AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

Dhanusu Rahu Ketu Peyarchi Palangal | தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 -2022

dateMay 6, 2020

தனுசு ராசி ராகு  கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022:

ராகு கேது பெயர்ச்சி 2020:

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். தனுசு ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும், கேது பன்னிரண்டாம் விட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஆறாம் வீடு என்பது, தன்னலமற்ற சேவை, அன்றாட அலுவலகச் செயல்பாடுகள், போட்டிகள், நோய், கடன், எதிரி போன்றவற்றையும், பன்னிரண்டாம் வீடு மோட்சம் அல்லது ஆன்மீக விடுதலை, தொண்டு, முதலீடுகள், வெளிநாட்டில் குடியேறுவது, செலவுகள், இழப்புகள் போன்றவற்றையும் குறிக்கும். 

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2020 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.  எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.

            
தனுசு ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது தனுசு ராசிக்கு ஆறாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு காலமாக இருக்கும். நீங்கள் உங்கள் முழுத் திறமையுடன் பணியாற்றி, அதிக உற்பத்தித் திறனை ஈட்டுவீர்கள். இது, நீங்கள் இன்னும் ஆர்வமுடனும் பணியாற்ற உதவும். எனவே, இப்போது உங்கள் தொழிலிலும், பணியிலும் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், பணியிடத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்களது சரியான முடிவு எடுக்கும் திறன், இந்த சவால்களை நீங்கள் திறமையாகக் கையாள உதவும். இது போன்ற உங்கள் செயல்திறன் மற்றும் சாதனைகளுக்காக, வேலையில் நீங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் போட்டிகளிலும் வெற்றி பெற்று விருதுகளைப் பெறக்கூடும். இப்போது எதிரிகளையோ அல்லது போட்டியாளர்களையோ நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், அவர்களையும் வென்று வெற்றி நடைபோடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படும் வாய்ப்பில்லை. தவிர, இப்பொழுது உங்கள் அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நீங்கள் அவற்றை அடைத்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் அதே நேரம், நீங்கள் சில புதிய கடன்களையும் வாங்க நேரிடலாம். மேலும், இந்தக் காலகட்டத்தில், நீங்கள் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்றைச் சரி செய்து, நல்லிணக்கம் காணவும் இது சரியான நேரமாகும். எனவே, இந்தப் பெயர்ச்சி, வாழ்க்கையின் பல துறைகளிலும் உங்களுக்குச் சாதகமாக அமையும் எனலாம். 

கேது உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் தனுசு ராசிக்குப் பன்னிரண்டாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, இவர் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டி, உங்களை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடும். எனவே, ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கும், மோட்சம், வீடுப்பேறு ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர்ச்சி, அவர்களது ஆன்மீக நோக்கங்களுக்குச் சாதகமாக அமையும். இருப்பினும், நன்கொடை அளிப்பது, தொண்டு அல்லது பரோபகாரம் செய்வது போன்றவற்றில், அளவிற்கு அதிகமாக ஈடுபட வேண்டாம். ஏனெனில், பிறருக்கு உதவுவதற்காக உங்கள் பணத்தை அதிகம் செலவு செய்தால், பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது, பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம். எனவே, ‘தனக்கு மிஞ்சி தான் தான தருமம்’ என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்பது நல்லது. எனினும், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்தக் கால கட்டம், சாதகமாக இருக்கும். எனவே உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், உங்களில் சிலருக்கு இப்பொழுது, தூக்கமின்மைப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர, இந்த நேரத்தில், பொதுவாக உங்கள் மனதில் ஏதோ ஒரு வகையான விரக்தி மனப்பான்மை தோன்றலாம். இது உங்கள் ஆன்மீக வேட்கையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல, உங்கள் ஆன்மீக நாட்டத்தையும் ஒரு வரையறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால், குடும்பம் மற்றும் சமூகத்தின் முன் உங்கள் மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 
    அர்ச்சனை
    அபிஷேகம்
    ஹோமம்
    பூஜை
ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள். 

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

    கீழ்க்கண்ட ராகு சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ராஹுவே தேவயே சாந்திம், ராஹுவே கிருபாயே கரோதி
ராகுவே சமாயே அபிலாஷத் ஓம் ராஹுவே நமோ நமஹ’
    கீழ்க்கண்ட கேது சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் கேதும் கர்னவான் கேதவே பேஷோமயம் அபேஷசே, சமுஷ்த்விராஜயதஹ’
    மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களை தொடர்ந்து 21 நாட்கள் பாராயணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும் 
    உங்கள் ஆடை மற்றும் அணிகலன்களில் சிவப்பு நிறத்தைத் தவிர்க்கவும்


banner

Leave a Reply