AstroVed Menu
AstroVed
search
search

12 ராசியினர் அணிய வேண்டிய ருத்ராட்சம்

dateMay 9, 2025

ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என்று போற்றப்படுகிறது. சிவனின் அருளைப் பெற ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் ஒரு மூலிகை என்றும் கூறலாம். ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் நமது உடலும் மனமும் தூய்மை பெறுகிறது. அது நம்முடனேயே இருப்பதால் நம்மை கவசம் போல காக்கிறது.  பல வித நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டது ருத்ராட்சம்.  இது உடல் ஆற்றல் மற்றும் மன ஆற்றலை அளிக்க வல்லது. எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது.கிரக தோஷங்களை நீக்குகிறது. ருத்ராட்சங்களில் 108 வகை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  எத்தனை  கோடுகள் உள்ளனவோ அத்தனை முகம் உள்ளன என்று கூறுவார்கள. ஒவ்வொரு முகமும் வெவ்வேறு விசேஷ பலன்களை அளிக்கவல்லவை.

ஒவ்வொரு ராசியினரும் எந்த முக ருத்ராட்சத்தை அணியலாம், எதனை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது.  சோமன், சூரியன், அக்னி என்று சொல்லப்படக்கூடிய முக்கண்ணனின் வடிவம் பெற்றதாகும். இது அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தும். இந்த  ருத்ராட்சம் அணிவதால் இவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். இலக்குகளை அடைய முடியும். அவர்களின் ஆற்றலை சமநிலைப்படுத்தும். இவர்கள் 6 முக ருத்ராட்சம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது இவர்களின் கோபத்தை அதிகமாக்கும். சமநிலையில் இருந்து தடுமாற வைக்கும்.

ரிஷபம் ராசி:

ரிஷப ராசிக்காரர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது சுக்கிரனுடன் தொடர்புடையதாகும். இதை அணிவதால் புகழ், புத்தி, தெளிவு, மெய்ஞானம், பரிசுத்தம் ஆகியவை கிடைக்கும்.மேலும் இது அவர்களின் திறமையை அதிகரிக்கும். நல்ல தகவல் தொடர்புக்கு உதவும். பொறுமையை கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இவர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசி:

மிதுன ராசிக்காரர்கள் 4 முக ருத்ராட்சத்தை அணியலாம். மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார்.  4 முக ருத்ராட்சம் புதன் கிரகத்தோடு தொடர்புடையது. எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த ருத்ராட்சத்தை அணியலாம். குறிப்பாக மிதுன ராசியைச் சார்ந்த கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், படைப்பாளிகள், நுண்கலை வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை அணிந்து கொள்ளலாம்.இந்த ருத்ராட்சம் இவர்களின் அறிவை வளர்க்கும். தகவல் தொடர்பு திறனை அதிகரிக்கும். தெளிவான மனநிலையை கொடுக்கும். இதனை தங்களின் வலது கையில் கட்டினால் மிக சிறப்பானது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது. 7 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

கடக ராசி:

கடக ராசிக்காரர்கள் 2 முக ருத்ராட்சத்தை அணியலாம்.இது சந்திர கிரகத்தோடு தொடர்புடையது. இந்த ருத்ராட்சம் கொடிய பாவத்தை போக்கக்கூடியதாகும். செல்வம், மன அமைதி, குண்டலினி சக்தியை எழுப்பக்கூடியது. எனவே கடக ராசிக்காரர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உணர்ச்சிகளில் சம நிலை பெறலாம். மன அமைதியைப் பெறலாம். பாதுகாப்பாக உணர வைக்கும். கவலையை குறைக்கும். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும், அது தூய்மையாக இருப்பது போல, இதை அணியும் நபர்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி துய்மை நிலை அடைவார். இவர்கள்  3 முக ருத்ராட்சத்தை அணிதல் கூடாது. அதனை அணிவதன் மூலம் உணர்ச்சி தடுமாற்றம் ஏற்படலாம். அது உணர்வில்  நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் 1 மற்றும் 12 முக ருத்ராட்சத்தை அணியலாம்.  1 முக ருத்ராட்சத்தை பார்ப்பதே மிகவும் அரிதாகும். இதை தொட்டு வணங்கினாலே நம்முடைய பாவங்கள் போகும் என்று சொல்லப்படுகிறது. பன்னிரண்டு முக ருத்ராட்சம் என்பது சூரிய பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. இது அவர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தலைமைப் பண்புக்கு உதவும். இவர்கள் 2 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது இவர்களின் கவனத்தை சிதறடிக்கும். இவர்களின் வீரத்தைக் குறைக்கும்.

கன்னி ராசி:

கன்னி ராசிக்காரர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணியலாம். பொதுவாக, ஐந்து முக ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். இது மனதை தெளிவுபடுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இது மங்களத்தின் இருப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும். இவர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்பு மண்டலத்தை அதிகமாக தூண்டும்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இந்த  ருத்ராட்சம் முருகப்பெருமானுடைய வடிவமாக கருதப்படுவது. இது சுக்கிரனுடன் தொடர்புடையதாகும். பிரம்மஹத்தி தோஷத்தைக் கூட போக்குமளவிற்கு மிக புண்ணியமான ருத்ராட்சமாகும். இதை அணிவதால் புகழ், புத்தி, தெளிவு, மெய்ஞானம், பரிசுத்தம் ஆகியவை கிடைக்கும். இது அவர்களுக்கு  மன  அமைதியையும், தெளிவையும் கொடுக்கும். நல்ல முடிவுகளை எடுக்க உதவும். இதனை அணிவதன் மூலம் உடல் இச்சைக்கு ஆளாகாமல் பேரின்பத்தை பெற வழியை தேடலாம்.  இவர்கள் 8 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது இவர்களின் மனதில் அதிக  குழப்பத்தை ஏற்படுத்தும்

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிக்காரர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது செவ்வாய் கிரகத்தோடு தொடர்புடையது.  சோமன், சூரியன், அக்னி என்று சொல்லப்படக்கூடிய முக்கண்ணனின் வடிவம் பெற்றதாகும்.இது கடந்த கால கஷ்டங்களை மறக்க உதவும். நல்ல எண்ணங்களை உருவாக்கும். இது மாற்றத்திற்கும், குணப்படுத்துவதற்கும் சிறந்தது. இவர்கள் 9 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இது உணர்ச்சிவசப்படுவதை அதிகமாக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்கள் 5 அல்லது 7 முக ருத்ராட்சத்தை அணியலாம். 5 முக ருத்ராட்சம் காலாக்னி ருத்ர ரூபத்தை உடையது என்று சொல்லலாம். இது குரு கிரகத்துடன் தொடர்புடையது.  ஏழு முக ருத்ராட்சம் ஆதிசேஷனின் அம்சத்தை கொண்டது. சப்த கன்னிகளின் அருளைப் பெற்றது.இது ஞானத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும் அதிகரிக்கும். இவர்கள் 6 முக ருத்ராட்சம்   அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் இவர்கள் கவனக் குறைவை சந்திக்க நேரும்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணியலாம். யோக சக்தியை நம்முள் அதிகளவில் பெருக்கக்கூடிய தன்மை ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்திற்கு உண்டு.இது பண பிரச்சனைகளை தீர்க்கும். தைரியத்தை கொடுக்கும். வேலை சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைய உதவும். தோல்வி பயத்தை குறைக்கும். இவர்கள்  8 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத வெறுப்பை ஏற்படுத்தும்.

கும்ப ராசி:

கும்ப ராசிக்காரர்கள் 7 அல்லது 9 முக ருத்ராட்சத்தை அணியலாம். யோக சக்தியை நம்முள் அதிகளவில் பெருக்கக்கூடிய தன்மை ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்திற்கு உண்டு.இது பண பிரச்சனைகளை தீர்க்கும். தைரியத்தை கொடுக்கும்.  இது உயர்ந்த நோக்கத்துடன் இணைக்க உதவும். 9 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிவதை விட, இடது மணிக்கட்டில் அணிந்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். இவர்கள் 2 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனை அணிவதன் மூலம் அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதில் தடைகளை சந்திக்க நேரும்.

மீன ராசி:

மீன ராசிக்காரர்கள் 2 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது உணர்வு ரீதியான தெளிவையும், இரக்கத்தையும் கொடுக்கும். அமைதியையும், ஆன்மீக தொடர்பையும் அதிகரிக்கும். அறிவு மேம்படவும், ஒரு தலைமைப் பண்பைப் பெறவும்  6 முக ருத்ராட்சத்தை அணியலாம்.  இவர்கள்  3 முக ருத்ராட்சத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.  அது உணர்வு ரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்தும்.


banner

Leave a Reply