AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Mithunam Rasi Palan 2023

dateAugust 23, 2023

மிதுனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:

இந்த மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்நோக்குவார்கள். ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். குழந்தைகளுக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முயற்சிகளில் தைரியமும் நம்பிக்கையும் இருக்கும். இந்த மாதத்தில் சொத்து சம்பந்தமான விஷயங்களில் திருப்புமுனை ஏற்படும்.

காதல் / குடும்ப உறவு :

ஒட்டுமொத்தமாக, இந்த மாதம் மிதுன ராசி அன்பர்கள் உறவு அம்சங்களில் சிறந்த காலகட்டத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன்  மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பார்கள். வாழ்க்கைத்  துணையுடன் மிதமான நட்புறவு இருக்கலாம். இந்த மாதத்தில் வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணம் இருக்கலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் சில நேர்மறையான அம்சங்கள் இருந்தபோதிலும், வாழ்க்கைத் துணை / பங்குதாரரின் ஆரோக்கியம் மற்றும் மனநிலையில்  குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை :

இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.  அதிர்ஷ்டம் மூலம் நல்ல ஆதாயங்களைப் பெறலாம்.  குடும்பத்திற்காக தொடர்ந்து செலவுகள் செய்யக்கூடும். இந்த காலகட்டத்தில் சொத்துக்களை விற்று  ஆதாயங்களை உணர வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் சுயம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கான செலவுகள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உத்தியோகத்தில் நிர்வாகம் மற்றும் அதிகாரப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும், இதன் விளைவாக இந்த மாதத்தில் பணியிடத்தில் ஈகோ மோதல்கள் தொடர்ந்து நிலவும். தொழிலில் நல்ல பண வரவு இருக்கும், எதிர்பார்த்த வரவுகள் வரும். பணியிடத்தில் தகவல் தொடர்பு மேம்படும். இம்மாதத்தில் உங்களுக்கு பணமற்ற மற்றும் பண ஆதாயங்கள் இருக்கலாம்.

தொழில் :

தொழில் செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் செல்லுபடியாகும். அதே வேளையில் இந்த மாதத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களும் நல்ல லாபத்தை தரும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மற்றும் உத்திகள் வகுக்கப்படும். இருப்பினும், வியாபாரத்தில் பங்குதாரர்கள் சில பிரச்சனைகளை கொடுக்கலாம் அல்லது கூட்டாண்மையில் மாற்றங்கள் இருக்கலாம்.

தொழில் வல்லுனர்கள் :

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாதமாக இந்த மாதம் இருக்கும்.  தொழிலில் கூட்டாண்மை விதிமுறைகளில் திருத்தம் ஏற்படலாம். உங்களுக்கு  பணவரவு தொடர்ந்து சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை நிர்வகிக்க நீங்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் நம்பிக்கை கூடும்.

தொழிலில் சிறந்து விளங்க  : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த  மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.  தாயின் ஆரோக்கியமும் உங்களுக்கு  ஒரு பிரச்சினையாக இருக்கலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லாவிடில் உணவு காரணமாக உடல்நல சிக்கல்களை சந்திக்க நேரலாம். சில  செரிமான பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் இருக்கலாம்.  

மாணவர்கள் :

மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை  மேம்படுத்த வேண்டும். கல்வியில் செயல்திறனை மேம்படுத்த, பொழுதுபோக்கு  விஷயங்களை அனுபவிக்கும் போக்கு குறைக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் கல்வி தொடர்பான வாய்ப்புகள் இந்த  மாதத்தில் சாதகமான பலன்களைக் கொண்டிருக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை

சுப தேதிகள்  1, 2, 3, 4, 5, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 29 & 30.

அசுப தேதிகள் : 6, 7, 8, 9, 10, 25 & 26.


banner

Leave a Reply