AstroVed Menu
AstroVed
search
search
x

கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

dateAugust 29, 2023

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கன்னி  ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசியாகிய   கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

உத்தியோகம்

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விஷயங்கள் அமையாமல் போக வாய்ப்புகள் உள்ளன. உங்களின் பணிச்சூழல் உறுதுணையாக இல்லாமல் இருக்கலாம் மற்றும் உங்கள் முயற்சிகளை நீங்கள் கொடுத்தாலும் இந்த காலகட்டத்தில் வளர்ச்சி ஏற்படாமல் போகலாம் அல்லது தாமதமாகலாம்.  ராசியில் உள்ள கேது ஜோதிட அடிப்படையில் பற்றின்மை உணர்வைக் கொடுப்பதாக அறியப்படுகிறது, எனவே தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்கள் பணிச்சூழலில் உங்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு நல்ல கேட்பவராக இருக்க வேண்டும். உங்கள் எதிர்கால வாழ்க்கைத் திட்டங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் அதிகம் ஈடுபடலாம். இழப்பு மற்றும் பிற அனுபவங்களைத் தவிர்ப்பதற்காக தொழில் வல்லுநர்கள் தங்கள் கூட்டாளர்களுடனான விதிமுறைகளில் தெளிவாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய முயற்சிகள் மற்றும் வணிகத் திட்டங்களை விரிவுபடுத்துதலை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். .

ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல்/ குடும்ப உறவு

ஒற்றையர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கப்படுகிறார்கள், ஏனெனில் காதல் உறவு ஊக்கமளிப்பதாகத் தெரியவில்லை. இந்த காலகட்டத்தில் சில விஷயங்களை விட்டுக் கொடுத்து நடக்க  வேண்டும். உறவில் எதிர்பார்க்கப்பட்ட பிணைப்பு இருக்காது. உங்கள் உறவு சில கவலைகளையும் தேவையற்ற மன அழுத்தத்தையும் தரக்கூடும், எனவே அமைதியாக இருங்கள். இந்த காலகட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை ஊக்குவிக்க வேண்டாம், இல்லையெனில் அது உறவில் சச்சரவுகளில் முடிவடையும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சுயம் சார்ந்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

குடும்ப உறுப்பினர்கள் நன்றாக நடந்து கொள்வார்கள், ஆதரவாக இருப்பார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, மேலும் அவர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால் உடனே தீர்வு  சொல்ல வேண்டாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முயற்சிக்கவும், தேவைப்படும் போது நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைக்கவும். இது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்.

திருமண வாழ்க்கை :-  

திருமணமானவர்கள்  சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரும்.  தம்பதிகளிடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம், எனவே நெகிழ்வான மற்றும் சமரச மனப்பான்மையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் பொறுமை ஆகியவை இந்த தற்காலிக தடைகளில் இருந்து கடக்க உதவும் முக்கிய காரணிகளாகும். தனிமைப்படுத்தப்பட்ட உணர்வைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன மற்றும் எதிர்மறையான விஷயங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

நிதிநிலை :- 

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களால் கணிசமான பணத்தை சேமிக்க இயலும். மற்றும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த காலகட்டத்தில் பண வரவு நன்றாக உள்ளது மற்றும் எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கலாம். இந்த காலக்கட்டத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பிரியமானவர்களுக்கும் பெரும்பான்மை செலவுகளை செய்வீர்கள். . இந்த காலகட்டத்தில் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. ஊக மற்றும் பிற பரஸ்பர முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தரலாம். நீங்கள் எதிர்பாராத செல்வத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, அவை நிதிக் கட்டுப்பாடுகளிலிருந்து உங்களைக் கடக்க உதவும், மேலும் சிலர் தங்கள் கடன் சுமையில் இருந்து  விடுபடலாம்.

மாணவர்கள் :-  

இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சி சவாலானதாக இருக்கலாம் மற்றும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக கவனம் செலுத்த வேண்டும். படிப்பின் போது தெளிவான திட்டத்தை வைத்திருங்கள் மற்றும் குழுவாக படிப்பதை தவிருங்கள். ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்பில் இருப்பவர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற அதிக நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் இந்த காலகட்டம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவக்கூடும். வெளிநாட்டில் கல்வி கற்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான பல்கலைக் கழகங்களில் சேரலாம். மற்றும் தங்களுக்கு விருப்பமான துறை படிப்புகளைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு வருபவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்

ஆரோக்கியம் :-  

இந்த பெயர்ச்சியில் உங்கள் ஆரோக்கியம்  நன்றாக இருக்கும். உங்கள் முந்தைய உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் குணமாகியிருப்பதை நீங்கள் உணரலாம். நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். நார்ச்சத்து அடிப்படையிலான உணவு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. துரித உணவு  மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை தவிர்க்கவும். உங்களைப் புத்துணர்ச்சியடையச் செய்யும்  பழங்களைச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில் உணவை உண்ணுங்கள். பணிபுரியும் தொழில்முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமே உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். யோகா மற்றும் தியானம் அல்லது உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவும்.  இது உங்களை அதிக ஆற்றலுடனும் மிகவும் வலிமையுடனும் வைத்திருக்கக் கூடும்.  சுறுசுறுப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும்.

பரிகாரங்கள் :-

1) தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி )மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி ) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

2)  சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்.

3)  உடல்நலம் அனுமதித்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் நோன்பு நோற்கவும்.

4)  'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ' என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.

அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு பால் வழங்கி அருள் பெறுங்கள்.


banner

Leave a Reply