AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Mesham Rasi Palan 2023

dateAugust 23, 2023

மேஷம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதத்தில் பிள்ளைகள் மற்றும் எதிரிகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தலாம். ரியல் எஸ்டேட் மற்றும் வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் இந்த மாதத்தில் சில செலவுகள் ஏற்படலாம். இந்த மாதத்தின் பிற்பகுதியில் சுகபோகங்கள் ஏற்படக்கூடும். இருப்பினும், தந்தை மற்றும் வழிகாட்டிகள் தொடர்பான விஷயங்களில் பின்னடைவு ஏற்படலாம் மற்றும் உங்களில் சிலர் அந்த நிலையில் வெற்றிடத்தை உணரலாம்.

காதல் / குடும்ப உறவு :

செப்டம்பர் மாதத்தில் உறவு அம்சங்கள் சீரடையக் கூடும். வீட்டில் அமைதியும், உறவில் நல்ல புரிதலும் இருக்கும். இந்த மாதத்தில் பழைய பிரச்சினைகள் தீரும். நீங்கள்  பிள்ளைகளுடனும் மனைவியுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். இந்த காலகட்டத்தில் வீட்டில் நல்ல சுகபோகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

மேஷ ராசி அன்பர்களுக்கு  நிதி நிலை மேம்படும். பிள்ளைகள் மற்றும் கல்விக்காக செலவு செய்யலாம். உங்களுக்கு  செல்வம் கூடும். முதலீடு மற்றும் வர்த்தகம் நல்ல பலனைத் தரும். அதிர்ஷ்டமும்  இந்த மாதத்தில் பண வரவுக்கு உறுதுணையாக இருக்கும்.  பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

இந்த காலகட்டத்தில் நீங்கள்  உங்கள் பணி மற்றும் பணியிடங்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டலாம். நீங்கள்  பணியிடத்தில் கடினமாக உழைத்து, காரியத்தைச் சாதிப்பீர்கள். இருப்பினும், கடின உழைப்பு மற்றும் பணிகளை சிறப்பாக முடித்து அளித்த போதிலும், பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் உள்ள பெண் சக ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

தொழில் :

உங்களால்  மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில்  நிதி வசதி சிறப்பாக இருக்கும் மற்றும் புதிய உத்திகளைச் செயல்படுத்துவீர்கள். கடன் சுமை குறையலாம். புதிய வாடிக்கையாளர்களும், அவர்கள் காரணமாக  வருமானமும் பெருகும். புதிய யோசனைகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அளிக்கலாம். இந்த மாதத்தில் வியாபாரத்தில் சிறந்த வருமானத்தை தரும் மாற்று முதலீட்டு வாய்ப்புகளையும் தேடலாம்.

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்ல ஆதரவுடன் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெண் பணியாளர்கள் மற்றும் தொழிலில் பங்குதாரர்களால் ஆதாயம் பெறலாம். இந்த மாதத்தில் பண வரவும் நியாயமான அளவில் இருக்கும். போட்டியாளர்கள் மீதான வெற்றியும்  இருக்கும்.

தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதத்தில் உங்கள்  ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.  சௌகரியங்கள் மற்றும் மன அமைதியின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் சிறப்பாக உணரப்படும். இருப்பினும், குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களுக்கு  கவலையை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள்  மன அழுத்தத்திலிருந்து படிப்படியாக விடுபடலாம். மருந்துகளுக்கான செலவுகளும் அதிகரிக்கலாம்..

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு போட்டித் தேர்வுகளில் வெற்றியை ருசிப்பார்கள். தடைகள் இருந்தாலும் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை வளரும். பாடங்களில்  உள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ள மற்றும் புதிய முறைகளை வெளிக்கொணர, தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தலாம். வெளிநாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்பு கிட்டலாம். .

கல்வியில் சிறந்து விளங்க : தக்ஷிணாமூர்த்தி பூஜை

சுப தேதிகள் : 8, 9, 10, 11, 12, 16, 17, 18, 19, 25, 26, 27 & 28.

அசுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 20, 21 & 22.


banner

Leave a Reply