வளர்பிறை துவாதசியில் பெருமாள் வழிபாடு

நாம் அனைவரும் ஏகாதசி திதி பற்றி அறிந்து இருப்போம். அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசியின் பெருமை பற்றி அறியாதவர் எவரும் இல்லை. ஆனால் அதற்கு அடுத்து வரும் நாளான துவாதசியும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். மாதம் தோறும் இரண்டு ஏகாதசி வருவது போலவே இரண்டு துவாதசி வரும். ஒன்று வளர்பிறை துவாதசி மற்றது தேய்பிறை துவாதசி ஆகும். ஏகாதசியில் விரதமிருந்து துவாதசியில் விரதத்தை நிறைவு செய்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தால் புண்ணியங்கள் கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். கவலைகள் மறையும்.
துவாதசி என்பது இந்து நாட்காட்டிப்படி, பன்னிரண்டாம் திதி. இது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் 12-வது நாளாகக் கணக்கிடப்படுகிறது. வடமொழியில் 'துவாதச' என்றால் பன்னிரண்டு என்று பொருள். துவாதசி திதியில் விரதம் இருக்கவும், பெருமாளை வணங்கவும் சிறப்பானது. நாளைய தினம் 9/5/2025 வளர்பிறை துவாதசி. துவாதசி என்பது பன்னிரண்டாவது திதி ஆகும்.
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். பெருமாளுக்கு துளசி சார்த்தி வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நாளும் ஏகாதசியைப் போலவே பெருமாளுக்கு உகந்த நாள் ஆகும். இன்றைய தினம் பெருமாளை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண ஆசிகளைப் பெற முடியும்.
ஏகாதசி தினம் விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக துவாதசி தினம் பாரணை செய்ய வேண்டும். அதாவது அன்றைய விருந்தில் கண்டிப்பாக அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை இடம்பெற வேண்டும். அரிசி சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொறியல், பொறிச்ச கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்கார அடிசல், பாயசம், நெய்யில் வறுத்த சுண்டக்காய், தயிர் என விரத சாப்பாட்டினை தயார் செய்ய வேண்டும். பிறகு அதனை பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
துவாதசி அன்று செய்யக் கூடியவை :
இந்த நாளில் நமது முன்னோர்கள் சாப்பிட்ட அமிர்தத்தை சந்திரன் வடிப்பார் என்பது நம்பிக்கை ஆகும் இந்த திதியில் உபநயனம், கல்யாணம், வீடு கட்டுதல், கிரஹப்பிரவேசம், பயணம் செய்தல் மற்றும் தோட்ட வேலைகளுக்கான கல்வி கற்க ஆரம்பிக்க இந்த திதி உகந்தது எனலாம்
