AstroVed Menu
AstroVed
search
search
x

சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

dateAugust 29, 2023

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிம்ம  ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 8 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 2 ஆம்  வீடாகிய  கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி  2023- சிம்ம ராசி பலன்

உத்தியோகம் : - 

பெயர்ச்சியின் தொடக்கத்தில் உங்களுக்கு சவால்கள் இருக்கலாம், எனவே உங்கள் உத்தியோக வாழ்க்கையில் நீங்கள் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக நேரம் பணியில் மூழ்கி  இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும்  மாற்றங்கள் கூட சாத்தியமாகும். தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள் மற்றும் தெளிவான கண்ணோட்டத்தை வைத்திருங்கள் மற்றும் எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஆராய்ந்து முடிவெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். வணிகத்துடன் தொடர்புடைய உங்கள் முதலீடுகள் அனைத்தையும் இந்த காலக்கட்டத்தில் புத்திசாலித்தனமாக செய்யப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகளை தகர்த்தெறியும் வகையில் புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் அது சிறந்த தேர்வாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல் :  

இந்த நேரத்தில் ஒற்றையர் கவனமாக இருக்க வேண்டும். காதல் உறவு பலனளிக்காத வாய்ப்புகள் உள்ளன. விலைமதிப்பற்ற தருணங்களைப் பெற நேரம் உறுதுணையாக இல்லை. நீங்கள் பிறருடன் தொடர்பு கொள்ளும்போது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பிரிந்து போகும் வாய்ப்புகள் உள்ளன.

திருமண வாழ்க்கை :- 

இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் எனவே தயவு செய்து நெகிழ்வாக இருங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது, நீங்கள் தனிமை மற்றும் பற்றின்மையை உணர்வீர்கள். திருமணமாகாதவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு தான் துணையைக் கண்டுபிடிக்க முடியும்..

குடும்ப உறவு :-

உங்கள் பெற்றோர் தரப்பிலிருந்து சாத்தியமான அனைத்து ஆதரவையும் எதிர்பார்க்கலாம், குறிப்பாக தந்தையின் ஆதரவு உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிகமாக இருக்கும். தந்தை உறவில் ஏற்பட்ட பின்னடைவு இந்தப் பெயர்ச்சியில்  முடிவடையும். அவர்கள் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கலாம், மேலும் உங்களுக்கு நன்மைகள் இருக்கலாம், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகத் தெரிகிறது.  உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் இரத்த உறவுகளும் வரவேற்கலாம். உறவு நிலையில் சிறந்த புரிதல் காணப்படும்.

நிதிநிலை :-

எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கலாம் மற்றும் நீங்கள் அதிகமாக செலவு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் இருந்தால், அதிலிருந்து வரும் வருமானம் குறித்த ஆராய்ந்து முடிவெடுங்கள். இந்த காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் முதலீடுகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் லாபம் காணப்படலாம். பெரிய சவால்கள் எதுவும் காணப்படவில்லை. தெளிவான நிதி திட்டமிடல் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். நிதி வியாபாரத்தில் இருப்பவர்கள் லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி ஏராளமாக இருக்கலாம், செல்வமும் லாபமும் காணப்படலாம், மேலும் இந்த பெயர்ச்சியில் ஒட்டுமொத்த முன்னேற்றம் நன்றாகவே தெரிகிறது.

மாணவர்கள்:-  

இந்த பெயர்ச்சி  கல்வி தொடர்பான விஷயங்களில் கவலையை கொடுக்கலாம். தேர்வில் வெற்றி பெற கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவை. மெதுவான முன்னேற்றம் காணப்படுவதோடு, படிப்பில் தெளிவின்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். தங்களுக்கு விருப்பமான படிப்புகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். நல்ல முடிவுகளைப் பெற கூடுதல் பயிற்சி தேவைப்படலாம். நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்கள்  சிறப்பாகச் செயல்பட முடியும், தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். சிலர் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வுகளில் வெற்றி பெறலாம்.

ஆரோக்கியம் :-   

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை  மிகவும் கவனமாக இருக்கவும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உணவு முறையில் கட்டுப்பாடு வேண்டும்.  முதுகு எலும்பு, முழங்கால் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலிகள் இருக்கலாம் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும் போது வேக அளவுகளில் ஒரு கண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். யோகா மற்றும் தியானம் மற்றும் பிற உடற்பயிற்சி நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முதியவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், இது அவர்கள் வலுவாக இருக்கவும், நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கவும் உதவும்.

பரிகாரங்கள் :-

1) விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி) ஆகியோரை தினமும் வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

2) செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மந்திரத்தை பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்.

3) சனிக்கிழமைகளில் பைரவரை வழிபடவும். வழிபாட்டின் போது பைரவ மந்திரங்களை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

4) உடல்நலம் அனுமதித்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் அனுசரித்து, தேவைப்படும் நபர்களுக்கு உங்களால் முடிந்த போர்வைகளை வழங்குங்கள்.


banner

Leave a Reply