துலாம் ராசி - பொதுப்பலன்கள்
துலாம் ராசி அன்பர்களுக்கு, இப்பொழுது சில பதட்டங்களும், தாமதங்களும் ஏற்படலாம். இருந்தாலும் அவர்களுக்கு இது பொதுவாக, ஒரு நல்ல மாதமாகவே இருக்கும். வேலையில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்புடனும், அக்கறையுடனும் நடந்து கொண்டால், அங்கு நல்லுறவு நிலவும். நண்பர்களுடன் தெளிவாக உரையாடி, சுமுகமாகப் பழகினால், அவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். உங்களில் சிலர், நண்பர்களுடன் இனிய சுற்றுலா செல்வீர்கள். பொது நிகழ்சிகளில் நீங்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முன்னேற, இப்பொழுது மாணவர்கள் கடினமாகப் படிக்க வேண்டியிருக்கும். இப்பொழுது சில ஆரோக்கியப் பிரச்சினைகள் எழுந்தாலும், வாழ்க்கை பெருமளவு சாதாரணமாகவே செல்லும்.
துலாம் ராசி - காதல் / திருமணம்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க, உகந்த நேரம் இது. வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு, குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு இப்பொழுது திருமணம் நிகழ வாய்ப்புள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
துலாம் ராசி - நிதி
பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். உறவினர்களுக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை, வசூல் செய்ய சிறந்த நேரம் இது. தேவை ஏற்பட்டால், நண்பர்களும் உங்களுக்குப் பண உதவி செய்வார்கள். உங்கள் செலவுகளும் சாதாரணமாகவே இருக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரகன் பூஜை
துலாம் ராசி - வேலை
வேலையில் சுமாரான பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் நீங்கள், கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், பணியிடத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் அதிக வேலைகள் வந்து சேரும். எனினும், சக பணியாளர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை
துலாம் ராசி - தொழில்
தொழில் வளர்ச்சிக்கான உங்கள் நடவடிக்கைகள், எதிர்பார்த்த பலன் அளிக்காமல் போகலாம். எனவே, வியாபார முன்னேற்றம் காண நீங்கள் நன்கு திட்டமிட்டு, முறையாகவும், பொறுமையாகவும் செயலாற்ற வேண்டும். எனினும், தொழிலில் நிலைபெற, சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்குப் பலனும், அங்கீகாரமும் கூட, சிறிது தாமதத்திற்குப் பின் கிடைக்கும். உங்களது சில புதிய திட்டங்கள், வெற்றி அடையும்.
துலாம் ராசி - தொழில் வல்லுனர்
தொழில் வல்லுனர்களுக்கு நன்மைகள் விளையும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். இப்பொழுது நீங்கள் கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றை கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. இந்தக் காலகட்டதில் கோபத்தைக் தவிர்ப்பது நன்மை தரும்.
துலாம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை சுமாராக இருக்கும். உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், துரித உணவுகளைத் தவிர்க்கவும். உங்கள் மனோதைரியத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம், பதட்டத்தைத் தணிக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
துலாம் ராசி - மாணவர்கள்
கல்வியில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பாடங்களை ஒத்திப் போடாமல் படிப்பது, உங்களுக்கு நன்மை தரும். ஆசிரியர்களின் பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் விருப்பத்திற்கேற்ப, உங்களால் மேல்படிப்பும் படிக்க முடியும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,14,16,17,19,24,26,27,30
அசுப தினங்கள்: 2,6,7,12,15,18,20,21,22,23,28,29

Leave a Reply