மீனம் ராசி - பொதுப்பலன்கள்
மீன ராசி அன்பர்களே! நீங்கள் சாதனைகள் புரியும் மாதம் இது. பொதுவாக வாழ்க்கை மனநிறைவு அளிக்கும். உங்கள் நேர்மறையான அணுகுமுறை, நன்மதிப்பைப் பெற்றுத் தரும். குடும்பத் தேவைகளுக்கு நீங்கள் உரிய முக்கியத்துவம் அளிப்பீர்கள். இது குடும்பத்தினரை மகிழ்வித்து, குடும்ப வாழ்க்கையையும் குதூகலமாக்கும். இதனால் மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். கடன்கள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் நீங்கள் அடைத்து விட முடியும். சிலர் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் முயற்சிகள், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை உருவாக்கித் தரும். ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொண்டு, நீங்கள் தெய்வ அருள் பெறுவீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும்.
மீனம் ராசி - காதல் / திருமணம்
காதல் வாழ்க்கை சீராகச் செல்லும். காதல் உறவு தொடர்பான உங்கள் முயற்சிகளும் பலன் தரும். சிலருக்கு புதிய காதலும் மலரக் கூடும். மணமான தம்பதியரின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத் தேவைகளுக்கு நீங்கள் உரிய முக்கியத்துவம் அளிப்பீர்கள். திருமணத்திற்கு தகுந்த வரன் அமையும் வாய்ப்பும் உள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை
மீனம் ராசி - நிதி
நிதிநிலை மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் தீரும். சொத்துக்களை வாங்குவதற்கு வங்கிக் கடனும் உங்களுக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு பெரும் ஆறுதல் தரும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரக பூஜை
மீனம் ராசி - வேலை
வேலையில் வளர்ச்சி காணலாம். சில நல்ல வாய்ப்புகளும், திடீரென உருவாகலாம். சில நேரங்களில், அலுவலகத்தில் பதட்டம் நிலவினாலும், சூழ்நிலை பொதுவாக திருப்திகரமாகவே இருக்கும். பணியிடத்தில் ஒழுங்கையும், காலந் தவறாமையையும் கடைபிடிப்பதன் மூலம், உங்கள் மதிப்பு உயரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை
மீனம் ராசி - தொழில்
தொழில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மூலம் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளை முன்னுரிமைப் படுத்தி, அதன்படி செய்து முடிப்பது நல்ல பலன் அளிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழில் வெற்றிக்கு உதவும்.
மீனம் ராசி - தொழில் வல்லுனர்
மீன ராசி தொழில் வல்லுனர்களுக்கு மனநிறைவு அளிக்கும் நேரம் இது. இப்பொழுது நீங்கள் பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. ஊதிய உயர்வும் கிடைக்கலாம். உங்கள் வேலைத்திறன், சக ஊழியர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.
மீனம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை சுமாராக இருக்கும். ஆரோக்கியம் மேம்பட, உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தவரை, வீட்டில் தயார் செய்த உணவையே உண்ணுங்கள். இப்பொழுது நீங்கள் மேற்கொள்ளும் ஆன்மீக யாத்திரை, உற்சாகம் அளிக்கும். ஆனால் பிரயாணத்தின் பொழுது, அதிக எண்ணெய் உள்ள உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மீனம் ராசி - மாணவர்கள்
கல்விக்கு சாதகமான காலம் இது. சிறிது பதட்டம் இருந்தாலும், உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். படிப்பில் நீங்கள் விரும்பும் இலக்கை அடைய முடியும். மற்ற மாணவர்களும் உங்களுக்கு வழி காட்டுவார்கள். பல மாணவர்கள் உங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்கள். சிலருக்கு வகுப்பில் தலைமைப் பொறுப்பும் கிடைக்கும். பள்ளி விழாக்களில் பிறரைக் கவரும் வகையில், நீங்கள் முக்கியப் பங்கு வகிப்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,5,8,9,10,11,13,14,16,17,19,20,21,24,25,26,27,30
அசுப தினங்கள்: 2,3,4,6,7,12,15,18,22,23,28,29

Leave a Reply