பணம் பத்தும் செய்யும். பணக்காரன் பின்னால் பத்து பேர் என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பணத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஒரு சிலர் பிறவியிலேயே திருமகளின் அருள் கிடைக்கப் பெற்றிருப்பார்கள். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கடி அவர்கள் வாயில் கதவைத் திறக்கும்.
பணத்தை நமக்கு அருளுபவள் மகாலட்சுமி. அந்த மகா லட்சுமி நமது வீட்டில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் விரும்புவோம். .செல்வத்தின் திருமகளாம் மகா லட்சுமி தூய்மை இருக்கும் இடத்தில் இருப்பவள். உடல் தூய்மை, உள்ளத் தூய்மை மற்றும் நாம் வாழும் இடத் தூய்மை அனைத்தும் அவசியம்.
பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது. அந்தப் பணத்தை வைத்து சொத்து வாங்குவது, எதிர்கால நலன் கருதி சேமிப்பது என மென்மேலும் பணம் வளரும்போது தான் நமக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது எனலாம். நாம் எல்லாரும் அதைத் தான் விரும்புகிறோம். மேலும் அந்தப் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும். சுப விரயங்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். இது அனைவருக்கும் சாத்தியமாகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
நமது வீட்டில் மகா லட்சுமியின் அருள் இருக்க நாம் தினமும் வீட்டை பெருக்கி துடைத்து குப்பை கூளம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். தினமும் காலை மாலை என இரு வேளையும் விளக்கேற்ற வேண்டும். நாம் தினசரி உண்ணும் உணவைக் கூட இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு உண்ண வேண்டும்.. வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது. நல்ல பக்தியுள்ள பாடல்களை காலை மாலை என ஒலிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் அஷ்ட லட்சுமிகளும் நமது வீட்டில் குடி கொள்வார்கள்.
உங்கள் பணம் மேலும் மேலும் பெருக ஒரு எளிய பரிகாரம் ஒன்றை இந்தப் பதிவில் காணலாம். இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது வீட்டில் பண வரவிற்கு தடையே இருக்காது என்று சொல்லப்படுகிறது
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை அர்ச்சனை செய்வது சிறந்தது. லக்ஷ்மி தேவியின் பாடல்களை கேட்பது நல்லது. இந்த பரிகாரத்திற்கு முதலில் ஒரு மயிலிறகை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் படத்திற்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்து விட்டு அம்பாளின் காலடியில் இந்த மயிலிறகை வைத்து விடுங்கள். பூஜை ஆரத்தி முடிந்த பின் அந்த மயிலிறகை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியிலோ, அல்லது பீரோவிலோ வைக்க வேண்டும். அதற்கு முதலில் கருநீல துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அந்த துணியானது வெல்வெட் துணி அல்லது பட்டுத்துணியாக இருந்தால் சிறப்பு. அதன்மேல் மயிலிறகு ஒன்றை வைத்து, அதன் மேல் நீங்கள் பணத்தை பர்சிலோ அல்லது அந்த மயில் இறகின் மேல் நேரடியாக கூட, பணத்தை வைத்து சேமித்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணப் பெட்டியில் பணம் மேன்மேலும் பெருகும். ஏற்படும் செலவுகளும் சுபச் செலவுகளாக இருக்கும். உங்களால் பணத்தை சேமிக்கவும் இயலும். லட்சுமி கடாட்சம் வீட்டில் பொங்கும்.

Leave a Reply