AstroVed Menu
AstroVed
search
search

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2020-2023 | Sani Peyarchi Palangal Dhanusu Rasi 2020-2023

dateNovember 29, 2019

பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே!  உங்கள் ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு இரண்டாம்  இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம்  ஸ்தானத்தையும், எட்டு  மற்றும் பதினொன்றாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். நான்காம்  இடம் என்பது சுக ஸ்தானத்தை சுட்டிக் காட்டும். எட்டாம் இடம் என்பது ஆயுளைக் குறிக்கும். பதினொன்றாம் இடம் லாபத்தை சுட்டிக் காட்டும். 

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் காலக் கட்டத்தில் பாத சனி நடைபெறவிருக்கின்றது. சனி பகவான் நியாயவான் என்பதால் எவரொருவர் நீதி தவறாமல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து  செயல்படுகிறாரோ அவருக்கு  நல்ல பலன்களை அள்ளி வழங்குவார்.

உத்தியோகம் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் தங்கள் பணியில் ஒரு திருப்பு முனையை சந்திப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். இதன் மூலம் உங்கள் சேமிப்பு உயர்வது மட்டுமன்றி உங்களுக்கு சொத்துக்களும் சேரும். நீண்ட நாள் கனவாக இருந்து வந்த சொந்த வீட்டு ஆசைகள் நிறைவேறக் காண்பீர்கள்.  தடைபட்டு, தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் யாவும் கை கூடி இப்பொழுது இல்லத்தில் கெட்டி மேளம் கொட்டும்.

                     சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

குடும்பம்:

குடும்பத்தில் குதூகலம் கூடும் நேரம். கருத்து வேறுபாடுகள் காணாமல் போகும் நேரம். உறவில் நல்லிணக்கம் ஏற்படும். தம்பதிக்குள் அன்னியோன்யம் பெருகும். தள்ளிக் கொண்டே வந்த, தடைபட்டுக் கொண்டே வந்த திருமண முயற்சிகள் கை கூடும்.  குழந்தைப் பேற்றிற்காக காத்திருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவு ஏற்படும். மூத்தவர்களுடன் நல்லுறவு பெருகும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

பரிகாரங்கள்:

  • சனிக்கிழமை சனி ஹோரையில் கருப்பு எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக கொடுக்கலாம்.
  • விளயாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு பொருளுதவி செய்திட குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

உடல்நலம்:

தனுசு ராசி அன்பர்களுக்கு கழுத்து மற்றும் முதுகுப்பகுதிகளில் அல்லது கழுத்து நரம்பு பாதிப்பால் வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு மனவிரக்தி மற்றும் மன இருக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட  வாய்ப்புகள் உள்ளது. தியானம் செய்து மன இறுக்கத்திலிருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகள் அடிக்கடி வந்து மறையும். குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கிருமி தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பரிகாரங்கள்:

  • உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்து சிறந்த உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

ருளாதாரம்:

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நீங்கள் சிறப்பாக பணியாற்றி அதன் மூலம் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பொருளாதார நிலை மேம்படும். தனுசு ராசியைச் சார்ந்த ஆண்களுக்கு  மனைவி மூலம் தன வரவு கூடும். பொருளாதார நிலை உயரும்.  தரகுத் தொழில் மற்றும் கமிஷன் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும். பேராசிரியராகப் பணியாற்றுபவர்கள் நல்ல பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரங்கள்:

  • ஓடித்தேய்ந்த குதிரை லாடத்தை வீட்டு கதவின் நிலையில் மாட்டி வைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

தொழில்:

தனியார் துறையில் பணிபுரியும் தனுசு ராசி அன்பர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். அரசுத் துறையில் அதிகார பதவி வகிக்கும் தனுசு ராசி அன்பர்கள் பதவி உயர்வும் அந்தஸ்தும் கிடைக்கப் பெறுவார்கள். வருமானமும் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் கண்டு மகிழ்வார்கள். கலைத் துறை மற்றும் திரைத் துறையில் இருப்பவர்கள் சமூகத்தினரின் அங்கீகாரத்தைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் துறையில் வியத்தகு முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரங்கள்:

  • தொழில் வளர்ச்சிக்கு சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றவும்.
  • வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற கைக்குட்டையை பயன்படுத்துவதன் மூலம், உத்தியோக மேன்மை பெறலாம்.

படிப்பு:

கல்வி பயிலும் தனுசு ராசி மாணவ மாணவியர்களுக்கு இந்த பெயர்ச்சி கல்வி கற்பதில் உறுதுணை புரியும். இது வரை இருந்து வந்த மந்த நிலை மாறும். கல்வியில் கவனம் கூடும். சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். தகவல் தொடர்பு மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பு படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகிப்பர். வேதியியலில் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவியில் சேர்வார்கள். சிவில் சர்விஸ் தேர்விற்காக படிப்பவர்கள் இதுவரை தோல்வியைக் கண்டிருந்தாலும், ஜூன் 2020க்கு பின் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.

பரிகாரங்கள்:

  • புதன் கிழமைகளில் விஷ்ணு கோவிலில் அன்ன தானம் செய்து படிப்பில் உயர்ந்த நிலையை அடையலாம்.
  • புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு வர படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பொது பரிகாரம்

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 


banner

Leave a Reply