Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search

Manaiyadi sastram in Tamil | மனையடி சாஸ்திரம்

September 6, 2023 | Total Views : 92,647
Zoom In Zoom Out Print

நாம் வாழ்வதற்கு அமைக்கும் வீடானது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டால் அதில் வாழ்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ இயலும். வாஸ்து என்பது நமது வீட்டின் அறைகளை அமைக்கும் கலை ஆகும். வாஸ்து சாஸ்திரத்தின் ஒரு பகுதி தான் மனையடி சாஸ்திரம் என்பது.  

மனையடி சாஸ்திரம் என்பது வீடு மற்றும்  வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் எவ்வளவு நீள அகலம் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது ஆகும். மனையடி அளவுகளைக்கொண்டு அறைகளை அமைக்கும் பொழுது வாஸ்து பலம் கூடும். மனையடி சாஸ்திரப்படி மனையானது ஒரே சீரான நில மட்டம் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த மனையின் நில மட்டம் மேற்கு பகுதியை விட கிழக்குப் பகுதி தாழ்வாக இருக்க வேண்டும். வடக்கு அல்லது தெற்கு பார்த்த மனையின் நிலமட்டம் தெற்குப் பகுதியை விட வடக்குப் பகுதி தாழ்வாக இருக்க வேண்டும்.

மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம் பிரகாரம் அறையின் நீள அகலங்கள் 1:2 க்கு மேல் போகாமல் இருகக் வேண்டும். அப்போது தான் அறையில் காந்த சக்திகள் சீராகப் பரவி ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும். அறையின் நீள அகலங்கள் இந்த அளவு இருந்தால் இத்தகைய பலன்களைக் கொடுக்கும் என மனையடி சாஸ்திரம் கூறுகிறது.

இங்கு நாம் 6 அடியில் தொடங்கி 100 அடி வரை வீடு மற்றும் அதன் அறைகளின் அளவு இருந்தால் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றியும், வீட்டின் சுவர் எவ்வளவு உயரம் இருந்தால் என்ன பலன் என்பது பற்றியும் காணலாம்.

மனையடியின் பலன்கள்

6 அடி

நன்மை

7 அடி

ஏழ்மை

8 அடி

இராஜ்ஜியம் உண்டு

9 அடி

மிகவும் தீமை

10 அடி

பால் சோறு உண்டு

11 அடி

வளம், புத்திர சம்பத்து

12 அடி

ஏழ்மை, குழந்தை குறைவு

13 அடி

நோய், எதிரி உண்டு

14 அடி

நித்தம் பகை, நஷ்டம்

15 அடி

நிலை பாதித்தல்

16 அடி

செல்வம் உண்டு

17 அடி

அரசர் போல வாழ்வு

18 அடி

அனைத்தும் அழியும்

19 அடி

மனைவி மக்கள் இழப்பு

20 அடி

மகிழ்ச்சி வளம்

21 அடி

வளர்ச்சி ஏற்படும்

22 அடி

பகைவர்கள் அஞ்சும் நிலை

23 அடி

தீராத நோய்

24 அடி

மனைவிக்கு கண்டம்

25 அடி

தெய்வ கடாட்சம் இல்லை

26 அடி

இந்திரனைப் போல வாழ்க்கை

27 அடி

மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார்

28 அடி

ஐஸ்வர்யம்

29 அடி

சுற்றம் பெருகும்

30 அடி

லட்சுமி கடாட்சம்

31 அடி

நன்மை

32 அடி

கடவுள் அருள் உண்டு

33 அடி

குடி உயரும்

34 அடி

வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்

35 அடி

லட்சுமி கடாட்சம்

36 அடி

அதிகப்படியான புகழ், உயர் நிலை

37 அடி

வளம், மகிழ்ச்சி

38 அடி

நினைத்த காரியம் கூடாது

39 அடி

ஆக்கம், வளர்ச்சி

40 அடி

எதிரிகளால் பாதிப்பு

41 அடி

இன்பமும் செல்வமும் ஓங்கும்

42 அடி

லட்சுமி குடியிருப்பாள்

43 அடி

தீங்கு விளையும்

44 அடி

கண்கள் பாதிப்பு

45 அடி

நல்ல மக்கள்

46 அடி

வீட்டை இழப்பர்

47 அடி

தொடர்ந்து ஏழ்மை

48 அடி

நெருப்பு கண்டம்

49 அடி

மூதேவி வாசம்

50 அடி

பால் பாக்கியம்

51 அடி

வழக்கு ஏற்படும்

52 அடி

தான்யம் பெருகும்

53 அடி

வீண் செலவு

54 அடி

லாபம் உண்டாகும்

55 அடி

உறவினர்கள் இடையே மனஸ்தாபம்

56 அடி

பிள்ளைகளால் நன்மை

57 அடி

குழந்தை இன்மை

58 அடி

விரோதம் அதிகரிக்கும்

59 அடி

சுப தரிசனம்

60 அடி

பொருள் விருத்தி

61 அடி

பகை எற்படும்

62 அடி

வறுமை உண்டாகும்

63 அடி

குடி பெயரும் நிலை உண்டாகும்

64 அடி

சகல சம்பத்தும் உண்டாகும்

65 அடி

பெண்களால் இல்லற வாழ்வில் இனிமை இருக்காது

66 அடி

புத்திர பாக்கியம்

67 அடி

பயம் ஏற்படும்

68 அடி

திரவிய லாபம்

69 அடி

அக்னி கண்டம்

70 அடி

அன்னியருக்குப் பலன் தரும்

71 அடி

பிரியம்

72 அடி

வெகு பாக்கியம்

73 அடி

வாகன பிராப்தி

74 அடி

பிரபல விருத்தி

75 அடி

சுகம் உண்டு

76 அடி

புத்திர அற்பம்

77 அடி

அமோக வாழ்வு

78 அடி

புத்திர தோஷம்

79 அடி

கால்நடை விருத்தி

80 அடி

லட்சுமி வாசம்

81 அடி

இடி விழும்

82 அடி

தோஷம்

83 அடி

மரண பயம்

84 அடி

சௌபாக்கியம்

85 அடி

செல்வந்தர்

86 அடி

ஹிம்சை அதிகம்

87 அடி

தண்டனை உண்டு

88 அடி

சௌக்கியம்

89 அடி

பல வீடு கட்டுவான்

90 அடி

போக பாக்கியம்

91 அடி

விசுவாச மனிதர்களின் சேர்க்கை

92 அடி

ஐஸ்வரியம் பெருகும்

93 அடி

தேசாந்திர வாழ்க்கை

94 அடி

அந்நிய தேசம் போவான்

95 அடி

தனவான்

96 அடி

வேறு தேசம் செல்வான்

97 அடி

கப்பல் வியாபாரம் செய்வான்

98 அடி

வேறு நாடு செல்வான்

99 அடி

இராஜ்ஜியம் ஆள்வான்

100 அடி

நலத்துடன் வாழ்வார்

                                                               

நல்ல அளவுகள்:

52,54,56,59,60, 64,66,68, 70, 71,72,73,74,75,77, 79,80,84,85,88,89,90.92,94,95,96,97,98,99  மற்றும் 100 ஆகிய அடிகளிலும் அமைக்கலாம். நல்ல பலன்கள் கிட்டும். மற்ற அளவுகளில் கூடாது.

வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர்

வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர் தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது ஆவது உயர்ந்த இருக்க வேண்டும். அதை விட சற்று குறைவாக தென் கிழக்கு முனை அதை விட குறைவாக வட மேற்கு முனை  சுவர் அதை விட குறைவாக வட கிழக்கு சுவர் முனை இருக்க வேண்டும்.

சுவரின் உயரம் – மனையடி சாஸ்திரம்

 சுவரின் உயரம் பலன்

6 அடி நன்மை விளையும், நிம்மதி ஏற்படும்.

7 அடி வறுமை ஏற்படும்.

8 அடி சகல நண்மைகளும் உண்டாகும்.

9 அடி பணப்பிரச்சனை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.

10 அடி வாழ்வில் மேன்மை உண்டாகும்.

11, 12, 13 அடி நோய்களால் பெரிய தாக்கம் இருக்காது.

14 அடி எளிமையான வாழ்க்கை நிலை ஏற்படும்.

15 அடி நிம்மதி என்பது இருக்காது.

16 அடி பணம் பெருகும்.

17 அடி மேன்மை உண்டாகும்.

18, 19 அடி வீடு பாழடைந்து போகும்.

20 அடி சந்தோஷம் நிலைத்திருக்கும்.

21 அடி யோகம் உண்டாகும்.

22 அடி கெளரவம், புகழ் உண்டாகும்.

23 அடி நன்மை இல்லை.

24 அடி மனைவி மரணிப்பாள்

25 அடி எளிமையான வாழ்க்கை நிலை ஏற்படும்.

26 அடி பிள்ளைகள் வளரும் வரையில் மகிழ்ச்சி இருக்காது.

27, 28 அடி பணம் பெருகும்.

29, 30 அடி மேன்மை உண்டாகும்.

பூஜை அறை

பூஜை அறை தனியாக அமைப்பது சிறந்தது. கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் பூஜை அறை அமைக்கலாம். சாமி படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். அக்னி மூலையில் பூஜை அறையை வைத்தல் கூடாது.

துளசி மாடம்

துளசி செடி வீட்டில் முன் பக்கம் இருப்பது நல்லது. குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

படுக்கை அறை

படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது. படுக்கை அறையில் வடக்கு பக்கம் பார்த்து பீரோ மற்றும் பணம் வைக்கும் அலமாரி வைக்க வேண்டும்.

இரண்டு படுக்கையறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையாக வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும் வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.

சமையலறை:

சமையல் அறையை வீட்டில் அக்னி மூலை எனப்படும் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் ஒரு அடி தள்ளித் தெற்குச் சுவர் ஓட்டினாற் போல் அடுப்பை வைக்க வேண்டும். சமையல் செய்பவர் முகம் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

சமையல் அறையில் சாமான்கள் பாத்திரங்கள் வைக்கும் அலமாரிகள் தெற்குச் சுவரிலும் மேற்குச் சுவரிலும் வைக்க வேண்டும்.. கிழக்கு மற்றும் வடக்கு சுவரில் வைக்கக் கூடாது.

கிரைண்டர் மிக்சி போன்றவற்றையும் தெற்கு, தென்மேற்கு மேற்கு பகுதியில் வைக்கலாம்.சமையல் அறையில் பாத்திரம் கழுவும் நேர்  அதே அறையில் வடகிழக்கு  மூலையில் செல்லுமாறு அமைக்க வேண்டும்.

போர் மற்றும் கிணறு அமைக்க

கிணறு அல்லது கீழ்நிலைத் தொட்டி வீட்டின் வடக்கு அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும்.  வடக்கு அல்லது கிழக்கு சேர்ந்த ஈசான்யம் சிறப்பானது. ஆனால் அது ஈசான்யக் கோட்டினை வெட்டக் கொடாது  ஈசான்யக் கோட்டினை விட்டு விட்டு கிழக்குக் புறமாகவோ வடக்குப் புறமாகவோ வைக்கலாம்.

கிணற்றின் வடிவம் சதுர வடிவத்தை விட வட்ட வடிவம் தான் சிறந்தது.

வீட்டிற்காக போர்வெல், கிணறு தோண்டும் போது வீட்டின் வட கிழக்கு பகுதியில் தோண்டுவது நல்லது. வீட்டின் நடுவில் அமைப்பது எதிர்மறை பலன்களைத் தரும்.

மேல்நிலை நீர்தொட்டி தென்மேற்கு பகுதியில் அதிக உயரத்துடன் இருக்க வேண்டும்.

குளியலறை அமைக்க

குளியலறை தென்மேற்கு பகுதியில் இருக்க கூடாது மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல கழிவுத்தொட்டியும் தென்மேற்கில் அமைக்க கூடாது நோய் உண்டாகும்.

படிக்கட்டுகள் அமைக்க

வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.

மனையடி சாஸ்திரம் பொது தகவல்கள்

வடக்கு

 

  1. கழிவு அறை
  2. விருந்தினர் அறை
  3. சமையல் அறை (2)
  1. பொக்கிஷ அறை
  2. குழந்தைகள் படுக்கை அறை
  3. படிக்கும் அறை
  1. பூஜையறை
  2. முதியோர் அறை
  3. லேசான பொருட்கள்
  1. படுக்கை அறை
  2. பூஜை அறை
  3. கழிவறை
  1. காலியிடம்
  2. பொது உபயோகம்
  3. ஹால்
  1. பூஜையறை
  2. சாப்பாட்டு அறை
  3. குழந்தைகள் அறை
  1. படுக்கையறை
  2. ஸ்டோர் ரூம்
  3. கழிவறை
  4. பொக்கிஷ அறை
  5. கடின பொருட்கள் வைக்கும் அறை
  1. கழிவறை
  2. படுக்கை அறை
  3. ஸ்டோர் ரூம்
  1. சமையல் அறை
  2. சாப்பாட்டு அறை

 

தெற்கு

banner

Leave a Reply

Submit Comment