AstroVed Menu
AstroVed
search
search

லட்சுமி தேவி மற்றும் சுக்கிர பகவானின் அருளால் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேர எளிய பரிகாரம்

dateMay 15, 2023

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். இந்த நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இதனை சுக்கிர வாரம் என்றும் கூறுவார்கள். நவகிரகங்களில் சுக்கிரனின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமைகளில் அதிகமாக இருக்கும். சுக்கிரனின் அதிபதியாக மகாலட்சுமி விளங்குகிறாள். சுக்கிரன் மற்றும் மகா லட்சுமியின் அருள் அன்றைய நாள் நிறைந்து காணப்படும்.

எனவே தான் வெள்ளிக்கிழமை அன்று திருமகளான மகா லட்சுமியை வணங்க வேண்டும் என்று கூறுவார்கள். அன்றைய தினம் லட்சுமி தேவிக்கு பூஜை செய்வது நல்லது. வாசனை மிக்க மலர்கள் கொண்டு தேவிக்கு அர்ச்சனை பூஜை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும். அன்றைய தினம் குத்து விளக்கு பூஜையும் செய்வது நல்லது. இவையெல்லாம் நமக்கு ஸ்ரீ மகா விஷ்ணுவின் திருமார்பில் உறையும் லட்சமி தேவியின் ஆசிகளை பெற்றுத் தரும்.

பொதுவாக சுக்கிர வாரம் அதிர்ஷ்டமான நாள் ஆகும். வார நாட்களில் வெள்ளிக்கிழமை தனித்துவமான நாளாக அமைகிறது. அன்று சுக்கிரன் ஆட்சி இருப்பதால் ஆடை ஆபரணம்  சுகம் மற்றும் செல்வம் சேரும் நாள் ஆகும். அவை மென்மேலும் பெருக பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம்  சுக்கிர பகவான் மற்றும் லட்சுமி தேவியின் அருளால் உங்கள் செல்வம் மேன்மேலும் பெருகும்.  

பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை தானதருமங்களுக்கு பயன்படுத்துவது நல்லது. அள்ள அள்ளக் குறையாத செல்வம் பெற வெள்ளிக்கிழமை அன்று ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவலாம். மற்றும் இயன்றவர்கள் பட்டு பீதாம்பரம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை தானமாக அளிப்பது உத்தம தானமாக கருதப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை அன்று  பாதாம், முந்திரி, திராட்சை போன்ற பொருட்களை ஏழை எளியவர்களுக்கு தானமாக அளிப்பதன் மூலம் உங்கள் செல்வம் பன்மடங்கு பெருகும். மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கலை தானமாக அளிக்கலாம். மகாலட்சுமிக்கு பால் பாயாசம் அல்லது அவல் பாயாசம் பிரீதியானது. பாயாசத்தில் போடப்படும் முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் சுக்கிரனுக்கு பிரீத்தியானவை. எனவே வெள்ளிக்கிழமை அன்று மகா லட்சுமி பூஜை செய்து ஏழை எளியவர்களுக்கு பால் பாயாசம் அல்லது அவல் பாயாசத்தை தானமாக அளிப்பதன் மூலம் லட்சுமி கடாட்சததின் மூலம் அள்ளக் அள்ளக் குறையாத செல்வம் சேரும் என்பது ஐதீகம்.  சுக்கிர பகவானின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை கிட்டும். ஆடை ஆபரணங்கள் சேரும்.

 


banner

Leave a Reply