AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

September Monthly Scorpio Rasi Palangal 2019 Tamil

dateSeptember 4, 2019

விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் பெருமளவு நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் நீங்கள் செய்த பணிகளுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றி, முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு, குறித்த நேரத்தில் அவற்றை சிறப்பாக முடிப்பது, உங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுத் தரும். சிறிய வேலைகளிலும் நீங்கள் செலுத்தும் கவனம், மற்றும் உங்களிடம் வெளிப்படும் பன்முகத்தன்மை போன்றவை, பாராட்டுகளைப் பெற்றுத் தரும். இப்பொழுது உங்களுக்குப் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.  

விருச்சிகம் ராசி - காதல் / திருமணம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். காதலுக்கு இது மிகவும் ஏற்ற மாதமாக இருக்கும். உங்கள் உற்சாகமான நடவடிக்கைகள், குடும்பத்தினருக்கு திருப்தியை அளிக்கும். இது குடும்ப வாழ்க்கையில் இன்பம் சேர்க்கும். திருமணத்திற்கு ஏற்ற துணை அமையவும் வாய்ப்பு உள்ளது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு  பூஜை 

விருச்சிகம் ராசி - நிதி

இப்பொழுது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை, உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். பண விஷயங்களில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, பல பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது நீங்கள் பணம் சேமிக்க வேண்டியதும் அவசியம். இந்த நேரத்தில், எந்த ஒரு உறுதி மொழி அளிப்பதற்கு முன்பும், பலமுறை யோசித்த பின்னரே, அவ்வாறு செய்யவும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை 

 விருச்சிகம் ராசி - வேலை

வேலை நிலவரம் சாதகமாக இருக்கும். உங்கள் செயல்பாட்டிற்கு, மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு நிலவும். இதன் மூலம் உங்களுக்கு நன்மைகளும் விளையும். எனினும், பணியில் நீங்கள் சில சவால்களை சந்திப்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை

விருச்சிகம் ராசி - தொழில்

தொழில் வளர்ச்சி சிறந்து விளங்கும். எதிர்பாராத லாபங்கள் வளம் தரும். இப்பொழுது நீங்கள் அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.  

விருச்சிகம் ராசி - தொழில் வல்லுனர் 

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்களுக்கு, இது உற்சாகமான மாதமாக இருக்கும். எளிய முயற்சி மூலமாகவே, உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். உங்கள் பணிக்கு உரிய மதிப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 
 
விருச்சிகம் ராசி - ஆரோக்கியம் 

இந்த மாதம் உடல்நிலையில் கவனம் தேவை. மூட்டு வலியினால் நீங்கள் அவதிப்பட நேரலாம். தேவையற்ற பயம் உங்களுக்கு ரத்த அழுத்த நோயையும் ஏற்படுத்தலாம். உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

விருச்சிகம் ராசி - மாணவர்கள் 

கல்வியில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள், படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, பாடங்களை குறித்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டியது அவசியம். உங்களுக்குப் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அவர்களுடன் வெளியிடங்களுக்கு சுற்றுலா போன்றவை சென்று மகிழ்வீர்கள். இதனால் நட்பு மேலும் வலுப்படும்.  

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,14,16,17,19,20,21,25,26,27,30
அசுப தினங்கள்: 2,6,7,12,15,18,22,23,24,28,29


banner

Leave a Reply