AstroVed Menu
AstroVed
search
search

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Mesham Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

dateFebruary 25, 2022

மேஷ ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்

பெரும் நன்மைகளைச் செய்பவரும், மங்களங்களை அளிப்பவரும், மேஷ ராசிக்கு 9 மற்றும் 12 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக விளங்குபவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு, கும்பம் மற்றும் மீன ராசிகளில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசி அன்பர்களே! வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்குப் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு, ஏப்ரல் 12, 2022 க்குப் பிறகு உங்களது 12 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். ஒரே வருடத்தில் நடைபெறும் இந்த இரண்டு குரு பெயர்ச்சிகளும், நீங்கள், செல்வத்தை ஈட்டுவதற்கும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். அதிர்ஷ்டமும் உங்களுக்குத் துணை புரிய, புது தொடர்புகளும், புது நண்பர்களும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். மேலும், உங்கள் கடின முயற்சியும் பலன் தர, உங்கள் சில ஆசைகளும், லட்சியங்களும் கூட, குரு பெயர்ச்சி 2022 இல் நிறைவேறும் வாய்ப்புள்ளது. சுகமும், சந்தோஷமும் மேஷ ராசி அன்பர்களின் வாழ்வில் இந்த ஆண்டு நிறைந்திருக்கக் கூடும்.  

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

வேலை, தொழில்

வேலை, தொழில் போன்றவை இந்த ஆண்டில், குறிப்பாக 2022 இன் முதல் அரையாண்டில், நன்றாகவே இருக்கும். ஆயினும், ஜூலை இறுதி முதல் நவம்பர் மத்திய காலம் வரை குரு வக்கிர கதி அடைவதால், இவை மந்தமாகக் கூடும். இருப்பினும், பொதுவாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் ஆகியவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வெளி நாடு அல்லது நகரத்தில் இருக்கும் சிலருக்கு, விரைவில் வெற்றி கிடைக்கக் கூடும். அவர்களின் சாமர்த்தியமான அணுகுமுறை காரணமாக, மேஷ ராசி அன்பர்கள், எந்தப் பணியையும் எளிதாகச் செய்து முடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள், உங்களது சில இலக்குகளை எட்டக் கூடும், லட்சியங்களையும் அடையக் கூடும். அதே நேரம், தொழில் அல்லது வணிகம் செய்பவர்கள் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கக் கூடும்; எனினும், பொதுவாக இந்த 2022, அவர்களுக்கு ஒரு லாபகரமான ஆண்டாகவே இருக்கும். 

காதல், உறவுகள்

திருமண வயதில் உள்ளவர்கள் சிலரது வாழ்க்கையில், இந்த 2022 இன் முன்பகுதியில், வசிகரமும், கவர்ச்சயும் கொண்டவர்கள் இணையும் வாய்ப்புள்ளது. எனினும், காதல் முறிவு, அல்லது நிறைவேறாத ரகசியக் காதல் போன்றவையும் ஏற்படக்கூடும். சிலர் கள்ளக்காதல் போன்றவைகளிலும் ஈடுபடக்கூடும். இதுபோல, திருமணமான சிலருக்குத், தங்கள் துணையுடன், கருத்து வேறுபாடுகள், பேச்சு வார்த்தை இன்மை, பிரிவுகள் போன்றவையும், குறுகிய காலத்திற்கு ஏற்படலாம். இருப்பினும், சிலருக்குத், தங்கள் உள்ளம் கவர்ந்தவருடன் திருமணம் ஆகலாம்; வளமும், சந்தோஷமும் நிறைந்த மணவாழ்க்கையும் அமையலாம். 

தவிர, நண்பர்கள், உறவினர்களுடன் உங்கள் உறவுநிலை நன்றாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் பண உதவியும் கிடைக்கலாம். பணியிடத்திலும் இனிய, இணக்கமான சூழ்நிலை நிலவக்கூடும்; உங்கள் உடன் பணிபுரிபவர்களும் ஆதரவு அளிக்கக்கூடும்.     

திருமண வாழ்க்கை

வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும். துணையினால் நீங்கள் திருப்தியும், சந்தோஷமும் அடைவீர்கள். சிலருக்குக் குழந்தையும் பிறக்கக் கூடும். மண வாழ்க்கை மிக இணக்கமாகவும் அமையக்கூடும்; சிலர் துணையுடன் உல்லாசப் பயணம் சென்று மகிழவும் வாய்ப்புள்ளது. உங்கள் தொழில், வேலை, வணிகம் மற்றும் நிதி விஷயங்களிலும் கூட, உங்கள் துணை அல்லது துணைவர் உங்களுடன் இணைபிரியாமல் இருந்து, உங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடும். குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் சிலருக்கு, இது தொடர்பாக 2022 இல் இனிய செய்தி வந்து சேரும் வாய்ப்புள்ளது.  

நிதி

2022 முதல் பாதியில், பல இடங்களிலிருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கலாம். எனவே, மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த நேரத்தில், வருமான உயர்வும், வாழ்க்கையில் முன்னேற்றமும், வளமும் ஏற்படக்கூடும். சேமிப்பும் அதிகரிக்கக்கூடும். ஆனால், ஆண்டின் இரண்டாம் பாதி, அதிக செல்வத்துடன், அதிக செலவையும் கொண்டு வரலாம். எனினும், இந்த செலவுகளெல்லாம் நல்ல விஷயங்களுக்காகவோ அல்லது குடும்ப நன்மைக்காகவோ தான் இருக்கும் எனலாம். மேலும், இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கை முறை, கௌரவம் அகியவையும் மேம்படக்கூடும். ஏறக்குறைய, ஆண்டு முழுவதும், உங்களிடம் செல்வம் சேர்ந்து கொண்டே இருந்தாலும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும், இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 

கல்வி

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள், வெற்றி காண அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சில மாணவர்களுக்குப், படிப்பில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம். எனினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தங்கள் அறிவு, படைப்பாற்றல் ஆகியவற்றின் மூலம் சவால்களை எதிர்கொண்டு வெல்லும் வாய்ப்புள்ளது. மேலும், சில மேஷ ராசி மாணவர்கள், இந்த 2022 இல், தங்கள் பள்ளி, கல்லூரிகளில் பேச்சு அல்லது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது. எனினும், கவனச் சிதறல் காரணமாக சில மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படலாம். ஆனால், உயர்கல்வி மாணவர்கள், அல்லது வெளி நாட்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்தபடி, அனைத்தும் அமையும் வாய்ப்புள்ளது. 

ஆரோக்கியம்  

2022 ஆம் ஆண்டில், மேஷ ராசி அன்பர்களின் ஆரோக்கியம், பொதுவாக நன்றாகவே இருக்கும். ஆனால், உங்கள் கணவர், மனைவி, அல்லது குடும்ப உறுப்பினர் எவராவது நோய்வாய்ப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், குறுகிய காலத்திற்கு, உங்கள் மன அமைதி பாதிக்கப்படலாம். தவிர, சிலர், அஜீரணம், வாயுத் தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்படக் கூடும். மேலும், சிலரை, கல்லீரல், இதயம் தொடர்பான உபாதைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், அவர்கள் தங்கள் உணவு, கொழுப்பு சத்து ஆகியவை குறித்து கவனமாக இருப்பது அவசியம். எனினும், எந்த நோய் தாக்கினாலும், அதிலிருந்து, நீங்களும், குடும்பத்தினரும் விரைவிலேயே குணமடைந்து விடுவீர்கள் எனலாம். தியானம் செய்வது உங்கள் மனதை, அமைதியாகவும், வலிமையாகவும் வைக்க உதவும்.  

பரிகாரங்கள்

  • வியாழக் கிழமைகளில் மஞ்சள் ஆடை அணியவும்; நெற்றியில் குங்குமத் திலகம் வைத்துக் கொள்ளவும்
  • வியாழக் கிழமைகளில், ஏழைகளுக்குப், பயிறு, பருப்பு தானம் செய்யவும்
  • வியாழக் கிழமைகளில், விஷ்ணு அல்லது சிவன் ஆலயங்களுக்குச் சென்று, ஆரத்தி வழிபாடு செய்யவும்
  • தினமும், ஹனுமான் சாலிஸா பக்திப் பாடலை பாராயணம் செய்யவும்            

banner

Leave a Reply