சிம்ம ராசிக்காரர்களுக்கு, உங்கள் ராசிக்கு 7-ஆம் வீடான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும், உங்கள் ராசியில் கேதுவின் பெயர்ச்சியும் நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும். இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு அளிக்கும் பலன்களைப் பார்க்கலாமா?
பொதுப்பலன்
நீங்கள் எதிர்பார்த்த படி விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை. நீங்கள் உங்களை கவனித்து கொள்ள வேண்டும். சக பணியாளர்களுடனும் நண்பர்களுடனும் உங்கள் கருத்துகளை கவனமுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . உங்கள் எதிர்காலத் திட்டங்களை தனிப்பட்டதாக வைத்திருப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம், ஆனால் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக தரமான நேரத்தை செலவழிக்க முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உறவில் எதிர்மறையை அனுமதிக்காதீர்கள். இந்த காலகட்டம் காதலில் மூழ்குவதை விட ஏற்கனவே இருக்கும் நட்பை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உறவின் பிணைப்பை வலுப்படுத்தலாம்.
உத்தியோகம்
பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. பணியில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தாமதம் ஆகலாம். நீங்கள் உத்தியோக மாற்றத்தை கருத்தில் கொண்டால், உங்கள் வழியில் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் பரபரப்பான காலகட்டத்தை சந்திக்க நேரிடும். புதிய தொழில் தொடங்க இது சரியான நேரம் அல்ல.
காதல் / குடும்ப வாழ்க்கை:-
காதலுக்கு இது உகந்த நேரம் அல்ல. இந்த பெயர்ச்சி இணக்கமான உறவு நிலையை ஆதரிக்காது. சரியான உறவைக் கண்டறிவதற்கு நிறைய நேரம் எடுக்கும். உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கலாம். அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்பப் பிணைப்புகள் வலுப்படும். உங்கள் நேசத்திற்கு உரியவர்களுக்கு நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்.
நிதிநிலை
உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பண விஷயத்தில் யாருக்காகவும் கையெழுத்து போடாதீர்கள். பொருளாதார ரீதியாக நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் பெருகும். நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். "ஊக" முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். இந்த காலக்கட்டத்தில் அது ஆபத்தானது.
மாணவர்கள்
மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். குழுவாகப் படிக்காமல் தனியாக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. கூடுதல் நேரம் எடுத்து படித்தால் வெற்றி காணலாம்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடந்த கால உபாதைகளில் இருந்து மீள்வீர்கள். உண்ணும் உணவில் கவனம் தேவை. தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் உங்கள் மன நலன் மேம்படும்.
பரிகாரங்கள்:-
1. தினமும் விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி )மற்றும் துர்க்கையையும் (ராகுவின் அதிபதி) வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
2. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.
3. சனிக்கிழமைகளில் பைரவரை வழிபடவும். வழிபாட்டின் போது பைரவ மந்திரங்களை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.
4. உடல்நலம் அனுமதித்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் அனுசரித்து, ஏழைகளுக்குப் போர்வைகளை வழங்குங்கள்.

Leave a Reply