AstroVed Menu
AstroVed
search
search

கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Kadagam Rasi Palan 2020

dateAugust 11, 2020

கடகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

கடக ராசி அன்பர்களுக்கு, இதை, ஓரளவு நல்ல மாதம் என்றே கூறலாம். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த நேரத்தில், பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அது போன்ற தருணங்களில் கவனமாக நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பணிகளிலும் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். சிறிய அளவில் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம்.  பொதுவாக, நீங்கள் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளிலும் சாதாரண பலன்களே கிட்டக்கூடும். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கு இது அனுகூலமான காலமாக இருக்கும். காதல் உறவுகளில் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். எனினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்பொழுது அதிக பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவோடு இருப்பதும் நலம் தரும்.  

நிதி:

நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். தொழில் மூலமும் லாபம் வந்தடையும். 

வேலை:

வேலையில் பல நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். ஆனால், இதற்கான  வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிப்பதும் அவசியம். இவை உங்களுக்குச் சாதகம் தரும்.  

தொழில்:

இந்த நேரத்தில், தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். குறிப்பாக, பூமி சம்பந்தப்பட்ட தொழில்கள் பல வகையில் லாபம்  தரலாம். வியாபாரத்தில் நீங்கள் காட்டும் திறமையால், பிறர் உங்கள் முக்கியத்துவத்தை உணர்வார்கள். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் நேர்ந்தாலும், அவற்றை நன்கு சமாளித்து விடுவீர்கள். 

தொழில் வல்லுநர்கள்:

கடக ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன் காரணமாக, அவர்கள் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறன்களை வெளிக்காட்டும் வகையில், நீங்கள் செயல்படுவீர்கள். இந்த மாதம், உங்களுக்குப் பதவி உயர்வு வாய்ப்புகள் அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு மூட்டு வலி அல்லது நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம். கவனம் தேவை. இருப்பினும், ஏதேனும் சிறிய ஆரோக்கியக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உங்களது எதிர்ப்பு சக்தி அவற்றைச் சரி செய்து விடும். எனவே தைரியமாக இருக்கவும்.  

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இது சுமாரான மாதமாக இருக்கும். எனினும் கவலை வேண்டாம். நல்ல ஊக்கமும், விரைவில் கற்றுக் கொள்ளும் திறனும் உங்களிடம் நிறைந்திருக்கும். இந்த நல்ல குணங்கள், சிறந்த கல்வி பெற உங்களுக்கு உதவும். உங்களது துணிவும், பல வழிகளில் உங்களுக்குப் பயனளிப்பதாக அமையும். 

சுப தினங்கள் : 4,5,6,9,10,11,22,23      
அசுப தினங்கள் : 2,3,12,13,24,25,26,29,30

பரிகாரம்:

  • பகவான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சந்திரன், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
  • ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்தல், மீன்களுக்கு உணவு இடுதல்.

banner

Leave a Reply