கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Kumbam Rasi Palan 2023

கும்பம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:
இந்த செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தவிர, தாழ்வு மனப்பான்மை உணர்வும் உங்களிடம் காணப்படலாம். நம்பிக்கை எப்போதும் குறைவாக இருக்கலாம். மக்களைக் கையாள்வதில் சாமர்த்தியமான சிந்தனையும், சாதுரியமும் மட்டுமே இம்மாதத்தில் உங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும். மேலும், முயற்சிகளில் துணிவும் தைரியமும் இருந்தால் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
காதல் / குடும்ப உறவு :
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் காதல் மற்றும் உறவு விஷயங்களில் ஒப்பீட்டளவில் சிறந்த காலகட்டத்தைக் காண்பார்கள். வாக்குவாதங்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருந்தாலும் அதனை நீங்கள் திறம்பட தீர்க்க முடியும். காதல் விவகாரங்கள் / உறவில் முன்னேற்றம் மற்றும் சமூக அங்கீகாரம் கிடைக்கும். இந்த மாதம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இந்த மாதத்தில் சுய அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு காரணமாக எதிர்பாராத செலவுகளைக் காண நேரலாம். இரகசிய ஆதாரங்கள் மூலம் பண வரவுகளை தொடர்ந்து பெறலாம். சொத்து வாங்குதல் மற்றும் விருந்து விசேஷங்கள் தொடர்பான நன்மையான நோக்கங்களுக்காகவும் செலவழிக்கலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் கடன் அதிகரிக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம் :
உங்களின் உத்தியோக வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். பணியிடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு குறைந்த அளவில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சந்திக்கும் அதிக அளவு கடமைகள் மற்றும் பொறுப்புகள் உங்களுக்கு வாழ்க்கை பாடத்தைக் கற்றுத் தரும்.
தொழில் :
இந்த மாதத்தில் பங்குதாரர்கள் மற்றும் கூட்டாளர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். வியாபாரத்தில் சோதனையான காலகட்டத்தை கடக்க வலிமையான மனவலிமை மிகவும் அவசியம். கடனை அடைக்க முதலீட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் வருவாய் மற்றும் நிதி வரவு மிதமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களைக் கொண்டுவருவதற்கு நீங்கள் ஒரு உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
தொழில் வல்லுனர்கள் :
இந்த மாதம் உங்கள் தொழிலில் நல்ல காலம் இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உங்களது கூர்மையான புத்திசாலித்தனம் ஒரு காரணமாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சமாளிக்க இந்த மாதம் கடினமான நேரம் இருக்கலாம். நிதி வரவு சராசரிக்கு மேல் இருக்கலாம். இந்த மாதத்தில் சில ஆரம்ப போராட்டங்களுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் இறுதிக் கட்டத்தை அடையலாம்.
தொழிலில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சரியாக இருக்காது. ஆரோக்கியத்தில் அடிக்கடி தொந்தரவுகள் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கலாம். இந்த மாதத்தில் எலும்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
கும்ப ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்த காலகட்டத்தை அனுபவிப்பார்கள். மாதத்தின் தொடக்கப் பாதியில், கவனம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு காரணமாக போட்டித் தேர்வுகளில் பின்னடைவுகள் ஏற்படலாம். வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற உங்கள் கனவுகள் நனவாகும். என்றாலும் அதனை அடைய நீங்கள் கூடுதல் முயற்சிகள் மற்றும் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப தேதிகள் : 4, 5, 6, 7, 11, 12, 13, 14, 20, 21, 22, 23 & 24.
அசுப தேதிகள் : 15, 16, 17, 25, 26, 27 & 28.
