ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Rishabam Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)
ரிஷப ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்
பெரும் நன்மைகளைச் செய்பவரும், மங்களங்களை அளிப்பவரும், ரிஷப ராசிக்கு 8 மற்றும் 11 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக விளங்குபவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு, உங்கள் 10 மற்றும் 11 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசி அன்பர்களே! குருவின் இந்தப் பெயர்ச்சி, உங்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள், மற்றும் வேலை, தொழில், பொருளாதார நிலை போன்றவற்றில் எதிர்பாராத ஆதாயங்கள் போன்றவற்றை அளிக்கக் கூடும். எனினும், ஜூலை இறுதியிலிருந்து நவம்பர் மத்திய காலம் வரை குரு வக்ர கதியில் சஞ்சரிப்பது, உங்கள் முன்னேற்றத்தை மந்தப்படுத்தலாம்; நீங்கள் நினைத்த வேகத்தில் செயல்கள் நடைபெறாது போவது, உங்களுக்குச் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கலாம். இருப்பினும், பொதுவாக, குரு பெயர்ச்சி 2022 இல், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும், நல்ல செய்திகளும் வந்து சேரும் எனலாம்.
மேலும், சில ரிஷப ராசி அன்பர்களுக்கு செல்வமும், புகழும் குறுகிய காலத்திற்குக் கிடைக்கலாம். ஏப்ரல் 12, 2022 வரை, குரு பகவான் கும்ப ராசியில், அதாவது உங்கள் 10 ஆவது வீட்டில் சஞ்சரிக்கிறார் என்பதனால், வாழ்க்கையில் வளம் சேரும். அதற்குப் பின், அவர் மீன ராசிக்குச் செல்வது என்பது, நிம்மதி, ஆதாயம், வேலை, தொழில், பொருளாதாரம் ஆகியவற்றில் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அளிக்கக்கூடும். எனினும், எது நடந்தாலும், அது மெதுவாகவும், படிப்படியாகவும் தான் நடைபெறும் எனலாம்.

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
வேலை, தொழில்
2022 இன் முதல் 6 மாதங்களில், உங்கள் தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படக்கூடும். வேலையில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கூடக் கிடைக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக் கூடும். மேலும், பளிங்குக் கற்கள், கரி, சிமெண்ட், மரம், மர சாமான்கள், அழகு சாதனங்கள் தொடர்பான தொழில் அல்லது வியாபாரங்களும், 2022 இல் சிறந்து விளங்கும். இதுபோலவே, மருந்து தயாரிக்கும் தொழில் அல்லது மருத்துவத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், அசாதாரணமான வெற்றியும், வளமும், வளர்ச்சியும் ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர, ஊடகம் அல்லது பொழுதுபோக்குத் துறைகளும் பெருவெற்றி காணக்கூடும். சிலர், விளையாட்டுத் துறையிலும் பிரகாசிக்கும் வாய்ப்புள்ளது.
காதல், உறவுகள்
குடும்பத்தினர், உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்களுடன் நல்ல உறவு நிலவும். புதிய நட்பு, தொடர்பு போன்றவையும் ஆதாயம் தரக்கூடும். திருமண வயதில் உள்ள ரிஷப ராசி அன்பர்கள், 2022 ஆம் ஆண்டு, குறிப்பாக அதன் முதல் பாதியில், தங்கள் உள்ளம் கவர்ந்தவர்களைச் சந்தித்துக், காதல் வயப்படும் வாய்ப்புள்ளது. எனினும், 2022 இரண்டாம் பாதியில், நீங்கள், காதல் வாழ்க்கையில் சில சோகங்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். துணையுடன் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் கூட ஏற்படலாம். காதலர் அல்லது காதலியுடனான குறுகிய காலப் பிரிவும், உங்கள் நிம்மதியைக் குலைத்து விடலாம். எனினும், இவர்களில் பலர், ஆண்டின் இறுதி மாதங்களில் சமாதானமாகி, ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
திருமண வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில், உங்கள் திருமண வாழ்க்கை, சில ஏற்ற, இறக்கங்களுடன் நன்றாகவே காணப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், நீங்கள், பல பிரத்யேகமான, நெருக்கமான தருணங்களை அனுபவிப்பீர்கள். பொதுவாக, துணை அல்லது துணைவரின் ஆதரவுடன், உங்கள் மணவாழ்க்கை அமைதியாகச் செல்லக்கூடும்; இருப்பினும், சில நேரங்களில், உங்கள் எண்ணம், தினசரி வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் அவர் ஒத்துப்போகாமல் இருக்கலாம்; இதனால் அவரது ஆதரவு உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். எனினும், குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும்; சிலருக்குக் குழந்த பிறக்கும் வாய்ப்பும் உள்ளது; எனவே, நீங்கக் சந்தோஷமாக இருக்கலாம். கணவர் அல்லது மனைவி முலம், 2022 இல் உங்களுக்கு உடலளவில் திருப்தியும், மனதளவில் சந்தோஷமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், குடும்ப பாரங்களைச் சுமப்பதிலும், தினசரிக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் பங்கு கொள்ளும் வாழ்க்கைத் துணை, உங்கள் தொழிலிலும், உங்களுக்குத் துணைபுரிவார் என எதிர்பார்க்கலாம்.
நிதி
இந்த வருடம் முழுவதும், சீரான பணவரவு இருந்தாலும், தேவையற்ற சில செலவுகளும் ஏற்படக்கூடும். எனவே, எதிலும் அளவுக்கு அதிகமாக ஈடுபடாமல், மிதமாக நடந்து கொள்ளவும். 2022 துவக்கத்தில், உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் ஆதாயம் தரலாம். சுயதொழில், வாணிபம் போன்றவையும் வெற்றியும், செல்வமும் அளிக்கக்கூடும். சிலருக்கு, அங்கீகாரமும், மக்களிடம் நன்மதிப்பும் குறுகிய காலத்திற்குக் கிடைக்கலாம். தவிர உங்கள் வாழ்க்கை முறையும், நன்மதிப்பும் மேம்படக்கூடும். மொத்தத்தில், 2022 இல் நீங்கள், எந்தவித பணத் தட்டுப்பாடும் இன்றி, செல்வச் செழிப்பை அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.
கல்வி
மாணவர்களின் கல்வி சிறப்பாகக் காணப்படுகிறது. சிலருக்கு வெளிநாடுகளில் கல்வி உதவித்தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மனதை ஒருமுகப்படுத்திப் படிக்கும் திறன் காரணமாக, நீங்கள், தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். தவிர, போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றிலும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்கக் கூடும். சில மாணவர்களுக்கு, அவர்கள் கல்லூரிகள் மூலம், பெரிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் விளையாட்டு, விவாதம், பாடதிட்டம் சாரா போட்டிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கக்கூடும்.
ஆரோக்கியம்
உங்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் முந்தைய ஆண்டுகளை விட மேம்பட்டு, நன்றாக இருக்கும். இந்த 2022 ஆம் ஆண்டு, உங்களுக்கு ஒரு புதிய ஆற்றலைக் தரும்; நீண்ட நாள் நோயினால் அவதிப்படும் சிலருக்கு, இது தொடர்பாக குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். ஆனால், சிலர் சளி, ஜுரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும், அது சாதாரணமாக குணமாகிவிடக் கூடும். அது போலவே, நுரையீரல், இதயம் தொடர்பான பிரச்சனைகள் சிலருக்கு ஏற்பட்டாலும், அவை மிகக் குறுகிய காலத்திற்கே இருக்கக்கூடும். மேலும், இரத்தம், நரம்பு தொடர்பான பாதிப்புகளிலிருந்தும், ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு, நிவாரணம் கிடைக்கலாம். இது போல, விபத்துக்கள் மூலம் சிலருக்கு சாதாரண காயம் ஏற்பட்டாலும், அவர்கள் விரைவில் குணமடைவார்கள் எனலாம்.
பரிகாரங்கள்
- தினமும் தயிர் உண்ணவும்
- தினமும் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளவும்
- செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிஸா பக்திப் பாடலை பாராயணம் செய்யவும்
- வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானை வழிபடவும்
- செவ்வாய்க்கிழமைகளில் ஹனுமான் ஆலயம் சென்று, ஆரத்தி வழிபாடு செய்யவும்.











