AstroVed Menu
AstroVed
search
search

ஸ்ரீ ராம நவமி விரதம் பூஜை வழிமுறை மற்றும் மந்திரங்கள்

dateMarch 15, 2023

ஸ்ரீ ராம நவமி

“ஒரு காலே சரண்”” என்னை அடைகின்றார்க்கும், “உன் அடிமை என்று ஒரு கால் சொன்னவர்க்கும் உயர் கதி அளித்துக் காக்கும் உத்தமன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி. அந்த ராமச்சந்திர மூர்த்தி இந்தப் பூ உலகில் அவதரித்த நாளே ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்த தசரத மகா சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்து பிள்ளை வரம் பெற்றார். தசரத மகா ராஜாவுக்கும் முதல் மனைவியான கௌசல்யா மாதாவுக்கும் மகனாக சித்திரை சுக்ல பட்ச (வளர்பிறை) நவமியில் புனர்பூசம் நடசத்திரத்தில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். அவர் அவதரித்த இந்த நாளே இன்றளவும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி  விழா, ராம நவமிக்கு பத்து நாட்கள் முன்பாகவே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.   பெரும்பாலும் ஆலயங்களில் ராமாயணத்தை ஒன்பது நாட்கள் சொற்பொழிவுகளாக ஆற்றி நவமி அன்று பட்டாபிஷேக விழா நடை பெறும். பத்து நாட்களும் ஆலயம் சென்று நாம் வழிபடுவது உத்தமம்

ஸ்ரீ ராம நவமி பூஜை வழிமுறை  

ராம நவமி விரத பூஜையை நாம் வீட்டிலும் மேற்கொள்ளலாம்.  அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து வீட்டையும் நம்மையும் தூய்மை  செய்து கொள்ள வேண்டும். தூய ஆடைகளை அணிய வேண்டும். ஸ்ரீ ராமர் திரு உருவப்   படம் மற்றும் ராமர் சக்கரம் அல்லது ராமர் ஜாதகம் வைத்து வழிபடலாம்.   படத்திற்கு மஞ்சள் குங்குமம் அட்சதை சாற்ற வேண்டும். வாசமுள்ள மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து அணிவிக்கலாம். துளசி மாலை சிறப்பு வாய்ந்தது. பானகம், நீர் மோர், கோசுமல்லி, சக்கரைப் பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

ஸ்ரீ ராம நவமி விரதம்

அன்று முழுவதும் விரதம் இருக்கலாம்.முடியாதவர்கள் ஒரு வேளை உணவு உண்ணலாம். ராம நாமம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ராமபினானுடைய புகழைப் பாட உபயோகமாக இருப்பது ஸ்ரீ நாம ராமாயணம்.  விரதம் அனுஷ்டித்து இதனைப் பாராயணம் செய்தல வேண்டும். இதில் ஒவ்வொரு நாமத்தின் முடிவிலும் ராம நாமமும் ராமாயணக் கதையும் வருவதால் இராமாயண பாராயனமும் நாம ஜெபமும் ஒருங்கே செய்த திருப்தி ஏற்படும். இதனைப் பாராயணம் செய்து நமது சரீர வியாதி மற்றும் மனோ வியாதியை நாம் தீர்த்துக் கொள்ளலாம். ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

அன்னவர்க்கே சரணங்களே என்பதற்கிணங்க நாமும் ராம பிரானைச் சரணடைந்து நற்பயன் பெறுவோமாக

ராம நாம தாரக மந்திரம்

ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராமா

ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்
 

ராம தியான மந்திரம்

ஓம் ஆபதாம்பஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் புயோ புயோ நமாம்யஹம்

ஸ்ரீ ராமர் துதி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும்  சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராமஎன் றிரண்டேழுத்தினால்

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும் 

நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய  வாகை

சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்தி ரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்

செம்மை சேர்  நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.

 

ஸ்ரீ ராமா நாம ராமாயணம்

1. பால காண்டம்

1. சுந்த ப்ரஹ்ம பராத்பர ராம

2. காலாத்மக பரமேச்வர ராம

3. சேஷதல்ய ஸுகநித்ரித ராம

4. ப்ரஹ்மா த்யமர ப்ரார்த தித ராம

5. சண்டகிரணகுல மண்டந ராம

6. ஸ்ரீ மத் தசரத நந்தன ராம

7. கௌசல்யா ஸுகவர்த்த்ந ராம

8. விச்வாமித்ர ப்ரியதன ராம

9. கோர தாடகா காதக ராம

10. மாரீ சாதி நிபாதக ராம

11. கௌசிக மக ஸம்ரக்ஷக ராம

12. ஸ்ரீ மத ஹல்யோத்தாரக ராம

13. கௌதம முனி ஸம்பூஜித ராம

14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம

15. நாவிகதாவித ம்ருதுபத ராம

16. மிதிலாபுரஜன மோஹக ராம

17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம

18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம

19. ஸீதார்ப்பித வரமாலிக ராம

20. க்ருத வைவாஹிக கௌதுக ராம

21. பார்க்கவ தர்ப்ப விநாசக ராம

22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம

 

2. அயோத்யா காண்டம்

23. அகணித குணகண பூஷித ராம

24. அவநீத நயா காமித ராம

25. ராகாசந்த்ர ஸமாநந ராம

26. பித்ரு வாக்கியாச்ரித காநந ராம

27. ப்ரியகுஹ விநிவேதித பத ராம

28. தத்க்ஷõலித நிஜ ம்ருதுபத ராம

29. பரத்வாஜமுகத நந்தக ராம

30. சித்ரகூடாத்ரி நிகேத ந ராம

31. தசரத ஸந்தத சிந்தித ராம

32. கைகேயி தநயார்த்தித ராம

33. விரசித நிஜ பித்ருகர்மக ராம

34. பரதார்ப்பித நிஜ பாதுசு ராம

 

3. ஆரண்ய காண்டம்

35. தண்டகாவந ஜந பாவன ராம

36. துஷ்ட விராத விநாசன ராம

37. சரபங்க ஸுதீஷ்ண அர்ச்சித ராம

38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம

39. க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம

40. பஞ்சவடி தடஸுஸதிதி ராம

41. சூர்ப்பணகார்த்தி விதாயக ராம

42. கரதூக்ஷணமுக ஸூதக ராம

43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம

44. மாரி சார்த்தி க்ருதாசுக ராம

45. விநஷ்ட ஸீதாந்வேஷக ராம

46. க்ருத்ராதிப கதி தாயக ரா

47. சபரீ தத்த பலாசந ராம

48. கபந்த பாஹுச் சேதந ராம

 

4. கிஷ்கிந்தா காண்டம்

49. ஹநுமத் ஸேவித நிபத ராம

50. நத ஸுக்ரீ வாபீஷ்டத ராம

51. கர்வித வாலி ஸம்ஹாரக ராம

52. வாநர தூத ப்ரேஷக ராம

53. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம

 

 

5. ஸுந்தர காண்டம்

54. கபிவர ஸ்ந்தத ஸம்ஸ்ம்ருத ராம

55. தத்கதி விக்ந த்வம்ஸக ராம

56. ஸீதா ப்ராணா தாரக ராம

57. துஷ்ட தசா நந தூஷித ராம

58. சிஷ்ட ஹநூமத் பூஷித ராம

59. ஸீதா வேதித காகாவந ராம

60. க்ருத சூடாமணி தர்சந ராம

61. கபிவர வசனா ச்வாஸித ராம

 

6. யுத்த காண்டம்

62. ராவண நிதந ப்ரஸ்தித ராம

63. வா நர ஸைந்ய ஸமாவ்ருத ராம

64. சோஷித ஸரி தீசார்த்தித ராம

65. விபீஷணாபய தாயக ராம

66. பர்வத ஸேது நிபந்தக ராம

67. கும்பகர்ண சிரச்சேத ராம

68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம

69. அஹிமஹி ராவண சாரண ராம

70. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம

71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம

72. கஸ்தித தசரத் வீக்ஷித ராம

73. ஸீதா தர்சன மோதித ராம

74. அபிஷிக்த விபீஸிணநத ராம

75. புஷ்பக யாநா ரோஹண ராம

76. பரத்வாஜாபிநிஷேவண ராம

77. பரதப்ராண ப்ரியகர ராம

78. ஸாகேதபுரீ பூஷண ராம

79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம

80. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம

81. பட்டாபிஷேக லங்க்ருத ராம

82. பார்த்திவ குல ஸம்மாநித ராம

83. விபிஷணார்ப்பித ரங்கக ராம

84. கீசகுலா நுகர்ஹகர ராம

85. ஸகலஜீவ ஸம்ரக்ஷக ராம

86. ஸம்ஸ்த லோகா தாரக ராம

 

7. உத்தர காண்டம்

87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம

88. விச்ருத தசகண்டோத்பவ ராம

89. ஸீதாலிங்க நிர்வ்ருத ராம

90. நீதிஸுரக்ஷித ஜநபத ராம

91. விபிந த்யாஜித ஜநகஜ ராம

92. காரித லவணாஸுரவத ராம

93. ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம

94. ஸ்வதநய குசலவ நந்தித ராம

95. அச்வமேத க்ரது தீக்ஷித ராம

96. காலாவேதித ஸுரபத ராம

97. ஆயோத்யகஜந முக்தித ராம

98. விதமுக விபுதா நந்தக ராம

99. தோஜேரமய நிஜரூபக ராம

100. ஸம்ஸருதி பந்த விமோசக ராம

101. தர்ம ஸ்தாபந தத்பர ராம

102. பக்தி பாராயண முக்தித ராம

103. ஸர்வ சராசர பாலக ராம

104. ஸர்வ பவாமயவாரக ராம

105. வைகுண்டாலய ஸம்ஸ்துத ராம

106. நித்யாநந்த பதஸ்தித ராம

107. ராம ராம ஜய ராஜா ராம

108. ராம ராம ஜய ஸீதா ராம.

மங்களம்

பயஹர மங்கள தசரத ராம – ஜெய ஜெய மங்கள சீதா ராம

மங்கள கர ஜெய மங்கள ராம- சங்கத சுபவிப வோதய ராம

ஆனந்தாம்ருத வர்ஷாக ராம ஆஸ்ரித வத்சல ஜெய ஜெய ராம

ரகுபதி ராகவ ராஜா ராம பதித பாவன சீதா ராம

ஸ்ரீ நாம ராமாயணம் சம்பூர்ணம்

 


banner

Leave a Reply