கும்பம் ராசி - பொதுப்பலன்கள்
கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், சுமாரான காலமாகவே இருக்கும். பொருளாதார நிலை நெருக்கடி அளிப்பதாக இருக்கும். வேலை, தொழிலில் நற்பலன்களைக் காண, நீங்கள் விடா முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே சோம்பலைத் தவிர்த்து, கடின உழைப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். எனினும், பணத்தேவை ஏற்பட்டால், நெருங்கிய சொந்தங்களிடமிருந்து அவசர உதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பொதுவாக அனைவரிடமும் நட்புடன் பழகுவது, நல்ல பலன் அளிக்கும். சமூக வாழ்க்கையும், சுவையற்று, மந்தமாகவே இருக்கும். நீங்கள் உணவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் போகலாம்; இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் நேரலாம்.
கும்பம் ராசி - காதல் / திருமணம்
இது காதலுக்கு உகந்த காலமாக இருக்காது. ஆனால், குடும்ப வாழ்க்கை இயல்பாகவே செல்லும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவி கொண்டு, நீங்கள் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். திருமண வயதில் உள்ளவர்களுக்குத் தக்க வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. எனவே இப்பொழுது நீங்கள், திருமண முயற்சிகளில் ஈடுபடலாம்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை
கும்பம் ராசி - நிதி
வருமானம் குறையக்கூடும். சில நியாயமான தேவைகளை நிறைவு செய்வதன் காரணமாக, பணப் பற்றாக்குறையும் ஏற்படலாம். இதனால், சில முக்கிய செலவுகளை ஒத்திப்போட வேண்டியிருக்கும். எனினும், நெருங்கிய நண்பர்கள் உதவியும், ஆதரவும் அளிப்பார்கள். செலவுகளின் விளைவாக, பணக் கையிருப்பு குறையும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: கேது பூஜை
கும்பம் ராசி - வேலை
அலுவலகத்தில் தேக்க நிலை காணப்படும். எனினும் உங்கள் முயற்சி, உரிய பலன் அளிக்கும். வேலைக்காக அதிக நேரம் செலவிடுவது, பணிகளை சரியான முறையில், விரைந்து முடிக்க உதவும். சக பணியாளர்களுடன் நல்லுறவு நிலவும். இருப்பினும், அதைத் தக்க வைத்துக் கொள்வதில், நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
கும்பம் ராசி - தொழில்
தொழிலும் மந்தமாகவே நடக்கக் கூடும். எனினும் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். வணிகர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு இருக்கும். சில புதிய வேலைகள் உங்களை நாடி வரக்கூடும். ஆனால் கூட்டாளிகளின் கவனக் குறைவு காரணமாக, இவை ஒத்திப் போகலாம். நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை கண்காணிப்பது அவசியம்.
கும்பம் ராசி - தொழில் வல்லுனர்
கும்ப ராசி தொழில் வல்லுனர்களின் திறன் வெளிப்படும். உங்கள் முயற்சிக்கேற்ப பலன்கள் கிடைக்கும். எனவே, நன்கு சிந்தித்து, தக்க முயற்சிகளை எடுத்தால் நல்ல விளைவுகள் ஏற்படும். எனினும், அலுவலகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு நல்ல சூழ்நிலையைப் பராமரிப்பதும், பணியில் கவனம் செலுத்துவதும் நல்லது.
கும்பம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை சுமாராகவே இருக்கும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளவில்லை என்றால், சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பொழுது, பச்சை காய்கறிகள் மற்றும் ஆர்கானிக் உணவுகளை உண்பது நன்மை தரும். யோகா, எளிய உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வதும் நல்ல பலனளிக்கும். உங்களை சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கும்பம் ராசி - மாணவர்கள்
மாணவர்கள் இப்பொழுது கல்வியில் ஆழ்ந்த கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் பாடங்களைப் படித்து முடித்த போதிலும், உங்களுக்கு அதில் திருப்தி இல்லாமல் போகலாம். எனவே, தொடர்ந்து விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. இந்த நேரத்தில், பெற்றோர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனை அளிப்பார்கள். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 3,4,5,8,9,10,11,13,14,16,17,19,20,21,24,25,26,27
அசுப தினங்கள்: 1,2,6,7,12,15,18,22,23,28,29,30

Leave a Reply