மகரம் ராசி - பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்கள், பெருமளவு நல்ல பலன்களைக் காணும் மாதமாக இது அமையும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள துறையில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில், தன்னம்பிக்கையுடனும், நேர்மையுடனும் நீங்கள் மேற்கொள்ளும் பணிகள், வெற்றியும், பாராட்டும் பெறும். இதனால் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். சமூகத் தொடர்புகளும் சிறப்பாகவே இருக்கும். தொழில் சார்ந்த பயணம் ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகள் அதிகம் இருக்கும்; ஆதலால், அவற்றை நீங்கள் கட்டுப்படுத்துவது நல்லது. இருப்பினும், செலவுகள் உங்களுக்குக் கவலை தரும் வகையில் இருக்காது. பழைய நண்பர் ஒருவரை நீங்கள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
மகரம் ராசி - காதல் / திருமணம்
காதல் வாழ்க்கையில் சில தொல்லைகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் மனதிலும் சில குழப்பங்கள் உண்டாகலாம். ஆனால், இவற்றையெல்லாம் உங்களால் முறையாகச் சமாளித்து விட முடியும். உறவுகளுடன் இணக்கமாகப் பழக, உங்களிடம் நேர்மையான அணுகுமுறை தேவை; விடா முயற்சியும் அவசியம். குடும்ப வாழ்க்கை சாதாரணமாகத் தொடரும். உங்களுக்கு நெருங்கிய ஒருவரின் அன்பு, உங்களை வியக்க வைக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகரம் ராசி - நிதி
பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை நிலவும். எதிர்பார்த்த பணவரவும் இருக்கும். தேவைப்படுபவர்களுக்கு, வங்கி மூலம் நிதி உதவியும் கிடைக்கும். இப்பொழுது உங்களால், மற்றவர்களுக்கு பண உதவியும் செய்ய முடியும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: குரு பூஜை
மகரம் ராசி - வேலை
மகர ராசி அன்பர்கள், இந்த மாதம் வேலையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேலையும் உங்களுக்கு அதிகம் இருக்கும். சில குறிப்பிட்ட பணிகள் மீது, நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டி வரும். எனினும், உங்கள் வேலைத்திறன், புகழ் மற்றும் அங்கீகாரம் பெறும் வகையில் அமையும். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசிய தகவல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை, கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை
மகரம் ராசி - தொழில்
தொழில் மனநிறைவு அளிக்கும். நீங்கள் எடுக்கும் அறிவுபூர்வமான முடிவுகளின் பயனாக, வியாபாரத்தில் முன்னேற்றமும் எற்படும். நடப்பில் இருக்கும் பணிகளை முடிக்க, அதிக பணியாளர்களை நீங்கள் நியமிக்க வேண்டியிருக்கும். பங்குதாரர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உண்மையுடனும், உங்களுக்குச் சாதகமாகவும் பணி புரியும் ஊழியர்களுக்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பது நன்மை தரும்.
மகரம் ராசி - தொழில் வல்லுனர்
மகர ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் ஏற்படும் வளர்ச்சி, திருப்தி தரும். எனினும், சோம்பலைத் தவிர்ப்பதும், காலம் தவறாமையைக் கடைபிடிப்பதும் நன்மை தரும். மேலதிகாரிகளிடம் உரிய முறையில் நடந்து கொள்வதும், மிகவும் அவசியம்.
மகரம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். நேரம் தவறி உணவு உட்கொள்வதால், செரிமானப் பிரச்சினை, வாய்வுத் தொல்லை போன்றவை ஏற்படலாம். இவற்றுக்குரிய மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வது அவசியம். உடலை திடமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதும் முக்கியம்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மகரம் ராசி - மாணவர்கள்
இந்த காலகட்டத்தில், மாணவர்கள் கருத்துடன் பாடங்களைப் படிப்பார்கள். சிலர் உயர்கல்வி கற்பதற்கான தீவிர முயற்சிகளிலும் இறங்குவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,14,16,17,19,20,21,24,25,26,27,30
அசுப தினங்கள்: 2,6,7,12,15,18,22,23,28,29

Leave a Reply