தெளிவான சிந்தனை மற்றும் வளமான வாழ்வு தரும் சிவ மந்திரங்கள்
பிறப்பும் இறப்பும் அற்றவர் சிவன். ஆதி அந்தம் அற்றவர். மும்மூர்த்திகளுள் ஒருவராக விளங்குபவர் சிவன். சிவம் என்றால் அன்பு என்று பொருளாகும்.சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன.
கருணையே வடிவான சிவ பெருமான் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி வழங்கும் வல்லமை கொண்டவர். சிவ பெருமானை எளிதில் மகிழ்விக்க முடியும். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் நம்மை கவசமாக இருந்து காக்கும். மேலும் சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் மனதில் அமைதியும் தெளிவான சிந்தனையும் பிறக்கும். வாழ்வு வளம் பெறும்.
சிவ மந்திரங்கள்
மந்திரங்கள் ஒலி அதிர்வுகளைக் கொண்டது இந்த ஒலி அதிர்வுகள் நமது வாழ்வில் வியத்தகு மாற்றங்களை கொண்டு சேர்க்கக் கூடியவை. சிவ மந்திரத்தை தினமும் தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது உடல் மற்றும் மனம் தூய்மை அடையும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும். நாம் எண்ணிய காரியங்கள் கை கூடும். நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் சித்திக்கும்.
உங்களுக்காக இதோ சில சிவ மந்திரங்கள்:
சிவ மந்திரம் (தமிழ்)
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
பஞ்சாக்ஷர சிவ மூல மந்திரம் :
'ஓம் நம சிவாய’
இந்த மந்திரம் நமது அறியாமை இருளை அகற்றி நமக்கு ஞானமும் முக்தியும் அளிக்கும்.
சிவ காயத்ரி மந்திரம் 1
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
சிவ காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
பிரதோஷ மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சகல வளங்களும் கிட்டும்.
தரித்திரம் நீக்கும் மந்திரம் :
ஓம் ருத்ராய ரோகநாஷாய
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ
இந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் வறுமை நிலை நீங்கும்.
மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
இந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் மரண பயத்தை வெல்லலாம்.
சிவ தியான மந்திரம்:
'கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ'
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். ஐம்புலன்களால் நாம் செய்த பாவங்கள் கரைந்து விடும்.
ருத்ர மந்திரம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
சிங் சிங் சிவாய ஓம்
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சர்வேஸ்வரனாகிய சிவனின் அருள் நமக்கு எளிதில் கிட்டும்.
சிவன் மூல மந்திரம் (தமிழ்)
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தீய வினைகள் அகலும். முக்தி கிட்டும்.

Leave a Reply