AstroVed Menu
AstroVed
search
search

பணம் தங்க அந்தி சாயும் நேரத்தில் செய்யக் கூடாதவை

dateMay 9, 2025

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் கற்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் பின்பற்றிய பல நடைமுறைகளை இன்றளவும் சிலர் பின்பற்றுகிறார்கள்.நமது முன்னோர்கள் கூறிச் சென்ற யாவும் அறிவியல் பூர்வமாக மிகவும் சரியானது. அவர்கள் அதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் காட்டவிலல்லை. இப்படி செய்தால் இந்த விளைவுகளை சந்திக்க நேரும் என்று மட்டும் கூறியதால் இன்றைய தலையிமுறையினர் அதனை மூட நம்பிக்கை என்று கூறுகிறார்கள். இந்த நேரத்தில் இந்த செயல்களை செய்யலாம். இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த செயல்களை செய்யக் கூடாது என்று சில சாஸ்திரங்களை அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். அந்த வகையில்  அந்தி சாயும் நேரத்தில் செய்யக் கூடாத செயல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்கினாலும் அது வெற்றி பெறும். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நம் அன்றாட வேலையை தொடங்கினால் விரைவில் வெற்றிகளைக் குவித்து செல்வந்தராக முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. அப்பொழுது காற்று சுத்தமாக இருக்கும். நமது சுவாசம் சீராக இயங்கும். நம்மால் தெளிவாக சிந்தித்து செயல்பட இயலும்.

அது போல சூரியன் அஸ்தமனம் ஆகி நிலவு வானில் தென்படும் நேரம் அந்தி சாயும் நேரம் என்பார்கள். அந்த நேரம் இறை வழிபாட்டிற்கு உரிய நேரம். அதாவது சூரியன் மறையக்கூடிய 5.30 மணி முதல் 6.30 மணி வரை எனப்படுகிறது. இந்த நேரத்தை கோதூளி நேரம் என்று கூறுவார்கள்.  சூரியன் மறையக்கூடிய அந்தி மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பும் நேரத்தில், மாட்டுக் கூட்டத்தின் காலிலிருந்து கிளம்பும் தூசுக்களால் சூரியனால் சிவந்த வானம் தூசுக்களால் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சில செயல்கள் புனிதமாகவும், சில செயல்கள் செய்யாமல் இருப்பதே நல்லது என குறிப்பிடப்படுகிறது.

தூங்குதல்:

மாலை வேளையில் தூங்குவது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தி வீட்டில் வறுமையை கொண்டுவருவதாக ஐதீகம் கூறுகிறது.  தூங்குவது உடலின் இயற்கை தூக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கம் சரியாக வராத நிலைக்கு வழிவகுக்கும். மாலை வேளையில் தூங்கும் போது, செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், மாலையில் விளக்கு ஏற்றிய பின் தூங்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

சண்டை இடுதல் கூடாது:

வீட்டில் சண்டை சச்சரவுகள், கசடு, அழுக்கு இருப்பது போன்ற செயல்கள் செய்யக் கூடாது.

பூஜைகள் செய்யாமல் இருப்பது:

லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் வேளையில், பூஜைகள், ஸ்தோத்திரங்கள் படிப்பது நல்லது. விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது.

மாணவர்கள் படித்தல் கூடாது:

அந்தி சாயும் வேளையில் மாணவர்கள் பாடங்களை படித்தல் கூடாது. வீட்டில் விளக்கு ஏற்றிய பின் ஐந்து நிமிடங்கள் கழித்து படிக்க ஆரம்பிக்கலாம். அந்த நேரத்தை இறை வழிபாடு செய்ய ஒதுக்க வேண்டும்.அப்பொழுது தான் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஈடுபாட்டை புகுத்த இயலும். குழந்தைகள் இறைவனின் மந்திரங்களை உச்சரிப்பதால் மனதும், உடலும் சுத்தமாகிறது. மனமும், சிந்தையும் ஒருங்கிணைகிறது. இதனால் குழந்தைகளின் ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். படிக்கும் படிப்பு சிறப்பாக தலையில் ஏறும். மேலும் அந்தி சாயும்  நேரத்தில் பார்வை மங்கலாக இருக்கும், மேலும் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். மேலும், அந்த நேரத்தில் சில நேரங்களில் தலைவலி, கண்கள் எரிதல் போன்ற பிரச்சினைகள் வரலாம்.

வீட்டை பெருக்குதல்

மாலை வேளையில் வீட்டை பெருக்கிக் கூட்டக் கூடாது. மாலை என்பது லட்சுமிகரமான நேரம். அந்த நேரத்தில் வீட்டில் உள்ள குப்பையை வெளியே தள்ளுதல் கூடாது.

முடி மற்றும் நகம் வெட்டக்கூடாது:

அந்தி சாயும் நேரம் தலை முடியை வாருதல் கூடாது.  முடிகள் சிதறி தரையில் விழ அல்லது பறந்து செல்ல வாய்ப்புள்ளது. பகல் பொழுது எனில் நாம் இடத்தை பெருக்கி சுத்தம் செய்து அதனை எடுத்து விடலாம். இரவில் இயலாது.  நகம் வெட்டக்கூடாது.நகமும் அது போல இரவில் சுத்தம் செய்து எடுக்க முடியாது.  

துணி துவைக்க கூடாது:

பொதுவாக மாலை வேளையில் துணி துவைத்து காய வைத்தல் கூடாது. காரணம் துணியை சூரிய வெளிச்சத்தில் காய வைத்தால் அதான் கிருமிகள் அழியும். இரவில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கிருமிகள் அழியாது.

வெள்ளை நிற உணவுகளை தானம் செய்யக்கூடாது:

பால், தயிர், உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருட்களை மாலை நேரத்தில் தானம் பண்ணக் கூடாது. ஏனெனில் இரவில் அவற்றில் பூச்சிகள் விழ வாய்ப்புள்ளது.

துளசியை பறிக்கக் கூடாது:

மாலை நேரத்தில் துளசி செடியை தொடக்கூடாது. தண்ணீர் ஊற்றக்கூடாது. துளசி பறித்தல், தண்ணீர் ஊற்ற காலை நேரம் தான் சரியான நேரம்.

 


banner

Leave a Reply