தனுசு ராசி - பொதுப்பலன்கள்
தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், சுமாரான பலன்களே கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு குறையக் கூடும். உங்கள் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். இந்த நேரத்தில், உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், குடும்பத்தினருடன் தெளிவாக உரையாடி, அதைத் தீர்க்க முயலுங்கள். உறவினர்களுடன் சுமூக உறவு நிலவும். நிலுவையில் இருக்கும் பணிகளை நீங்கள் முடிப்பீர்கள். பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். ஆனால் அதில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம், கவனத் திறனை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி - காதல் / திருமணம்
உங்கள் துணையிடம் மதிப்பு பெருகும். மற்ற உறவுகளுடனும், சுமுக உறைவைப் பராமரிப்பீர்கள். இப்பொழுது நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். எனவே, குடும்பத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, இது சரியான தருணம் ஆகும். திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சியும் நல்ல பலன் அளிக்கும். உங்கள் கௌரவம் அதிகாரிக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக பூஜை
தனுசு ராசி - நிதி
பொருளாதார ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படும். எனினும், வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். இது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சனி பூஜை
தனுசு ராசி - வேலை
வேலையில் ஏற்படும் முன்னேற்றம் சற்று ஆறுதல் தரும். அன்றாடப் பணிகளை கவனத்துடன் திட்டமிட்டு, சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்துச் செய்வதன் மூலம், அவற்றை சிறப்பாக மேற்கொண்டு முடிக்க இயலும். திட்டமிட்டுப் பணியாற்றினால், விரும்பிய இலக்குகளையும் அடைய முடியும். சக பணியாளர்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களது ஒத்துழைப்பைப் பெறலாம்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
தனுசு ராசி - தொழில்
வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்து கொண்டு, அதற்கிணங்க திட்டமிட்டு, சமயோசிதமாக செயல்படுவது, நல்ல பலன் கொடுக்கும். தொழிலை விரிவுபடுத்த, உங்களில் சிலர், தங்கள் துறையில் சில பகுதி நேர ஊழியர்களை நியமிக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு ராசி - தொழில் வல்லுனர்
தனுசு ராசி தொழில் வல்லுனர்களுக்கு, இந்த மாதம் வரப் பிரசாதமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலன் அளிக்கும். உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு, திடீர் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை, பொதுவாக, நன்றாக இருக்கும். சிறு உபாதைகள் தோன்றினாலும், அவையும் விரைவில் குணமாகிவிடும். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்; திறனுடன் செயலாற்றுவீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம், உங்கள் ஆற்றலை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
தனுசு ராசி - மாணவர்கள்
கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் நான்கு படித்து, விருதுகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் உங்களைக் குறித்துப் பெருமைப்படுவார்கள். ஆசிரியர்கள் ஆதரவு தருவார்கள். உங்களுக்குப் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,14,16,17,19,20,21,27,30
அசுப தினங்கள்: 2,6,7,12,15,18,22,23,24,25,26,28,29

Leave a Reply