஷ்ணாவதாரம் ஆகும். குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜூனன் வாயிலாக கிருஷ்ணர் அருளிய ‘கீதோபதேசம்’ சம்சார சாகரத்தை கடக்க உதவும் தோணியாகும். பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே " நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும், தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். இகபர சுகமளிக்கும் பகவான் கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதி அன்று ரோகினி நட்சத்திரம் கூடிய நன்னாளில் தான் இந்த பூமியில் அவதரித்தார். அந்த நாளை இன்றளவிலும் நாம் கிருஷ்ணஜயந்தி (அ) ஜன்மாஷ்டமியாக கொண்டாடி வருகிறோம். அன்று பகவான் கிருஷ்ணரை வழி படுவதன் மூலம் நாம் வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆஸ்ட்ரோவேட், ஏழ்மை மற்றும் வறுமை நீங்கவும் இகபர சுகம் பெற வேண்டியும் பகவான் கிருஷ்ணரின் ஆசி பெறும் வகையில் புனிதமான பிரத்தியேமான பூஜை மற்றும் ஹோமத்தை நடத்தவிருக்கின்றது. மேலும் அறியவும் அதில் பங்கு கொள்ளவும் இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos