AstroVed Menu
AstroVed
search
search
x

கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

dateAugust 29, 2023

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடக ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 9 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 3 ஆம்  வீடாகிய  கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி  2023- கடக ராசி பலன

உத்தியோகம்:- 

உங்கள் உத்தியோக வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள் மற்றும் திறமையான அணித் தலைவராக இருப்பீர்கள். உங்களின் பணிச்சுமை அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் பதவி உயர்வும் இருக்கும். ராகு மற்றும் கேது சஞ்சாரம் குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் உத்தியோக வாழ்க்கையை சமநிலைப்படுத்த உதவும். வியாபாரத்தில் இருப்பவர்கள் சவால்களை சமாளித்து சிறப்பாக செயல்பட்டு லாபம் காண்பார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல்:-

ஒற்றையர் உறவு சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஏற்கனவே  காதல் உறவில் இருக்கும் திருமணமாகாதவர்கள், தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நேரம் இது. நீங்கள் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும் மற்றும் இந்த காலகட்டத்தில் நிறைய பயணம் செய்வீர்கள். இந்த பெயர்ச்சிக் காலம் உங்கள் துணையுடன் உங்கள் உறவை பலப்படுத்தும்.

திருமண வாழ்க்கை:-

இந்த பெயர்ச்சியில் தம்பதிகளின் உறவு மிகவும் சுமுகமாக  இருக்கும் மற்றும் பிணைப்பும் கவனிப்பும் இருக்கும். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்திருப்பீர்கள். மேலும் தம்பதியருக்கு இடையே இருக்கும் நல்ல புரிந்துணர்வு காரணமாக உறவின் நெருக்கம் அதிகரிக்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள.

குடும்ப உறவு:-

உடன்பிறந்தவர்கள் விசுவாசமாக செயல்படுவார்கள். மற்றும் தேவைப்படும் போது தேவையான ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் அன்பைக் காட்டுவார்கள், சமமாக நீங்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடனும் அன்பானவர்களுடனும் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குழந்தைகள் உங்கள் தேவைகளை கவனித்துக்கொள்வார்கள் மற்றும் இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.

நிதிநிலை: -

திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் உறுதியாக  இருப்பீர்கள்.  அவசியமான செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். சரியான வகையில் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நீங்கள் எதிர்பார்க்கும் பண வரவு மற்றும் பண புழக்கம் இருக்கும். மேலும், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் காணப்படும். அதன் மூலம் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். .

மாணவர்கள் :-

ஆராய்ச்சித் துறையில் உள்ள மாணவர்கள் இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள் இந்தப் பெயர்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதல்கள் கிட்டும்.  உங்களின் அனைத்து முயற்சிகளும், அர்ப்பணிப்பும் உங்கள் தேர்வில் வெற்றியை பெற்றுத் தரும். மேலும் புதிய திறன்களைக் கற்கவும் உதவும். விருப்பமான பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர்க்கைக்கான  தேடுதல்கள் நிறைவேறும். உயர்கல்வி மாணவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது மற்றும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு முடிவுகள் வெற்றிகரமாக இருக்கும்.

ஆரோக்கியம் :-

உங்கள் உடல்  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சில ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திப்பீர்கள். மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பான ஆரோக்கியத்தை பராமரிக்க, நீங்கள் மருத்துவர் கூறும்  விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, விரைவில் குணமடைய உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.. உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவை உட்கொள்ளுங்கள்.

பரிகாரங்கள்

1)  தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

2) செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மந்திரத்தை பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்.

3) தெரு நாய்களுக்கு உணவளிக்கவும், அனாதைகளுக்கு இனிப்பு வழங்கவும்.

ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது எப்போதும் நற்பலன்களை அளிக்கும்.


banner

Leave a Reply