கன்னி செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Kanni Rasi Palan 2020

கன்னி செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், சுமாரான பலன்கள் நடைபெறலாம். உங்கள் உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். தந்தையின் உடலும் நலமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் நல்ல ஆதாயங்களை அடையலாம். வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். எனினும், திருமண வாழ்க்கையில் தடங்கல்கள் காணப்படலாம். மனைவி, தாய் என இருவரின் உடல் நிலையிலும் கவனம் தேவைப்படலாம். தொழில் சாதாரணமாக நடை பெறும். ஆனால், செய்யும் தொழிலில் லாபங்கள் தடைபடலாம். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படக்கூடும். பொதுவாக, சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகலாம். சிலர் குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களும் செல்ல நேரலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
இந்த நேரத்தில், காதலர்கள் சிறுது மந்தமாக உணரக்கூடும். சில காதலர்களுக்குள் மனகசப்பும் ஏற்படலாம். எனினும், ஒரு சில காதல் உறவுகள், இப்பொழுது, திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்குவதற்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவைப்படலாம்.
நிதி:
உங்கள் வருமானம், உங்களின் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். சிலருக்கு அரசாங்க வழியில் லாபம் கிடைக்கலாம். தந்தை மூலமாகவும் வருமானங்கள் பெருகும். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும், இப்பொழுது சுலபமாக வெற்றி பெறக்கூடும்.
வேலை:
இந்த மாதம், உங்கள் பணி, மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் அமையும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில் முறையான கவனம் செலுத்துவதும், தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளத் துணைபுரியும்.
தொழில்:
இந்தக் காலகட்டத்தில், நீங்கள் எந்த வகையான பணியை எடுத்துச் செய்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். எனினும், உங்கள் தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், அவர்கள் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப, உங்கள் திட்டங்களை நீங்கள் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்.
தொழில் வல்லுநர்கள்:
கன்னி ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, பெருமளவு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கக் கூடும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில், நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.
ஆரோக்கியம்:
உங்கள் உடல்நிலையில் முன்பே ஏதாவது பாதிப்பு இருந்தாலும், இப்பொழுது அது குணமடைந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷமும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பொழுது நீங்கள், மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
மாணவர்கள்:
படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும், இது உகந்த மாதமாக விளங்கும். உங்கள் திறந்த மனமும், பரந்த மனப்பான்மையும், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல்திறனால் பெற்றோர்களும் மன மகிழ்ச்சியடைவார்கள்.
சுப தினங்கள் : 1,9,10,11,14,15,27,28
அசுப தினங்கள் : 2,3,7,8,16,17,29,30
பரிகாரம்:
- ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ணர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவு அளித்தல்.
